இராமாயணத்தில் வரும் சீதா தேவியின் தந்தை, இந்த ஜனக மகராஜா.
ஒரு நாள் இரவு அவருக்கு ஒரு விநோதமான கனவு வந்தது. அந்தக் கனவில், ஒரு வலிமை மிக்க அரசன் ஒருவன் ஜனக மகராஜாவின் ராஜ்ஜியத்தைத் தாக்கினான்; அங்குள்ள அனைத்தையும் அழித்தான். அரசர் காட்டுக்குள் தப்பி ஓடினார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, அந்தக் காட்டுக்குள் தனியாக இருந்தார். போரில் தோற்கடிக்கப்பட்டு ஓடி வந்ததால் களைப்பும், பசியும் அவருக்கு ஏற்பட்டது. அந்த அடர்ந்த காட்டில் அவரால் பசிக்கு என்னதான் கண்டு பிடிக்க முடியும்?.
இதே போல பல நாட்களைக் கடந்த பிறகு, ஒரு நாள் அந்த வழியாக வந்த ஒருவன், அவர் இருந்த நிலைமை கண்டு, அவர் மீது இரக்கப்பட்டு அவருக்கு, ஒரு ரொட்டியை கொடுத்தான். அரசர் ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து, அந்த ரொட்டியைச் சாப்பிட முயன்ற போது, பெரிய காகம் ஒன்று, வேகமாகப் பாய்ந்து இறங்கி வந்து அந்த ரொட்டியைப் பறித்துச் சென்று விட்டது.
ஜனகர் அதைப் பார்த்து கத்தினார். அந்த அலறல் சத்தம், அவரை தூக்கத்திலிருந்து எழுப்பியது. தன்னுடைய அரண்மனையில் அவருடைய சொந்தப் படுக்கையில் படுத்திருப்பதையும், அவர் உடல் முழுவதும் வியர்வையால் நனைந்திருப்பதையும் கண்டார். இந்தக் கனவின் காரணமாக அவரால் எந்த ஒன்றையும் ஒழுங்காக நினைத்துப் பார்க்க முடியவில்லை.
ஜனகர் மதம் மற்றும் ஆன்மீக மனிதராக இருப்பதால், அவரால் அந்தக் கனவு பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை; மேலும், அது பற்றி ஆச்சரியம் அடைவதையும் நிறுத்த முடியவில்லை. “ நான் கனவு கண்டு கொண்டிருக்கும் போது, நான் என் படுக்கையில்தான் இருந்து கொண்டு இருக்கின்றேன். ஆனால், என் மனம் முழுவதும் அந்தக் காடுகளில் தொலைந்து இருந்தது. அந்தக் காகம் ரொட்டியுடன் பறந்த போது, நான் அலறிக் கொண்டு ஓடி இருக்கிறேன்; வியர்வையால் நனைந்திருக்கிறேன். ஆனால், கேள்வி என்னவென்றால் எது உண்மை; அந்தக் கணத்தில் நடந்ததன் முழுவதுமான உண்மை என்ன? “நான் படுக்கையின் மீது படுத்திருந்தது -- இது உண்மையா, அல்லது போரில் தோல்வியடைந்த பிறகு நான் காடுகளில் அலைந்து திரிந்தது -- இது உண்மையா?”
இப்போது இந்த கேள்வி சரியானது, ஆனால் இதற்கான பதில் என்ன? அந்தக் கணத்தில் இருந்தே, அரசர் ஜனகர் அந்த பதிலை தேடுவதில் மூழ்கினார். அவரால் வேறு எதையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஜனகர் மிகச் சிறந்த மதவாதிகளையும், நிபுணர்களையும், சபைக்கு அழைத்து, பகலும் இரவுமாக, அவர்களிடம், “எந்த உண்மை சரியென்று நீங்கள் நம்புகிறீர்கள். இந்த உண்மையையா அல்லது அந்த உண்மையையா “ என்று வினவினார்.
ஜனகரின் இந்த நிலைமையைப் பார்த்து, அவர் குடும்பத்தினர்; அமைச்சர்கள் மற்றும் அவரது நலனில் அக்கறை உள்ளோர் அனைவரும் மிகவும் வருத்தம் அடைந்தனர். மிகச் சிறந்த மதவாதிகள், அறிவுடைய பண்டிதர்களால் கூட அரசரின் இந்த சிக்கலை தீர்க்கவும் முடியவில்லை.
மிகச் சிறந்த அறிவாளியான அஷ்டவக்கிரரின் காதுகளுக்கு இந்த செய்தி விரைவில் சென்றடைந்தது. அவர் உடனே அரச சபைக்கு விரைந்து வந்தார். இயல்பாக, அரசர் ஜனகர் இதே கேள்வியை அஷ்டவக்ரரிடம் திருப்பிக் கேட்டார்.
அவர் சிரித்துக் கொண்டே பதில் கூறினார், “பேரரசே! இந்த இரண்டுமே உண்மையில்லை” என்றார்.
அரசர் ஜனகர் அதிர்ச்சி அடைந்தார். இப்போது வரைக்கும் தான் விசாரித்த அனைவருமே, இந்த இரண்டு சூழ்நிலைகளில் ஏதாவது ஒன்றை உண்மை என்று, நிரூபிக்கும் பொருட்டு விளக்கிக் கூறினார்கள்! நல்லது. எப்படி இருந்தாலும், அவரது இப்போதைய நிலைமை அதிர்ச்சியடையச் செய்து இருந்தாலும், இது ஜனகருக்கு பெரிய முன்னேற்றத்தைக் கொடுத்தது.
அஷ்டவக்ரர் தன்னுடைய கருத்தை விவரித்தார். ஜனகரிடம், “நீங்கள் கனவு கண்டு கொண்டிருக்கும் போது, நீங்கள் இன்னும் உங்கள் அரண்மனையில்தான் இருக்கிறீர்கள். ஆகவே அந்த தருணத்தில், நீங்கள் காட்டில் திரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பது உண்மையாக இருக்க முடியாது. அதே போல, நீங்கள் அரண்மனையில் இருந்த போதிலும், அந்த சமயத்தில் உங்கள் மனம் காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. ஆகவே அந்த தருணத்தில் உங்கள் இருப்பு என்பது, அரண்மனையில் இருந்தது என்பதும் உண்மையாக இருக்க முடியாது.”
அரசர் ஜனகர் அவர் கூறியதை தெளிவாகப் புரிந்து கொண்டார்; ஆனால் அவரது தீவிர ஆர்வம் விரைவாக உருவெடுத்தது. அரசர் உடனே, “பிறகு, எதுதான் உண்மை?” என்று கேட்டார். அஷ்டவக்ரர், “அந்த உண்மைதான், தீர்க்கதரிசி அல்லது சாட்சியாக இருப்பது. அது உங்களுக்குள்ளேயே இருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் சாட்சியாக இருப்பதும் அதுவே. இவற்றில் எதுவுமே அவரால் செய்யப்பட வில்லை”.
இதைக் கேட்டவுடன், ஜனகர் ஆச்சரியத்தால் கண்கள் விரிய உண்மையைத் தெரிந்து கொண்டார்; வாழ்வில் ஒரு புதிய திசை அவருக்குக் கிடைத்தது. அவருக்கு இப்போது வாழ்க்கையில் ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருந்தது. என்ன நடந்த போதிலும், அதை அனுபவித்து, இறப்பதற்கு முன்பாக தீர்க்கதரிசியாக மாற வேண்டும்.
பின்னாளில், ராஜா ஜனகரை, குரு அஷ்ட வக்ரா ஒரு தீர்க்க தரிசி என்னும் தகுதிக்கு உயர்த்துகின்றார். இந்த முழுத் தலைப்புமே மிகவும் பிரசித்தி பெற்றது; அது ‘அஷ்ட வக்ர கீதை’ என்று அழைக்கப் படுகிறது.
மனதளவிலான முன்னேற்றத்தின் உச்சத்தை அடைவதற்கு, ஜனகரைப் போல தீவிர விருப்பம், நமக்கும் வர வேண்டும். அதாவது, எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் தீவிர விருப்பம் இருந்தாக வேண்டும். நம்மால், முழுவதுமாக இருக்க முடியாது. ஆனால் படிப்படியாக நமது உணர்வில் விழிப்பினைக் கொண்டு வந்து, நாம் சாட்சியாக இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்; அதாவது நமது துயரங்கள் மட்டுமல்ல; மகிழ்ச்சி, உயர்வு மற்றும் தாழ்வு, நமது உடமைகள், நமது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பகைவர்கள் மட்டுமல்ல, நமது உணர்வுகளின் உயர்வு மற்றும் தாழ்வு – இவை அனைத்துமே நமக்கு உரியது அல்ல. நமக்காக“ மற்றவர்கள்“ வசம் உள்ளது. நாம் வெறும் பார்வையாளர்களாக இருந்து அவற்றைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவை எதுவுமே நமக்குரியதல்ல. ஆகவே சத்திய நிலை என்பது, அப்படி எதுவுமே நடக்கவில்லை; நம்மை பாதிக்கும் அளவுக்கு உள்ளும் இல்லை, அல்லது வெளியேயும் இல்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக