முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான்கு சுவர்களுக்கு வெளியே உள்ள அனுபவம்.

  
   கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆசிரியை ஒருத்தி,  ஆஸ்பத்திரி கொரானா வார்டில்,  மேலே சுற்றிக் கொண்டிருக்கும்  மின் விசிறியைப் பார்த்தபடி  படுத்திருந்தாள். ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க முற்படும் போது,  டெலிஃபோன் மணி ஒலித்தது.  அந்த எண்  அவள் பதிவு செய்யாதது.  அப்படிப்பட்ட அழைப்புக்களை வழக்கமாக அவள் தவிர்த்து விடுவாள்.     ஆஸ்பத்திரியில்  தனியாகப் படுத்து இருக்கும்,  அந்த சூழ்நிலையில்,  அந்த அழைப்பை ஏற்று ஃபோனில் பேசினாள்.
காலை வணக்கம் டீச்சர்.  நான் சத்தியேந்திரா கோபால கிருஷ்ணன்.  துபாயில் இருந்து  பேசுகிறேன் என்ற, கம்பீரமான ஆண் குரல் ஃபோனில் கேட்டது.  நான், திருமதி சீமா கனகாம்பரனிடம் பேச முடியுமா? 
நீங்கள் சீமாவிடம்தான் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள், என்றாள் ஆசிரியை.   சிறிது இடைவெளிக்குப் பிறகு, “சில வருடங்களுக்கு  முன்னால்,  நீங்கள்தான்  நான் பத்தாவது வகுப்பு படிக்கும் போது,  என் வகுப்பு ஆசிரியை என்றார்.

 ஆசிரியையால் அந்த மாணவனை தன் நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை.  நான் கோவிட் சிகிட்சைக்காக  இப்போது  ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருக்கிறேன்.    முக்கியமாக   பேசுவதற்கு  எதுவும் இல்லை என்றால்,  நாம் பின்னர் பேசிக் கொள்ளலாம்,  என்றாள்.
அதற்கு சத்தியேந்திரா நீங்கள் கோவிட்டில் அட்மிட் ஆகி இருப்பதை,  நான் சுப்பு மூலம் கேள்விப் பட்டேன்.  

 1995-இல்  பத்தாவது வகுப்புப் படித்த மாணவர்களில்,  முதல் மாணவன் அவன்தான் என்று சத்தியேந்திரா கூறினார்.  சுப்புவை எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.  ஆனால்,  இன்னும் உன்னைதான் யார் என தெரியவில்லை. 
கடைசி வரிசையில்  அமர்ந்திருக்கும்,  கருப்பான உயரமான அந்த மாணவன்தான்  நான். எப்போதும் உங்களுக்கு தலைவலியாக இருந்தவன்தான் நான் என்று சத்தியேந்திரா குறுக்கிட்டுப் பேசினான்.  ஆசிரியைக்கு  திடீரென்று ஞாபகத்திற்கு வந்து விட்டது.  ஓ!  அந்த கடைசி பெஞ்சில் உள்ளவர்கள்,  என்றார். அந்த உரையாடல்  உற்சாகமாக சென்று கொண்டு இருந்தது.

 ஆசிரியை  தன் கையில் இருந்த புத்தகத்தை  அருகில் இருந்த மேசையில்  வைத்தார். தலையணை ஒன்றை  எடுத்து வைத்து  வசதியாக அமர்ந்து கொண்டாள்.  திடீரென்று  என்னை ஞாபகம் வைத்து ஏன் அழைத்தாய் எனக் கேட்டாள்.
நீங்கள் கொரானாவால்  பாதிக்கப்பட்டு  ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டு இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.  1995 –இல்  படித்த நண்பர்களை,  முடிந்தவரை என்னுடன் தொடர்பில் இருப்பவர்களை வைத்து  ஒரு “கான்ஃபெரன்ஸ்”அழைப்பு வைக்கலாம் என்று நினைத்தேன்.  ஆனால்,  என்னால் 7 பேரைத்தான்,  இந்த அழைப்பில் இணைக்க முடிந்தது.  

  அந்த 7 பேரும்  இப்போது, நாம் பேசுவதைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  நீங்கள் விரைவில் குணம் அடையவும், உங்களுக்கு வாழ்த்துக் கூறவும் நாங்கள் இப்போது அழைத்தோம்,  என்றார். 
ஆசிரியை  பதில் சொல்வதற்கு முடியாமல் திணறினாள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, உன்னைப் பற்றி சொல். நீ இப்போது எங்கு,  என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? என்று கேட்டாள். 
நான் இப்போது துபாயில் இருக்கிறேன்.  ஒரு போக்கு வரத்துக் கம்பெனி நடத்துகிறேன்.  நான் வேலை தேடிதான், இங்கு வந்தேன். 

 இப்போது  மிகப் பெரிய  தொழில் அதிபர் ஆகி விட்டேன்.  என் நிறுவனத்தில்,  இரண்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள், என்றார். மேலும்  சத்தியேந்திரா,  தொடர்ந்தான். நாங்கள்  10 வது வகுப்புப் படிக்கும் போது,  கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் எங்களுக்கு நீங்கள் ஒழுக்கமாக இருப்பதைப் போதித்ததால்,  உங்களை நாங்கள் ஒரு கொடுமைக்கார ஆசிரியையாக எண்ணினோம்.     
  நாங்கள் அதிகமாக கூச்சல் இடுவோம்;  தவறுகள்  செய்வோம்;  அதற்கெல்லாம்  நான்தான்  தலைவன். 
உங்களிடம் இருந்து  எவ்வளவு தண்டனைகள் வாங்க முடியுமோ அவ்வளவு வாங்கியுள்ளேன். அடிக்கடி  என்னை வகுப்பறைக்கு  வெளியே நிற்க வைத்தீர்கள். சில சமயங்களில் வகுப்புக்கு உள்ளே பெஞ்சின் மேல் நிற்க வைத்தீர்கள்.  பெஞ்சின் மீது நிற்கும் அந்த அனுபவம், ஒரு பறவையின் கண் பார்வை மேலிருந்து கீழாக பார்ப்பது போல,  வகுப்பு முழுவதையும் என்னால் காண முடிந்தது.  கழுகு மேலே உயரமாகப் பறந்தாலும்  அதன் பார்வை  தன் இரையைக் கைப் பற்றிட கீழ் நோக்கி,  கூர்மையாக இருக்கும். 

 இந்தப் பாடங்களை என் வாழ்க்கையில் மட்டுமல்லாமல்,  என் தொழிலிலும் கொண்டு வந்து,  முன்னேறினேன்.  நான் இன்று இவ்வளவு நல்ல நிலைமையில்  இருப்பதற்கு, உங்களுக்கு நன்றி சொல்ல  கடமைப் பட்டு இருக்கிறேன். 
ஆசிரியைக்கு  என்ன  பதில் பேசுவது  என்றே தெரியவில்லை.  சத்தியேந்திரா  மலரும் ஞாபகங்களை  கூறிக் கொண்டு இருக்கும் போதே  ஆசிரியை 1995 க்கு, தன் நினைவலைகளைக் கொண்டு சென்றார். 1995 – 10 வது வகுப்பறை … …..அந்தக் கருப்பான,  உயரமான பையன்.  வகுப்பில் நடக்கும் அத்தனை ஒழுங்கீனத்திற்கும், அவன் தான்தலைவன்.  எப்போதுமே  வகுப்புக்கு லேட்டாக வருவான்.  வகுப்புக்களைப் புறக்கணித்து விட்டு,  சினிமாவுக்கு செல்வான்.

 வீட்டுப் பாடங்களை  ஒரு போதும் செய்ய மாட்டான்.  அடிக்கடி  ஆசிரியர்கள் அறைக்குச் சென்று  தனது தண்டனைகளைக் குறைப்பது பற்றி,  பேச்சு வார்த்தை நடத்துவான்.  ஆசிரியைகளுக்குஅவன் ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தான். 

 ஆனால்  மாணவர்களுக்கு   அவர்களுக்கு  செல்லமான நண்பனாகத் திகழ்ந்தான்.   அவனை நண்பர்கள் அனைவரும்,  ஏற்றுக் கொண்டனர். 

 எப்படி இப்போது துபாயில் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே, ஆசிரியையின்  நினைவலைகள்  சத்தியேந்திராவின் குரலால் தடைபட்டன. 

 டீச்சர்  நீங்கள் இணைப்பில் இருக்கின்றீர்களா என்றான்.  ஆம், ஆம்  என்றாள் ஆசிரியை.  சத்தியேந்திரா, நீ  பள்ளியை விட்டு சென்ற பிறகு  நான் உன்னைப் பற்றி  எதுவுமே கேள்விப்படவில்லை.  நீ அழைத்ததும்,  இப்படி ஒரு கான்ஃபரன்ஸ் சந்திப்புக்கு  ஏற்பாடு செய்ததும்,  எனக்கு  மிகவும் வியப்பைத் தருகிறது;  மேலும்  சந்தோஷத்தையும் தருகிறது. உங்கள் ஒவ்வொருவரையும்  பற்றி  கூறு, என்றாள்.
மீதி ஆறு பேரில்,  மூன்று பேர் பொறியாளர்கள்.  அவர்கள், மூன்று பேரும் வெவ்வேறு கண்டங்களில் இருக்கின்றார்கள்.  
 ஒருவர் டெல்லியில் மருத்துவர்.  மற்றொருவர்  ஷில்லாங்கில்  பாதிரியார்.  கடைசியாக சுப்பு.  நம் வகுப்பில் முதல் மாணவர்.
சுப்பு, ஆசிரியையிடம்   பேசத் தொடங்கினான்.  டீச்சர்,  நான் இப்போது  சார்ட்டட் அக்கவுண்டண்ட் (CA) ஆகி விட்டேன்.  சத்தியேந்திரா கம்பெனியில் முதன்மை நிதி அதிகாரியாக  (CFO) பணி செய்கிறேன்,  என்றான். 
டீச்சரால்  அதை நம்பவே முடியவில்லை.  பேராச்சரியத்தோடு,  உண்மையாகவா சொல்கிறாய்  என்றாள்.  ஆமாம் டீச்சர். நான் உண்மையைத்தான் சொல்கிறேன்.   முதலில்  உலக அளவில் உள்ள தணிக்கை நிறுவனத்தில்  (KPMG ) பணி புரிந்தேன்.  பிறகு சத்தியேந்திரா கம்பெனியில் சேர்ந்தேன். எனக்கு இந்த வேலை அதிக திருப்தியாக இருக்கிறது.  மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்றான்.
ஒவ்வொருவராக தங்களைப் பற்றிக் கூறினார்கள்.  நாற்பது நிமிடங்கள் கடந்தன.  இந்த  நீண்ட தொலை பேசி அழைப்புக்காக சத்தியேந்திரா  டீச்சரிடம்,  மன்னிப்புக் கேட்டான்.  விரைவில் ஆசிரியை குணம் அடைய  வாழ்த்துக்கள் கூறினான்.

 அடுத்த முறை இந்தியா வரும் போது  டீச்சரைப் பார்ப்பதாக வாக்குறுதி கொடுத்தான்.   
கொரானா வார்டில் தனிமையில் இருக்கும் டீச்சரின் கண்கள்,  கண்ணீரால்,  குளமாயின;  இதயம்  மகிழ்ச்சியால்  விம்மியது;  கன்னத்தில்  ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. 
தன்னுடைய மாணவர்கள், தான் அவர்களுக்கு கற்பித்த ஒழுக்கத்தையும், அவர்கள் மீது காட்டிய பரிவையும்,  இன்று வரை,  ஞாபகம் வைத்து இருப்பது, அந்த ஆசிரியையை  மட்டற்ற மகிழ்ச்சியில்  மூழ்கடித்து விட்டது.

மாணவர்கள் அனைவரும் நன்கு படித்து;  நல்ல பதவிகளில் அமர்ந்து;  மகிழ்ச்சியான வாழ்க்கையை  வாழ்வது குறித்து நன்றி செலுத்தினாள்.  வகுப்பில் நன்றாகப் படித்தவர்கள் மட்டுமின்றி,  படிக்காமல் மோசமாக இருந்த மாணவன் கூட,  வாழ்க்கையில் இருந்து நல்ல பாடங்களைக் கற்று,  தன்னைப் பிரமாண்டமான அளவில் வெளிப்படுத்தி இருக்கிறான்.
இந்த மாணவன் தன் பாடத்தில் படிக்காத அனைத்தையும், வெளி வாழ்க்கையில் இருந்து,  வாழ்க்கைக்குத் தேவையான முழுவதையும் படித்து விட்டான் என ஆசிரியை தனக்குள்  நினைத்துக் கொண்டாள். 

சத்தியேந்திராவுக்கு  தன் வகுப்பில் கிடைத்த தண்டனைகள் மூலம், அவன் எதையும் கூர்ந்து கவனிக்கும் திறமை, பரந்து விரிந்த பார்வை – இத்தகைய நல்ல விஷயங்களை  கற்றான்.  இதனை, அவன் பெஞ்சில் உயரமாக நிற்கும் போது கற்றான்.    வகுப்புக்களைப் புறக்கணித்து விட்டு  படம் பார்க்க சென்ற அனுபவம் மூலம்,  எந்த இக்கட்டான சூழ்நிலையையும்  சமாளிக்கும் அனுபவத்தை அந்த இளம் வயதிலேயே கற்றான்.  மதிய உணவு இடைவேளையில்  டீச்சர்களை,  சந்தித்து  தண்டனையைக் குறைப்பது,  அபராதக் கட்டணம் நீக்குவது பற்றி  பேச்சு வார்த்தை நடத்தினான். 

 இது “பேசும் திறமை” என்ற கலையை  அவனுக்குக் கற்பித்தது.  பள்ளி வாழ்க்கையில்,  அவன் பெற்ற அனைத்தும் இப்போதும் அவனுக்கு உறுதுணையாக இருக்கிறது. 
சத்தியேந்திரா  வகுப்பில் கணிதப்பாடத்தில்  மதிப்பெண்களை இழந்தாலும்,  நிஜ வாழ்க்கையில்  தேர்ச்சி பெற்று விட்டான். 

 ஆனால், சுப்பு  100 மார்க்கு வாங்கியவன்,  இன்று சத்தியேந்திரா நிறுவனத்தில்  வேலை பார்க்கிறான்.  இது ஆச்சரியத்திலும்,  ஆச்சரியமாக இருக்கிறது.
கொரானா நோயால், குழந்தைகள் இரண்டு வருடங்களாக வீட்டில் இருந்தே  செல்ஃபோன்,  லேப்டாப்  மற்றும் கம்ப்யூட்டர் மூலம் படித்துக் கொண்டு இருக்கின்றனர்.    படிப்பில் மட்டுமே  நன்றாக வந்துள்ளனர்.  அவர்களது குணநலன்  நல்ல முறையில் உருவாவது, வெற்றி பெற முடிய வில்லை.   நடைமுறை அனுபவத்திலும்,  நடைமுறை வாழ்க்கையிலும்  அவர்கள் எதுவுமே படிக்கவில்லை. 
இந்த சமுதாயம்  நல்ல முறையில்  முன்னேற்றம் அடைய,  நமக்கு நிறைய சத்தியேந்திராக்களும், சுப்புக்களும்  தேவைப் படுகின்றனர். இந்த உலகத்திற்கு நாம் புரிய வைக்க வேண்டியது,  உலகத்திற்கு மட்டுமல்ல, குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர்  புரிந்து கொள்ள வேண்டியது இதுவே – அதாவது, கல்வி  வெறும் நான்கு சுவர்களுக்குள் இருக்கும்  வகுப்பு அறையில் புத்தகங்கள் மூலம் படிப்பது மட்டுமல்ல.  கல்வி என்பது ஒரு செயல் முறை.  10% பள்ளியில் படிப்பது;  20% உற்றுக் கவனிப்பது; 70% வெளியே இருக்கிறது. 
மாணவச் செல்வங்களே செல்போனில் மூழ்கி உங்கள் வாழ்க்கையை குறுகிய வட்டத்திற்குள்  வீணாக்காமல்,  வெளியே வந்து இயற்கையை  உற்று நோக்குங்கள். இறைவனின் படைப்புக்கள் அனைத்தும் உங்களுக்கு  அனுபவம் என்னும் பாடங்களைக் கற்றுத் தருகின்றன.
பறவையைக் கண்டான்;  விமானம்  படைத்தான்.
பாயும்  மீனைக்  கண்டான்; படகினைப் படைத்தான்.

 எதிரொலி கேட்டான்;  வானொலி படைத்தான்.
கனிந்த பழம்  மரத்தில் இருந்து கீழே விழுவதைப் பார்த்தான்; 
புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தான்.  
           இயற்கையின் வாயிலாக,  மனிதன் கண்டறிந்த  அறிவியல் படைப்புக்கள்  இன்னும் எத்தனை எத்தனையோ! 
 
நற்குணங்களைக் கூட மனிதன்  ஐந்து அறிவுள்ள  ஜீவ ராசிகளிடம் இருந்து,  கற்றான். சிலந்தி வலை பின்னியதைப் பார்த்தான்;  விடாமுயற்சியைக் கற்றான்.  புறாக்கள் வலையோடு பறந்ததைப் பார்த்தான்; ஒற்றுமையைக் கற்றான்.  இவை கதைதான் என்றாலும்  கருத்துள்ள பாடங்களை போதித்தன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது

*ப்ளீஸ்*  என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா..  ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை.. மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!!  கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? கடைசியில்தான் தெரியும் நான் விரும்பியது 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்..  இப்படி அம்மாவின் பல கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்!! வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது.. இறுதியில் தோற்று போனது ஒன்றுக்கும் உதவாத என் பிடிவாதமாகத்தான் இருந்திருக்கிறது!! கிச்சனில் அம்மா வியர்க்க விறுவிறுக்க எங்களுக்காக சுயமரியாதையை தொலைத்து நின்றிருந்த தருணங்கள் ஏராளம்.. *துணி காயப்போடு,* *பீரோவை அடுக்கி வை..* *மதியானத்தில் தூங்காதே..*  *எப்ப பாரு என்ன டிவி?*  *புக் எடுத்து படி...* *வீட்டு வேலை செய்*, ...

பெண் குழந்தைகளுக்கான அழகான 68 முருகன் பெயர்கள்

1. சஷ்டிகா - Sastika 2. விசாகா - Visaka 3. க்ரித்திகா - Krithika 4. சக்திதாரா - Sakthithara 5. கார்த்திகா - Karthika 6. மயூரி - Mayuri 7. எழில்வெண்பா - Ezhilvenba 8. மயிலினி - Mayilini 9. விசாலினி - Visalini 10. வேலவர்ஷினி - Velavarshini 11. நித்ரா - Nithra 12. அகநேத்ரா - Aganethra 13. அகமித்ரா - Agamithra 14. சஷ்டிப்ரதா - Sastiprada 15. சஷ்டிப்ரகதா - Sastipragatha 16. ப்ரணவி- Pranavi 17. மகிழ்வதனா - Magizhvadana 18. எழில்நேத்ரா - Ezhilnethra 19. யுகஸ்ரீ - Yugashree 20. பிரபவா - Prabhava 21. ஆத்மபுவிகா - Atmabhuvika 22. குகஸ்ரீ - Guhasree 23. மேகதர்ஷினி - Megadharshini 24. இளமயிலி - Ilamayili 25. வினுமித்ரா - Vinumithra 26. ஜயத்சேனா - Jeyatsena 27. வினுப்ரியா- Vinupriya 28. முகில்வெண்பா - Mukilvenba 29. எழில்மித்ரா - Ezhilmithra 30. யுகநேத்ரா - Yuganethra 31. கந்தஸ்ரீ - Kandashri 32. ஸ்கந்தவி - Skandavee 33. தணிகைவேதா - Thanigaiveda 34. தமாயா - Thamaya 35. நேத்ரா - Nethra 36. க்ரித்திக்ஷா - Krithiksha 37. விசாலினி - Vishalini 38. யுகப்ரதா - Yugapradha 39. வினுநேத்ரா - Vinun...

ஆடி ஒன்று

🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️ *ஆடி மாதம் 2024 :-* *வருகின்ற 17-07-2024 புதன்கிழமை* *ஆடி மாதம் பிறக்கின்றது* *ஆடி மாதம் என்றாலே...* *"உலகை ஆளும் ஆதிபராசக்தி அங்காள ஈஸ்வரி அம்மனுக்கு தெய்வீக மாதம்"* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷         *🔘 ⪢┈ᗘM.S.Vlr.ᗛ┈⪡ 🔘* *ஆடி மாதம் என்று கூறும் போதே, அம்மன் கோவில்கள், திருவிழாக்கள், விரதங்கள், மேலும் சிறப்பு பூஜைகள் ஊர் முழுவதும் களைகட்டும்....* *ஆடி மாதம் என்பதை அம்மன் மாதம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு ஆடி மாதம் முழுவதும் பல விசேஷங்கள் உள்ளன...* 💜💙🩵🩷🧡💛💚🩵💙💜🩷 தமிழ் மாதங்களின் அடிப்படையில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்திராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது... தட்சிணாயண புண்ணிய காலத்தின் தொடக்கம், பண்டிகைகளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நாள், ஆடி மாதத்தின் முதல்நாள் ஆகும்.  இந்த ஆண்டு, ஆடி மாதம் 1 ஆம் தேதி, ஜூலை 17 ஆம் தேதி அன்று வருகிறது. 🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️ *ஆடி மாதத...