- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கடலின் நடுவில் இருக்கும் தீவு ஒன்றில், ஒரு முறை ஒரு கூட்டமாக பருந்துகள் வந்து சேர்ந்தன. அந்தக் கடலில் நிறைய மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்தன. இந்தக் காரணத்தால், அந்தப் பருந்துகளுக்கு உணவு, தண்ணீர் பற்றாக்குறை இல்லவே இல்லை. அந்தத் தீவில் பருந்துகளைத் தாக்கும் கொடூரமான வனவிலங்குகளும் இல்லை. இது அந்த பருந்துகளுக்கு மிகவும் சிறந்ததாக இருந்தது. இந்த மாதிரியான வசதியான வாழ்க்கையை அந்தப் பருந்துகள் ஒரு போதும் இதற்கு முன்னால் வாழ்ந்தது இல்லை. எனவே பருந்துகள் மிகவும் மகிழ்ச்சியாக அங்கு இருந்தன. அந்தப் பருந்துக் கூட்டத்தில் அதிகமானவை இளம் பருந்துகள்தான். இந்த மாதிரியான ஒரு வசதியான வாழ்க்கையை நாம் எங்கு சென்றாலும், கண்டு பிடிக்க முடியாது. எனவே, நம் வாழ்க்கையின் மீதிப் பகுதியை இங்கேயே கழித்து விடுவோம் என்று அந்த இளம் பருந்துகள் நினைத்தன. அந்தக் கூட்டத்தில் ஒரு வயதான பருந்து இருந்தது. அந்த இளம் பருந்துகளையும், அவர்கள் எண்ணத்தையும் அறிந்த போது, அந்த வயதான பருந்து வருத்தம் அடைந்தது. ஒரு நாள், அந்த வயதான பருந