இடுகைகள்

ஓவியரின் ஞானம்

முன்னொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு கண்ணும், ஒரு காலும்தான் இருந்தன.  இந்தக் குறைபாடுகள் இருந்தும், அவர் ஒரு திறமையான; இரக்கமான; புத்திசாலித்தனமான அரசராக ஆட்சி புரிந்தார். அந்த அரசரது ஆட்சியின் கீழ் அவரது மக்கள் ஆனந்தமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.      ஒரு நாள் அரசர் தன் அரண்மனை நடை கூடத்தின் வழியாக நடந்து கொண்டு இருந்தார். திடீரென்று, சுவரில் மாட்டி இருந்த படங்களின் மீது அவரது பார்வை விழுந்தது. அவை அவரது முன்னோர்களின் படங்கள் ஆகும். தன்னைப் போல, தனக்குப் பின் வருகின்ற சந்ததியினர்களும் இதே போல் நடக்கும் போது, தம் முன்னோர்களின் படங்களைப் பார்த்து ஞாபகப்படுத்திக் கொள்வார்கள். இந்த அரசரது படம் இதுவரை அங்கு போடப் படவில்லை.  அவரது குறைபாடுகளால், அதாவது ஒரு கண், ஒரு கால் இல்லாத குறைபாடுள்ள அவரது உருவத்தை போடுவது பற்றி அரசர் தயக்கத்தோடு இருந்தார். ஆனால் அன்று தன்னுடைய படத்தையும் போட வேண்டும் என்று, ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தார்.      அடுத்த நாள் அந்த நாட்டில் உள்ள சிறந்த ஓவியர்கள் அனைவரையும் தன் அவைக்கு வரவழைத்தார். அரண்மனை சுவரில் என்னுடைய அழகான படத்தை போ

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பஞ்ச பிரகாரத்திருவிழா பத்தாம் நாள் வெள்ளி சப்பரத்தில் அம்பாள் புறப்பட்டு திருவீதி உலா கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

படம்
திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பஞ்ச பிரகாரத்திருவிழா பத்தாம் நாள் வெள்ளி சப்பரத்தில் அம்பாள் புறப்பட்டு திருவீதி உலா கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💥🙏🙏🙏🙏💥பஞ்ச பூதங்களின் தலைவியான அன்னை அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் வைகாசி பஞ்சப் பிரகார விழாவில் வெண்ணிற பட்டுடுத்தி வெள்ளி ரதமேறி வீதி உலா வந்தருளினார்,இன்று பஞ்ச பிரகாரவிழாவின் முக்கிய சிறப்பான நாளில் வெண்ணிற பாவாடை அணிந்து  சிவ ரூபமாகவும், சக்தி பஞ்சாரியாகவும் வலம் வந்து அருள் காட்சி கொடுத்தார்.

சித்தர்களும், சமாதி அடைந்த தலங்களும்

🙏          1. திருமூலர் - சிதம்பரம். 2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி. 3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில். 4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர். 5. கொங்கணர் - திருப்பதி, திருமலை 6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால் 7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை. 8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம். 9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில். 10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு) 11. கோரக்கர் – பேரூர். 12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம். 13. சிவவாக்கியர் - கும்பகோணம். 14. உரோமரிசி - திருக்கயிலை 15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர். 16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை 17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை 18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம். 19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில். 20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம். 21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம். 22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர். 23. இராமதேவ சித்தர் - அழகர் மலை 24. மார்க்கண்டேயர் - கருவை நல்ல

உணர்வு

அமெரிக்காவில் மசேச்சுசெட்ஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள டெக்ஸ்பரி இன்ஸ்டிடியூட், ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் புகலிடம் தரும் இடம் ஆகும்.   ஆன்னி என்ற இளம் சிறுமி அவளது அம்மாவின் மறைவிற்குப் பிறகு, இந்தப் புகலிடத்திற்கு அனுப்பப்படுகிறாள். அவளது நடத்தை மிகவும் சீர்கேடான நிலையில் இருந்தது. அவளுக்கு, யாருமே எதுவுமே செய்ய முடியாத நிலைமைதான் இருந்தது. அவள் அருகில் யார் சென்றாலும், அவர்களை கடித்து வைப்பாள்; சீறிப் பாய்வாள்; அவர்கள் கொடுத்த உணவை அவர்கள் மீதே வீசி எறிவாள். டாக்டர்களும், நர்சுகளும் கூட, அவள் அருகில் சென்று அவளைப் பரிசோதிக்க முடியாது. யாராவது அருகில் சென்றால், அவர்கள் மீது எச்சில் உமிழ்ந்து விடுவாள்; கீறி விடுவாள். அவளது இந்த மோசமான செயல்களால், அவளை அந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் இருக்கும் ஒரு சிறைச்சாலை மாதிரியான சிறிய அறை ஒன்றில் அடைத்து வைத்தார்கள்.   அங்கே வேலை செய்யும் ஒரு வயதான பெண் மணி இவை அனைத்தையும் கவனித்தாள். இந்த சிறுமிக்காக மிகவும் வருத்தப்பட்டாள். ஆன்னி, அந்த சிறையில் அடைபட்டுக் கிடப்பது அவளுக்கு வருத்தமாக இருந்தது. ஆன்னிக்கு உதவி செய்ய விரும்

ஒரு ஆட்டு மந்தை

படம்
முன்னொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார்.  அந்த அரசர் தன் அமைச்சரிடம், “செம்மறி ஆடுகளின் பிறப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  அவை மந்தை மந்தையாய் இருக்கின்றன.  அதே நேரத்தில் நாய்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. ஏன் இப்படி?” என்று கேட்டார்.               அமைச்சர் அரசரிடம், “எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள்.  நாளை இதற்கு நான் பதில் கூறுகிறேன் என்றார்”. அன்று மாலை அமைச்சர் இரண்டு அறைகளை தயார் செய்தார்.    அரசரும் அதைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.  ஒரு அறையில் 20 செம்மறி ஆடுகளை வைத்து, அந்த அறையின் நடுவே ஒரு கூடை நிறைய ஆடுகளுக்கு உரிய உணவை அதில் அமைச்சர் வைத்தார்.  பின்பு, அந்த அறையை பூட்டி விட்டார்.             அடுத்த அறையில் 20 நாய்களை வைத்து, அந்த அறையிலும் ஒரு கூடை நிறைய ரொட்டிகளை உணவாக வைத்தார்.  பிறகு அந்த அறையையும் பூட்டி விட்டார்.             அடுத்த நாள் காலை அமைச்சர் அரசருடன் அங்கு வந்தார்.  முதல் அறையின் கதவை திறந்தார்.  ஆடுகள் அனைத்தும் ஒன்றன் மீது ஒன்றாக தலை சாய்த்து வசதியாகத் தூங்கிக் கொண்டு இருந்தன.    உணவு வைத்திருந்த கூடை காலியாக இருந

ஒரு அறிஞனின் சோதனை.

படம்
மகாகவி காளிதாசரைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து இருக்கிறோம்.   அவரது காலத்தில் அவர் ஒரு சிறந்த புலவர்; கவிஞர்; மிகச் சிறந்த அறிஞர்.  அவரைப் பற்றிய கதைதான் இது.       ஒரு முறை காளிதாசர் மிகப் பெரிய காட்டின் வழியாக நடந்து கொண்டு இருந்தார். அந்தக் காட்டைக் கடக்க வெகு நேரம் ஆயிற்று.    சூரியன் மிகக் கடுமையாக அனலை வீசிக்கொண்டு இருந்தது.  வெயிலின் கடுமை அவரது சக்தி முழுவதையுமே உறிஞ்சி எடுப்பது போல இருந்தது.  கதிரவனின் அனல் கதிர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கிய போதும், அவர் அதை குறையாக எண்ணவில்லை;  அவரால் அதை எதுவும் செய்ய இயலாது.   தண்ணீர் தாகம் அவரைப் பாதித்தது.     தாங்க முடியாத அளவுக்கு அவருக்கு தாகம் எடுத்த போது,  தண்ணீர் குடத்தோடு ஒரு பெண் மணி அவரைக்  கடந்து செல்வதைப் பார்த்தார்.  அவரது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் ஆனது.   அந்த பெண்ணை நோக்கி,  வேகமாக நடந்து சென்றார்.  “அம்மா!  இந்த வெயில் என்னை மிகவும் கடுமையாக வாட்டுகிறது;  தாங்க முடியாத தாகத்தால் என் தொண்டையில், முள் குத்துவது போல் உணர்கிறேன்.  தயவு செய்து என் மீது இரக்கம் காட்டி,  கொஞ்சம் தண்ணீர், தா” என கேட்டார்.  அந்த பெ

அறம் மற்றும் கடமை

முன்னொரு காலத்தில் நல்ல குணமும் ஒழுக்கமும் நிறைந்த மனிதன் ஒருவன், தன் மனைவி குழந்தைகளோடு புனித யாத்திரை மேற்கொண்டார்.  பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.  புனித யாத்திரையை அவர் மேற்கொண்ட காலமோ, கடுமையான கோடை காலம் ஆகும்.  பல மைல்கள் தூரம் கடந்த பிறகு,  அவர்கள் கொண்டு வந்து இருந்த தண்ணீரும் காலியாகி விட்டது.  குடும்பமே தண்ணீர் தாகத்தால் வருந்தியது.  கடுங்கோடை என்பதால்  வழியில் எங்குமே தண்ணீர் இல்லை.  குழந்தைகள் தாகத்தால் தவித்தனர்.  இந்த மனிதனுக்கோ எப்படி இந்த பிரச்சனையைத் தீர்ப்பது என்று தெரியாமல் தவித்தார்.  எந்த வழியும் தெரியாமல்,  கடவுளிடம் முறையிட ஆரம்பித்தார்.  கடவுளிடம்,  ஓ பிரபுவே!  தயவு செய்து இந்த சூழ்நிலையை சமாளிக்க நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார்.  சிறிது நேரத்தில், கண்ணுக்கு எட்டிய தூரத்தில், ஒரு சந்நியாசி ஓரிடத்தில் உட்கார்ந்து  தியானம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.  அவரிடம் சென்று தன் பிரச்சனையைக் கூறினார்.  சந்நியாசி அவரிடம்,  “இங்கிருந்து ஒரு மைல் தொலைவில் ஒரு சிறிய ஆறு வடக்கு நோக்கி பாய்ந்து செல்கிறது.  நீ அங்கு சென்று,  உங்கள் தாகத்தை தீர்த்