அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?
ஹரிஓம்
அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும்.
அட்சய திருதியை -
வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?
அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்?
மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.
12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...
செய்ய வேண்டிய தானங்கள்
மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும்.
ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும்.
மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும்.
கடகம்: நீர்மோர் தானம் செய்வது நன்மை தரும். வீட்டிற்கு வெண்ணை மற்றும் வெண்ணைப் பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும்.
சிம்மம்: மிளகுப் பொங்கல் தானம் செய்வது நன்மை தரும். கோதுமை மற்றும் கோதுமை பலகாரங்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும்.
கன்னி: தக்காளி சாதம் தானம் செய்வது நன்மை தரும். பெண்களுக்குத் தேவையான அணிகலன்கள், ஆடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தி தரும்.
துலாம்: பேரிச்சை பழம் தானம் செய்வது நன்மை தரும். முந்திரி, திராட்சை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தி தரும்.
விருச்சிகம்: பழரசம் தானம் செய்வது நன்மை தரும். வெள்ளரி மற்றும் தர்பூசணி பழங்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும்.
தனுசு: பானகம் தானம் செய்வது நன்மை தரும். வெல்லம் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும்.
மகரம்: நிலக்கடலை மற்றும் கிழங்குகள் தானம் செய்வது நன்மை தரும். உப்பு வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும்.
கும்பம்: இளநீர் மற்றும் கனிகள் தானம் செய்வது நன்மை தரும். அரிசி வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும்.
மீனம்: இனிப்புகள் தானம் செய்வது நன்மை தரும். மோர் மற்றும் பால் பொருள்கள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கருத்துகள்
கருத்துரையிடுக