*“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*
முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!
மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.
நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.
சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்துவ உதவிக்குப் பிறகு, அவரது உடல் நலம் தேற ஆரம்பித்தது; படிப்படியாக அவர், மீனவர் குடும்பத்தில், அதன் ஒரு அங்கமாக மாறினார். அவரைப் பொறுத்த மட்டில், கடந்த காலத்தைப் பற்றிய நினைவுகள் என்று, எதுவும், நினைவுக்கு எட்டவில்லை; ஒன்றிரண்டு மங்கலான நினைவுகள் மாத்திரம் உண்டு.
தனது அரண்மனை வாழ்க்கை கடந்து சென்று விட்டது; இவை எல்லாமே முற்றாக மறந்து போயின. இளவரசர் தன்னை மீனவர் குடும்பத்தில் ஒரு அங்கம் என்றே கருத ஆரம்பித்தார்; எல்லா இதர மீனவர்களையும் போன்று, வளர்ந்தார்; இன்னல்களை சந்தித்துக் கொண்டும் இருந்தார்!
இன்னொரு புறம், அரசரும், அவர் தம் படை வீரர்களும், எல்லா இடங்களுக்கும் சென்று, இளவரசரைத் தேடிப் பார்க்கும் பணியில் ஈடு பட்டார்கள். தேடும் குழுக்கள், எத்தனையோ நாடுகளுக்கும் சென்று தேடினார்கள்; இளவரசரைத் தேடிக் கண்டுபிடிப்பதில், அந்த பெரும் முயற்சியில் ஈடு பட்டார்கள். ஆனால், அது மிகவும் சிரமம் மிகுந்த ஒரு பணியாகும். …. லட்சக் கணக்கான மக்களை தேடிப் பார்த்து, இவர்தான் இளவரசர் என்று கண்டு பிடித்து, அடையாளம் காண்பது மிகுந்த பிரம்ம பிரயத்னம் ஆகும்.
இந்த தேடும் குழுவில் ஒன்றினில், இருந்த ஒரு நபர் பேரரசருக்கு நெருக்கமானவர். அவருக்கு, பிறக்கும் போதே உள்ள இளவரசரது உடல் அடையாளங்கள் பற்றி நன்கு தெரியும். ஆகவே, இளவரசரை அடையாளப் படுத்துவது என்பது, அவருக்கு சற்று எளிதானதாகும்.
அவர் தேட ஆரம்பித்தார்; இன்னும் தேடினார். இறுதியாக, இளவரசர் வாழ்ந்த இடம் சென்றார். பார்த்த முதல் பார்வையிலேயே, அவர், இளவரசரை இன்னார் என்று அடையாளம் கண்டார்; அது பற்றி சொன்னார். ஆனால், இளவரசரோ, மிகவும் நெருக்கமாக ஒட்டிய வண்ணம் இருந்தது, மீனவக் குடும்பத்தினரோடுதான்!
தனது வளர்ப்பு தாய் தந்தையரை விலகிச் செல்லும், ஒரு நினைப்புக் கூட, அவரிடம் கற்பனையாகக் கூட, காணப் படவில்லை. மீனவக் குடும்பத்தை விட்டு விலகி வருவதற்கு மறுத்தார்.
ஆனால், அந்த நபர், இளவரசரை தேடி அலைந்து கொண்டு இருந்த அந்த நபர், அவரிடம் விவரித்தார்; பெரும் அன்பு கொண்டு விவரித்தார்; பொறுமையோடு எடுத்துச் சொன்னார்; படிப்படியாக இளவரசருக்கு, அவரது வார்த்தைகள் மீது, நம்பிக்கை ஏற்படும் விதமாக அது அமைந்திருந்தது.
ஆனால், இப்போது இளவரசருக்குக் கொடுக்கப்பட்ட, ஞானம், அங்கே ஒரு முரண்பாட்டை, அவரது மனதில் உருவாக்குகிறது. அவர் நினைக்க ஆரம்பிக்கிறார்; அவர் தனது மரபுச் சொத்தினை விரும்பினால், இந்தக் குடும்பத்தில், அவருக்குள்ள பிணைப்பினை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவது அவசியமாகும். அதன் பிறகு, பூர்வீகக் குடும்பத்திற்கு திரும்பிச் செல்வது சாத்தியமாகும்!
நமது வாழ்க்கையின் கதையும் இதுவன்றோ? இளவரசர் என்பது, ஆன்மாவைத் தவிர வேறு எந்த ஒன்றுமில்லை. அரசர் என்பது இறுதியாக உள்ள தெய்வீகமே அன்றி, வேறு எந்த ஒன்றுமில்லை. அரண்மனை என்பது, ஆன்மா வசிக்கின்ற உண்மையான வீடு என்று பொருள். அறியாத நிலமே, இடம் ஆகும்; இளவரசரை வளர்த்து எடுக்கும் தந்தையும், தாயும் என்பது வேறு யாருமல்ல; இந்த பூமியில் நமது உடல் ரீதியான தந்தையும், தாயும் ஆவார்கள்; மீனவர்கள், நமது உறவினராக இருந்து கொண்டு இருப்போர் ஆவர். அந்த நபர் இளவரசரைக் கண்டு பிடித்தவர்; இளவரசரிடம் அவரது உண்மையான வீட்டின் முகவரியைக் கொடுத்தவர், “குரு” ஆவார்; அவரே நம்மை வழி நடத்துகிறார்; அவரே சரியான பாதையையும் நமக்குக் காட்டுகிறார். குருவின் உதவியோடு, நமது உண்மையான வீட்டைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடிகிறது; மேலும் அதனை நோக்கி, முயற்சி செய்ய ஆரம்பிக்கிறோம்.
குருவின் வார்த்தைகளை, நாம் ஏற்றுக் கொண்டு விட்ட நிலையில், நம்முள்ளே இருக்கும், நமது உண்மையான வீடு பற்றிய ஆவல், தெரிந்து கொள்ளப்பட வேண்டும் என்கிற ஆவல் வருகின்ற நிலையில் மட்டுமே, குரு நமது கையைப் பிடிக்க இயலும்; நம்மை நமது லட்சியத்திற்கு இட்டுச் செல்லவும் முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக