ஜான். டி. ராக்ஃபெல்லர் என்பவர்தான் உலகத்திலேயே முதல் கோடீஸ்வர மனிதர்; மிகப்பெரிய பணக்காரரும் ஆவார். அவரது 25 வது வயதிலேயே, அமெரிக்காவில் இருக்கும் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொண்டார். 31 வது வயதில், உலகத்திலேயே மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனர் ஆனார். 38 வது வயதில் அமெரிக்காவின் 90% சுத்திகரிப்பின் நிறுவனர் ஆனார். தனது 50 வது வயதில் அந்த நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் ஆனார். அவருடைய மரணம் வரைக்கும், ராக்ஃபெல்லர்தான் உலகிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரராக இருந்தார். அவர் இளைஞனாக இருக்கும் போது, அவர் எடுக்கும் முடிவு; அவரது மனப்பாங்கு; அவர் மற்றவர்களுடன் வைத்திருந்த உறவு முறை – இவைதான் அவருடைய தனித்துவமான சக்தியையும், செல்வத்தையும் பெறுவதற்கு அவரை வடிவமைத்தன. ஆனால் அவருடைய 53 வது வயதில், அவர் மிகவும் மோசமாக உடல் நிலை பாதிக்கப்பட்டார். அவரது உடல் முழுவதும் தாங்க முடியாத வலியால் வேதனைக்கு உள்ளானார்; அவரது தலைமுடி முழுவதுமாக உதிர்ந்து விட்டது. உலகிலேயே ஒரே கோடீஸ்வரரான அவர், இந்த உலகில் எதை வேண்டுமானாலும் வாங்கும் சக்தி படைத்தவர்
Tamil blog from Co1