*465 நாட்கள் ✈️HFN கதை🌍 குழுவினரோடு.*
*‘முழுமையான தேடலர்‘*
ஒரு முறை, ஒரு குருவானவர் அவருடைய சீடர்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்தார். அவர் கூறினார், அன்பானவர்களே, முழுமையான தேடலர்களாக மாறுங்கள். அரை குறையாகவும், பயிற்சி முற்றுப் பெறாத தேடலர்களாகவும் இருந்து விடாதீர்கள்.“ முழுமையான மற்றும் அரைகுறையான சீடர்களைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்த பிறகு, அங்கே, ஒரு புதிய சீடருக்கு மிகவும் தீவிர விருப்பத்தால் அவரது மனதில் கேள்வி ஒன்று உதித்தது.
அவரால் விடை காண முடியாத நிலை. ஆகவே குருவிடம் கேட்டார், “குருஜி, எவ்வாறு முழுமையான தேடலராக மாறுவது? ”
குருஜி புன்சிரிப்போடு கூறினார்,“ மகனே, ஒவ்வொரு கிராமத்திலும் இனிப்பு செய்பவர் என ஒருவர் இருப்பதுண்டு; ஒவ்வொரு நாளும், அந்த இனிப்பு செய்பவர் வழக்கமாக வெவ்வேறு வகையிலான இனிப்புக்களை செய்வார்; ஒவ்வொன்றும் இன்னொன்றை விட மிகவும் தித்திப்பாக இருக்கும். அவர், அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களிலும் கூட, மிகவும் பிரபலமாகத் திகழ்ந்தார். மேலும் மக்கள் அடிக்கடி வந்து இவரது இனிப்புக்களை வாங்கி மகிழ்ச்சி அடைவார்கள்.
ஒரு நாள் அந்த இனிப்புக் கடைக்கு ஒரு கணவனும், மனைவியும் வந்தார்கள். அவர்களுடன் கூடவே ஒரு சின்னஞ்சிறு பையனும் வந்தான். அவன் மிகவும் துடுக்குத்தனம் உடையவனாக இருந்தான். சிறுவனின் அப்பா இனிப்புக் கடைக் காரரிடம் ‘புட்டு’ செய்து தரும்படி கேட்டுக் கொண்டார்.
பிறகு, அவர்கள் இருவரும் காத்துக் கொண்டிருக்க ஆரம்பித்தார்கள். ஆனால், அந்த சிறுவன் திரும்பத் திரும்ப வந்து, இனிப்பு செய்பவரிடம் “புட்டு தயாராகி விட்டதா?”என்று கேட்டுக் கொண்டு இருந்தான். அந்த இனிப்பு செய்பவர் கூறினார், “அது இன்னும் மாவு நிலையில்தான் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் கூடுதலாக நேரம் தேவைப் படும்.”
அவன் சிறிது நேரம் காத்திருந்து விட்டு பிறகு திரும்பவும் வந்து, இனிப்பு செய்பவரிடம், “நன்றாக வாசனை வந்து கொண்டு இருக்கிறது. இப்பொழுது புட்டு தயாராகி விட்டதா? என்று கேட்டான். இனிப்பு செய்பவர்,“ இல்லை; இப்பவும் மாவாகத்தான் இருக்கிறது. இன்னும் சிறிது நேரம் ஆகும்.“ என்று தெரிவித்தார். ஒன்று, இரண்டு, மூன்று .. …. என்று திரும்ப, திரும்ப அந்த சிறுவன் வந்து, அதையே திரும்பவும் கேட்டான்; அந்த இனிப்பு செய்பவர், இதனால், சிறிது எரிச்சல் அடையவும் செய்தார்.
அவர் ஒரு தட்டை எடுத்தார்; அதில் சிறிதளவு வேகாத புட்டை எடுத்து வைத்துக் கூறினார்,“ இதோ, கொஞ்சம் சாப்பிடு.”
அந்தப் பையன், அதனை சாப்பிட்டான்; சாப்பிட்டவுடன் சொன்னான், “புட்டு நன்றாகவே இல்லை !!
உடனே இனிப்பு செய்பவர்,“ உனக்கு நல்ல புட்டு சாப்பிட வேண்டும் என்கிற விருப்பம் இருக்கிறது என்றால், காத்திரு. உடனே போய் அங்கே அமைதியாக உட்கார்!” என்று கூறினார். இந்த முறை, அந்தப் பையன் அமைதியாக உட்கார்ந்தான்.
இந்த நிலையில் புட்டு தயாரானது; அந்த இனிப்பு செய்பவர், அதனை ஒரு தட்டில் வைத்து அலங்கரித்து அவர்களது மேசையில் வைத்து பரிமாறினார்.
இந்த தடவை அந்த பையன் புட்டை சாப்பிட்ட போது, அது மிகவும் சுவையாக இருப்பதைக் கண்டான். அவன் இனிப்பு செய்பவரிடம்,“ அங்கிள்! சிறிது நேரம் முன்பாக, இதை நான் சாப்பிட்ட போது, உண்மையிலேயே மோசமான சுவையாகவே இருந்தது. ஆனால், இப்பொழுது சரியான முறையில் வெந்து விட்டது. இப்போது எப்படி இவ்வளவு சுவையாக மாறியது? “
பிறகு அந்தக் கடைக்காரர் அன்போடு அவனுக்கு விளக்கிக் கூறினார். “குழந்தாய், நீ அந்த நேரத்தில் வற்புறுத்திக் கொண்டிருந்தாய்! அப்போது இந்த புட்டு சரியான முறையில் வேகாமல் மாவாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது சரியான முறையில் வெந்து விட்டது. மாவான புட்டைத் தின்பது நல்லது அல்ல. அப்படி சாப்பிட்டால், வயிறும் கூட கெட்டுப் போய் விடும். ஆனால், நன்றாக சமைத்து விட்ட பிறகு, இது சுவையாகவும், சத்து மிக்கதாகவும் மாறி விடுகிறது.
இப்போது குருஜி சீடரிடம் கேட்டார்,“ மகனே! முழுமையான மற்றும் அரைகுறையான சீடர்களுக்குள் இருக்கும் வேறுபாட்டை நீ புரிந்து கொண்டாய், அல்லவா? “
கைகளை குவித்தவாறே, அந்த சீடர், “குருஜீ, நான் சமைத்த மற்றும் சமைக்காத மாவு புட்டு பற்றி புரிந்து கொண்டேன். என்றாலும், இது ஒரு தேடலருக்கு எவ்வாறு பொருந்தும்?” என்று கேட்டார்.
குருஜி கூறினார், “ தேடலரும் கூட, அந்த இனிப்பு செய்பவரைப் போன்றவர்தான். இனிப்பு செய்பவர், அந்த புட்டை மிதமான தணலில் வைத்து சூடாக்கி மென்மையாக புட்டை தயார் செய்கிறார். இது போல, தேடலரும் அந்த தேடலரும் தன்னைத் தானே, நிலையான தியானம் மற்றும் பயிற்சி மூலமாக தன்னை சரி செய்ய வேண்டும். தேவையான பொருட்களை சேர்த்த பிறகும் கூட வெகு நேரம் வரை, அந்த புட்டு மாவாக இருக்கின்ற வரைக்கும் அதன் சுவையும் நன்றாக இருப்பது இல்லை.
இதே மாதிரியான வழியில், ஒரு தேடலர் எவ்வளவுதான் அறிவை சேகரித்தாலும் அல்லது எவ்வளவு மதச் சடங்குகளிலும் ஈடுபட்டுக் கொண்டாலும் சரி, பரவாயில்லை, தீவிரமான தியானத்தின் அந்த வெப்பத்தின் வழியாக அவரால் போக முடியவில்லை என்றால், அவர் அரைகுறையாக, வேகாத சமையலைப் போலத்தான் இருப்பார். அந்த புட்டு தயார் பண்ணுவது மாதிரி, நிலையான கவனத்துடன் அதை முறைப்படி சமைத்திட வேண்டும். அதே போல அந்த தேடலரும், எப்போதும், அவரது மனதை விழிப்போடு கவனித்திட வேண்டும். அந்த புட்டின் நிறம் சமைக்கும் போது மாறிக் கொண்டு இருக்கிறது; அப்போது அது ஒரு இனிமையான மணத்தைக் கொடுக்க ஆரம்பிக்கிறது. அது சாப்பிடும் போது இனிமையைக் கொடுக்கிறது. பிறகு, அது முறையாக சமைக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதே வழியில், அந்த தேடலரின் பயிற்சி இருக்கும் போது, இலட்சியமும் முடிவான ஒன்றாக மாறுகிறது. அந்த தேடலர் அன்பு என்னும் நறுமணத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்கும் போது, பிறகு இது குறிப்பாக தெரியும்படி செய்ய முடியும்; அதாவது அந்த தேடலர், முழுமையாகி விட்டார் என்பதாகும்.
அந்த தேடலரின் பயிற்சி முழுமையாகாத வரைக்கும், அவர் நிலையான தேடலில் இருக்கிறார். அவருக்கு எச்சரிக்கையும், விழிப்பும் தேவைப் படுகிறது அல்லது இந்த உலகத்தின் மாயைகள் மிகவும் ஆசை காட்டுகிறது; மேலும் அந்த தேடலரை எந்த நேரத்திலும், அவருடைய வழியில் இருந்து, தவறிட வைத்து, கொண்டு சென்று விடும்.
விவேகமானவர்கள் தங்களது இலட்சியத்தை, எல்லாமே என்று கருதி திருப்தி அடைவார்கள். ஆனால் பயிற்சி இல்லை என்றால், இதையும் கூட சாதிக்க முடியாது.
“பயிற்சிதான் ஒரு மனிதனை முழுமையானவன் என்று ஆக்குகிறது.”
கருத்துகள்
கருத்துரையிடுக