ஒரு ஏழை மனிதன் தன்னுடைய குடும்பத்தினருக்காக, கடினமான முயற்சி எடுத்து ஒரு வீட்டைக் கட்டினான். ஒவ்வொரு ரூபாயாக சிறுகச் சிறுக சேர்த்து, 20 வருடங்களுக்குப் பிறகு வீட்டைக் கட்டி முடிக்கிறான். எனவே, அவரது குடும்பம் அந்த குடிசையில் இருந்து வெளியேறி பெரிய வீட்டில் குடியேறி மகிழ்ச்சியாக இருக்கப் போகிறார்கள். இறுதியாக ஒரு நாள் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு தயார் ஆனது. எல்லோரும் சேர்ந்து ஆலோசித்து, ஒரு விஷேசமான நாளை, புதுமனை புகுவிழாவிற்காக முடிவு செய்தார்கள். ஆனால், விழாவுக்கு 2 நாட்களுக்கும் முன்னால், ஏற்பட்ட நில நடுக்கத்தால், அந்த வீடு முழுவதுமாக இடிந்து விழுந்து போய் விட்டது. இந்த சம்பவத்தைப் பற்றி தெரிந்தவுடன், அந்த ஏழை மனிதர் மார்க்கெட்டுக்கு ஓடிச் சென்று இனிப்புகள் வாங்கி வந்தார். வீடு இடிந்து கிடந்த இடத்திற்கு இனிப்புகளோடு சென்றார். அங்கு நிறைய பேர் திரண்டு நின்று, அவர்களது வருத்தத்தை வெளிப்படுத்திக் கொண்டு நின்றனர். இந்த சம்பவம் நடந்ததற்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். “ஓ, இந்த ஏழை மனிதருக்கு இப்பட
Tamil blog from Co1