*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*
𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝟬𝟴, 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟰
*╚════★🄲🅁🄺★════╝*
*🔹🔸இன்றைய சிந்தனை..*
*🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️*
*🧿'' குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.*
*🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️*
. *🌹✍️*
*♻️குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.*
*♻️குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;*
*♻️பெற்றக் குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும்.*
*♻️ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில் நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்.*
*♻️உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யைப் பார்த்த அவரது தாயார் மிகவும் துடிதுடித்து விட்டார்..*
*மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,*
*♻️'' யார் உன்னை இப்படிக் காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..*
*♻️அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்னை என் சக மாணவன் அடித்து விட்டான் என்றார்.. அதற்கு அவரின் அம்மா, "நீயும் அவனைத் திருப்பி அடித்தாயா? என்று கேட்டார்..*
*♻️ஹேல்க் எல்லீஸ் அமைதியாக,'' இல்லையம்மா, நானும் திருப்பி அடித்தால் நானும் அவனைப் போல் முரடனாகத் தானே வருவேன் என்றார்..*
*♻️. அவரது அன்புத் தாய் அவனை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டார்..*
*😎ஆம்.,நண்பர்களே..,*
*🏵️உங்கள் பிள்ளைகளுக்கு உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்..*
*⚽குழந்தைகளுக்கு சிறந்த பண்பு நலன்களைக் கற்றுத் தரும் கடமையானது, பெற்றோர்களுக்கு மட்டுமே உரியது அல்ல.*
*🏵️அதில், ஆசிரியர்களுக்கும் மிகுந்த பங்குண்டு என்பதை மறத்தலாகாது.*
*ஆசிரியர்களை, பல குழந்தைகள் தங்களின் முன்மாதிரி ஆளுமைகளாக எடுத்துக் கொள்கின்றன.*
*🏵️▬▬▬C®️K▬▬▬🏵️*
*𝟬𝟴 | 𝟭𝟮 | 𝟮𝟬𝟮𝟰*
. *🌹✍️*
கருத்துகள்
கருத்துரையிடுக