*வாசிப்பதற்கு முன்பாக… அன்போடு உங்கள் கண்களை மென்மையாக மூடுங்கள்… உங்களுடைய இதயத் துடிப்பானது ஒழுக்கத்தை விட்டு வெளியேறினால், என்ன நடக்கும் என்பதை ஒரு கணம் கற்பனை செய்யுங்கள்....தொடர்ந்து வாசியுங்கள்.* ** முன்னொரு காலத்தில் ஒரு குருகுலத்தில், ஆச்சார்யா சுமத், தமது சீடர்களோடு வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் அறிவுத் திறமை கொண்டு, மேலும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கக் கூடியவராகவும் இருந்து வந்தார். ஒரு நாள் பாடம், முடிந்த பிறகு, அவருடைய சீடர்களுள் ஒருவரான வர்ட்டெண்ட் என்பவர் குருவிடம் கேட்டார், “ஆச்சர்யா! அறிவுத் தன்மையின் கூர்மை என்பது கற்றுக் கொண்டு இருப்பதன் அடிப்படையைச் சார்ந்த ஒன்று. இது இப்படி இருந்த போதிலும், நீங்கள் ஏன், எப்போதும், நமது வாழ்க்கை முழுவதுமே கடுமையான ஒழுக்கத்தை திடமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று, பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்?“ ஆச்சார்யா சுமத் பதிலளித்தார்,“ நேரம் வரும் போது, உங்களுக்குரிய பதில் கிடைக்கும்.” சில நாட்களுக்குப் பிறகு, ஆச்சார்யாவும், அவரது எல்லா சீடர்களும், நடை பயிற்சிக்காக வெளியே போனார்கள். நடந்து கொண்டு இருக்கும் போது, அவர்கள் அனைவரும், கங்கை