நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”*
இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.
அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்படியே நான் பசியோடும் மேலும் தாகத்தோடும் நான் போய்க் கொண்டே இருந்தால், நான் விரைவில் இறந்து போய் விடுவேன்.
களைப்படைந்து, அவருடைய சொந்த எண்ணங்களில் மூழ்கியிருந்த அந்தப் படைவீரரை, நெப்போலியன் பார்த்த போது, அவரிடம் கேட்டார், “அந்தப் பையின் உள்ளே என்ன இருக்கிறது என்பது உனக்குத் தெரியுமா?
அந்தப் படைவீரர் கூறினார், "அரசரே, நான் என்ன சுமந்து கொண்டு இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியாது.”
நெப்போலியன் படைவீரரிடம், அந்தப் பையை திறந்து பார்க்கும்படி கேட்டுக் கொண்டார்.
அந்தப் படைவீரர் பார்த்தார். அந்தப் பை முழுவதும் தங்கம் மற்றும் விலை மதிப்புள்ள ஆபரணங்கள்; இவை கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களில் உள்ளவை.
இன்றிலிருந்து இவை எல்லாமே, உன்னுடையவை; எடுத்துக் கொள்ளலாம், என்று நெப்போலியன் கூறினார்.
ஒரு சில கணங்களுக்கு முன்பாக, இந்த மாதிரியான கனமான பையைத் தூக்கிக் கொண்டு இருப்பதைப் பற்றி அவருக்குள்ளாகவே, சபித்துக் கொண்டே இருந்தார். அந்த பை முழுவதும், தங்கம் மற்றும் விலை மதிப்புள்ள ஆபரணங்கள் இருப்பதைப் பார்த்தார்; மேலும், அது தனக்கே சொந்தமாகப் போகிறதையும் தெரிந்து கொண்டார். உடனே அவரது மனோபாவமே மாறிவிட்டது. அவருடைய எல்லா பகுதிகளிலும், மகிழ்ச்சி பரவ ஆரம்பித்து விட்டது. திடீரென்று அவருக்கு, அதிக அளவில் வலிமையும் மேலும் சுறுசுறுப்பும் கிடைத்தது தெரிந்தது. இப்பொழுது அந்த படைவீரர், தன் வீட்டை அடைவதற்கு வேகமாகச் சென்றார். அவருடைய எல்லாவிதமான களைப்பும் கூட, காணாமல் போய் விட்டன. நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு, அவர் மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தார்.
இது அற்புதமாக இருக்கிறது; எவ்வாறு நமது நேர்மறையான மனோபாவம் நம் வாழ்க்கையை நோக்கி முடிவில்லாத ஆற்றலை நிரப்ப முடிகிறது; மேலும் இந்த மனோபாவம் எதிர்மறையாக இருந்தால், பிறகு இது எவ்வாறு நம் வாழ்க்கையை உற்சாகம் இல்லாமல் செய்து விடுகிறது. நம்முடைய மனப்பான்மை, நம்முடைய உலகாயத வாழ்க்கையை மட்டுமல்லாமல், நம்முடைய ஆன்மீக வாழ்க்கையையும் பாதிக்கிறது.
கல்வி விஷயத்திலும் கூட, நாம் பார்க்க முடியும்; எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது அங்கே; அதாவது இரண்டு விதமான மனப்பான்மை கொண்ட குழந்தைகள் இருக்கின்றன. தன்னுடைய படிப்பில் உற்சாகம் கொண்ட குழந்தைகள், படித்துக் கொண்டு இருக்கும் போது எந்த விதமான உற்சாகமும் இல்லாத குழந்தைகள் என்று!
சரியான மனப்பான்மையை அபிவிருத்தி செய்தால், அது நமக்கு உதவுகிறது; இந்த உலகத்தை சரியான தோற்றத்தில் பார்ப்பதற்கு! நாம் செயற்கையாக சிரித்தால், மேலும் செயற்கையான மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும், இவையும் கூட, இயற்கையான மகிழ்ச்சியாக மாறிவிடும். நம்முடைய உற்சாகமும் மேலும் மகிழ்ச்சியும் வலிமையான காற்றைப் போலப் பரவிவிடும். அனைவரும் நம்முடைய நேர்மறையான சிந்தனையால் ஈர்க்கப்படுவார்கள்.
“வாழ்க்கை என்பது நம் மனப்பான்மையின் வெளிப்பாடாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக