அவரது 25 வது வயதிலேயே, அமெரிக்காவில் இருக்கும் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொண்டார். 31 வது வயதில், உலகத்திலேயே மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனர் ஆனார். 38 வது வயதில் அமெரிக்காவின் 90% சுத்திகரிப்பின் நிறுவனர் ஆனார். தனது 50 வது வயதில் அந்த நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் ஆனார்.
அவருடைய மரணம் வரைக்கும், ராக்ஃபெல்லர்தான் உலகிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரராக இருந்தார். அவர் இளைஞனாக இருக்கும் போது, அவர் எடுக்கும் முடிவு; அவரது மனப்பாங்கு; அவர் மற்றவர்களுடன் வைத்திருந்த உறவு முறை – இவைதான் அவருடைய தனித்துவமான சக்தியையும், செல்வத்தையும் பெறுவதற்கு அவரை வடிவமைத்தன.
ஆனால் அவருடைய 53 வது வயதில், அவர் மிகவும் மோசமாக உடல் நிலை பாதிக்கப்பட்டார். அவரது உடல் முழுவதும் தாங்க முடியாத வலியால் வேதனைக்கு உள்ளானார்; அவரது தலைமுடி முழுவதுமாக உதிர்ந்து விட்டது.
உலகிலேயே ஒரே கோடீஸ்வரரான அவர், இந்த உலகில் எதை வேண்டுமானாலும் வாங்கும் சக்தி படைத்தவர் அவர்! முழுவதுமாக வேதனையால் துடித்துக் கொண்டு இருக்கும் அவரால், வெறும் காய்கறி சூப் மற்றும் பிஸ்கட் போன்ற மென்மையான பொருட்களைத் தவிர வேறு எதையும் அவரால் சாப்பிட்டு ஜீரணிக்க முடியவில்லை.
ராக்ஃபெல்லருடன் இருக்கும் அவர் உதவியாளர் அவரது நிலைமையைப் பற்றி, பின் வருமாறு எழுதினார்.
“அவரால் தூங்க முடியவில்லை; சிரிக்கவும் கூட முடியவில்லை; எதுவுமே செய்யமுடியாமல் ஒரு நடைபிணம் போல இருந்தார்.”
ராக்ஃபெல்லருடைய திறமைவாய்ந்த சொந்த மருத்துவர்கள் அவர் இன்னும் ஒரு வருட காலம்தான் உயிரோடு வாழமுடியும் என முன்கணிப்பு செய்தனர்.
வலியோடும், வேதனையோடும் அந்த ஒரு வருடம் மெதுவாகக் கடந்தது.
அவருடைய முடிவு நெருங்கிக் கொண்டிருக்கும் தருவாயில், ஒரு நாள் காலை விழித்தெழுந்ததும் அவருக்கு ஒரு மெய்யுணர்தல் ஏற்பட்டது. அதாவது, தான் சேர்த்து வைத்திருக்கும் இந்த செல்வத்தை தன்னுடன் அடுத்த உலகத்துக்கு கொண்டு செல்ல முடியாது என உணர்ந்தார்.
ஒட்டு மொத்த இந்த வணிக உலகத்தையே அடக்கி ஆண்ட இந்த மனிதனால், தன்னுடைய உடல் நலத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பதை உணர்ந்தார்.
அவருக்கு இப்போது ஒரே ஒரு வழிதான் இருந்தது. அவர் தன்னுடைய சட்ட நிபுணர்கள், கணக்காளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரையும் அழைத்தார். அவர்களிடம், தன்னுடைய சொத்துக்களை மருத்துவ மனைகள், ஆராய்ச்சி மையங்கள், தரும செயல்களுக்குக் கொடுக்கப் போவதாக அறிவித்தார்.
இவ்வாறாக ராக்ஃபெல்லர் அவருடைய அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளையின் உதவியால் பென்சிலின் கண்டுபிடிக்கப் பட்டு, அது மலேரியா, காச நோய் மற்றும் டிப்தீரியா முதலிய நோய்களை குணப்படுத்தியது.
ராக்ஃபெல்லரின் கதையில், மிகவும் வியக்கத்தக்க பகுதி இதுதான். அதாவது அவரது வருமானத்தில் ஒரு பகுதியை மற்றவர்களுக்காக திருப்பிக் கொடுத்த அந்த சமயத்திலேயே, அவரது உடலின் இயக்கங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் நல்ல முறையில் குணமடையத் தொடங்கினார்.
அந்த நிலையில், 53 வயதில் இறந்திருக்க வேண்டிய அவர் 98 வயது வரை உயிர் வாழ்ந்தார்.
நன்றியறிதலைக் கற்று அறிந்தவுடன் ராக்ஃபெல்லர் தனது செல்வத்தின் மிகப் பெரும் பகுதியைத் திருப்பிக் கொடுத்தார். இப்படி செய்தது அவரைக் குணப்படுத்த மட்டும் செய்யவில்லை; அவரை ஒரு பூரணத்துவமான மனிதனாகவும் மாற்றியது. குணப்படுத்துவதற்கான வழியை அவர் கண்டு பிடித்தார்; மேலும் முழுமையாக உணரவும் ஆரம்பித்தார்.
விவேகானந்தருடனான அவரது சந்திப்பு, முதன் முதலாக ஒரு பெரிய அளவிலான நன்கொடையை பொதுமக்களுக்கு கொடுக்கும்படி செய்தது. படிப்படியாக அவர் ஒரு சிறந்த நன்கொடையாளர் ஆனார். ராக்ஃபெல்லரின் கொடைத்தன்மையானது ஏழை மக்களுக்கும்; கஷ்டத்தில் உழன்று கொண்டிருக்கும் மக்களுக்கும் ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்று விவேகானந்தர் குறிப்பிட்டார்.
தன்னுடைய மரணத்திற்கு முன்பாக ராக்ஃபெல்லர் தன் நாட்குறிப்பில் பின் வருமாறு எழுதினார்.
“வேலை செய்வதற்கும், விளையாடுவதற்கும்
நான் கற்பிக்கப் பட்டேன்.
என்னுடைய வாழ்க்கை, நீண்ட வாழ்க்கை, மகிழ்ச்சியான விடுமுறை; முழுவதும் பணி முழுவதும் விளையாட்டு.
இந்த வழியாக என் கவலைகளை முற்றிலுமாக விட்டு விட்டேன். ஒவ்வொரு நாளும் கடவுள் எனக்கு நல்லதையே செய்தார்.“
பிறருக்குக் கொடுக்கும் மகிழ்ச்சியில்தான் வாழ்க்கையின் மகிழ்ச்சி இருக்கிறது.
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்.
அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு.
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை
இது நான்கு மறை தீர்ப்பு – என்ற கவிஞரின் பாடல் வரிகளும் ராக்ஃபெல்லரின் கதையை நிரூபணம் ஆக்குகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக