நம் வாழ்க்கையில் எப்போதாவது இழப்பு நேர்ந்தால், நாம் அதில் இருந்து எப்படி மீண்டு வருவோம்? எப்படி ஒரு புதிய லட்சியத்தை வாழ்க்கையில் மீண்டும் கொண்டு வருவோம்? அதை எப்படி உண்மையாக்குவது?
ஸ்பெயின் நாட்டில் இருந்த ஒரு 10 வயது சிறுவனுக்கு, வாழ்க்கையில், தான் ஒரு கால் பந்து வீரனாக வரவேண்டும் என்ற கனவு இருந்தது. ஸ்பெயினிலேயே முதல் கால் பந்து வீரனாக நான் ஒரு நாள் வருவேன்; நான் கோல் கீப்பிங்கில் விருப்பம் கொண்டுள்ளதால், நான் முதல் கோல் கீப்பராகவும் வருவேன்.
அவனது பெற்றோர்கள், அவன் மீது நம்பிக்கை கொண்டனர். அவனை பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்த்தனர். அந்த சிறுவன் கால் பந்து மைதானத்திற்கும்பயிற்சி நிறுவனத்திற்கும் சென்று, பயிற்சி செய்தான்.
தன்னுடைய பயிற்றுனரிடம், “நான் வளர்ந்து ஸ்பெயினில், பெரிய கால் பந்து வீரனாக வருவேன்! ரியல் மாட்ரிட், ஒரு பெரிய கால் பந்து கிளப். அங்கு நான் ஒரு கோல் கீப்பராக, அவர்களுக்குப் பணி செய்வேன்” என்றான். அந்த விளையாட்டின் மீது, அவன் வைத்திருந்த ஆர்வம் அவன் கண்களில் மின்னியதைப் பார்த்த, அந்த பயிற்றுனர், தன்னால் முடிந்த மிகச் சிறந்த பயிற்சியை அவனுக்குக் கற்றுக் கொடுத்தார்.
காலம் உருண்டோடியது.
அந்த 10 வயது சிறுவன் இப்போது 20 வயது இளைஞனாக வளர்ந்து விட்டான். இந்த 10 வருடங்களில், அவன் மிகச் சிறந்த போட்டிகளில் விளையாடினான்;தனது குறிப்பிடத்தக்க திறமைகளை வெளிப்படுத்தினான்.
அவனது கனவு நனவு ஆகிடும் நாள் நெருங்கிக் கொண்டு இருந்தது. ‘ரியல் மேட்ரிட்’ கால் பந்து சங்கத்திற்காக விளையாட அவன் அனுமதிக்கப்பட்டான்.
கால் பந்து போட்டியின் முதல் நாளுக்கு முன்பாக, எதிர் பாராத விதமாக, அவனுக்கு மிகக் கொடூரமான ஒரு விபத்து ஏற்பட்டது. அவன் தன் நண்பர்களுடன் காரில் போய்க் கொண்டு இருந்த போது, அந்த விபத்து நேர்ந்தது. உடனே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். “இடுப்புக்குக் கீழே உள்ள பகுதி, செயல் இழந்து விட்டது; அவனால் இனிமேல் நடக்கக் கூட முடியாது” என்று மருத்துவர்கள் அவன் பெற்றோரிடம் கூறினர்.
அவன் தன்னிடம் தான் கால் பந்து விளையாட்டை விளையாட வேண்டும்!
பெற்றோர்கள், மனம் உடைந்து அழுதனர். அவர்களால், தன் மகனின் நீண்ட நாள் கனவு இவ்வாறு நொறுங்கிப் போனதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தன் மகனை ஆறுதல் படுத்தினர்.
உன் முன்னால் இருக்கும், உனது மீதி வாழ்க்கையை நீ எதிர்கொள்ளத்தான் வேண்டும். எப்போதும் இப்படி இருக்காது. டாக்டர்கள் தன்னைப் பற்றிக் கூறியதை, தன் பெற்றோர்கள் கூற கேட்டவன், உள்ளுக்குள்ளேயே நடுங்கி விட்டான். தான் சாதிக்க வேண்டும் என எண்ணி இருந்த தன் நீண்ட நாள் கனவு புகையாகப் போய்விட்டது. தன் நிலைமை பற்றி அறிந்து முற்றிலுமாக மனம் உடைந்து விட்டான்.
அவன் 18 மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்தான். அந்த கால கட்டத்தில், எத்தனையோ எதிர்மறை எண்ணங்கள் அவனை வாட்டி வதைத்தன என்பதை கற்பனை செய்து பார்ப்பது கூட மிகவும் கஷ்டமாக இருந்தது.
இந்த சூழ்நிலைகளுக்குநாம் இரையாகிடக் கூடாது; இதில் இருந்து விடுபட்டு, மீண்டும் வெளிவந்து தன்னை வலிமைப் படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.
அவனுக்கு எழுதுவதில் ஆர்வம் இருந்தது. எனவே ஆஸ்பத்திரியில் இருந்த அந்த நாட்களில், அந்த ஓய்வு நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்த முடிவு செய்தான். கவிதைகளும், பாடல்களும் எழுத ஆரம்பித்தான். நன்றாக பாடவும் தொடங்கினான்.
இதன் விளைவாக, அவனது கவனம் முற்றிலுமாக, கால் பந்தில் இருந்து இசையை நோக்கித் திரும்பியது. சங்கீதத்தில், தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, இந்த புது உலகத்தில் ஏதாவது வித்தியாசமான ஒன்றை, சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.
தன் உடல் குறைபாட்டுடன் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது கூட, தனக்கு சாத்தியமானவற்றைப் பற்றி, அதாவது சங்கீதத்தில் புது முறையைப் பற்றி, அவன் கனவு காண்பதை கற்பனை செய்து பாருங்கள்! இது, நம்பவே முடியாதது! ஐந்து வருடங்களுக்குப் பிறகு தன் முதல் பாடலை வெளி உலகத்திற்குக் கொண்டு வந்தான். அந்தப் பாடல் ‘சூப்பர் ஹிட்’ ஆகியது. அந்தப் பாடல் “ வாழ்க்கை தானாகவே போய்க் கொண்டிருக்கிறது”என்பது தான். அந்த இளைஞன் ஸ்பெயின் நாட்டிலேயே மிகச் சிறந்த பாடகர்களில் ஒருவர் ஆனான்! அவனது பெயர், *“ஜூலியோ இக்லீசியஸ்”.* அவனது உண்மையான கதை இது.
இது வரைக்கும் 300 மில்லியனுக்கும் அதிகமான அவனது இசை ஆல்பங்கள் பல மொழிகளில் விற்கப்பட்டு விட்டன.
ஜூலியோ போல இருக்கும் மனிதர்கள், இவனை ஒரு முன் மாதிரியாக; இவர் வாழ்க்கையைத் தங்களுக்கு ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிடலாம்.
இவரது வாழ்க்கை ஒன்றை நிரூபணம் ஆக்கி உள்ளது. அதாவது, “தோல்விகள் என்ற போதிலும், மீண்டும் வெற்றி அடைவதற்கான ஒரு வழி, அந்த தோல்விக்குப் பின் மறைந்து இருக்கிறது”.
நமது கனவு எப்போதுமே முடிவுக்கு வரக்கூடாது; நாம் எப்போதும் கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டும் --புதிதாக ஒன்றை செய்வதைப் பற்றி!
கருத்துகள்
கருத்துரையிடுக