பிரவீன் பார்த்தி ஒரு ஆசிரியர். அவர் வழக்கமாக ஆரம்பப் பள்ளி வகுப்புக் குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுப்பவர். அவரது கிராமத்திலிருந்து அவரது பள்ளிக் கூடம் 7 கி.மீ. தொலைவில் இருந்தது. அந்தப் பள்ளிக் கூடத்தைச் சுற்றிலும் முழுவதுமே ஒன்றும் கிடையாது. மரம், தாவரம், செடி, கொடி, புல் பூண்டு எதுவுமே இல்லாமல் ஒரு பாலைவனம் போல தோற்றம் அளிக்கும்.
அவரது கிராமத்தில் இருந்து பள்ளியை சென்று அடைவதற்கு எப்போதாவது போக்குவரத்து வசதி கிடைக்கும். எனவே, அவர் அடிக்கடி வழக்கமாக யாரிடமாவது ‘லிப்ட்’ கேட்டுச் செல்வார். லிப்ட் கிடைக்காத அந்த நாட்களில் எல்லாம் அவர் நடந்தே செல்வார். நமக்குக் கடவுள் கொடுத்த இரண்டு கால்கள் இருக்கின்றன. எப்போது அது தேவையோ அதைப் பயன்படுத்தச் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டே நடந்து செல்வார்.
ஒவ்வொரு நாளும் லிப்டுக்காக காத்திருக்கும் போது, அவர் வழக்கமாக நினைப்பது உண்டு, “ஏன் இந்த அரசாங்கம் ஆட்களே வசிக்காத ஒரு பகுதியில், பள்ளிக் கூடத்தை திறந்து இருக்கிறார்கள்?
என்னுடைய கிராமத்தில் நான் ஒரு பலசரக்குக் கடையை ஆரம்பிப்பது இதை விட நல்லது “.
இந்த தினசரி துன்பத்தில் இருந்து விடுபடுவதற்காக பிரவீன் ஜி சிறிது சிறிதாக பணம் சேர்த்து, சேத்தக் கம்பெனியின் புதிய ஸ்கூட்டர் ஒன்றை வாங்கினார். ஒரு வாகனம் இல்லாமல் அவர் அதிக அளவில் கஷ்டத்தை எதிர் நோக்கியதால், அவர் ஒரு உறுதி மொழி எடுத்தார். யார் லிப்ட் கேட்டாலும் ஒரு போதும் மறுக்கவே கூடாது என்பதுதான் அது.
இதற்குப் பிறகும், யாராவது லிப்ட் கொடுக்க மறுத்தால், அது எப்படிப் பட்ட இக்கட்டான நிலைமை என்பதும் இவருக்குத் தெரியும். இப்போது, பிரவீன் ஜி அவரது புதிய ஸ்கூட்டரில்தான் பள்ளி செல்கிறார். போகும் வழியில் தினமும் யாராவது லிப்ட் கேட்டு அவருடன் செல்வார்கள். இதே போல திரும்பும் போதும், யாராவது ஒருவர் அவருடன் சேர்ந்து வருவார்கள்.
ஒரு நாள் பிரவீன் ஜி பள்ளியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, வழியில் ஒரு மனிதன் கையை அசைத்துக் கொண்டு பார்ப்பதற்கு லிப்ட் உடனே கேட்பது போல் இருந்தது வழக்கம் போல, பிரவீன் ஜி ஸ்கூட்டரை நிறுத்தினார். அந்த மனிதரும் பின் பக்கமாக ஏறி, எதுவுமே கூறாமல் உட்கார்ந்து கொண்டார். சிறிது தூரம் முன்னே சென்றவுடன், அந்த மனிதன் ஒரு கத்தியை எடுத்து பிரவீன் ஜியின் பின்புறம் வைத்து, “ உன்னிடம் உள்ள பணம் அனைத்தையும், இந்த ஸ்கூட்டரையும் என்னிடம் கொடுத்து விடு“ என்றான்.
இந்த அச்சுறுத்தலைக் கேட்டு, பிரவீன் ஜி மிகவும் பீதி அடைந்து விட்டார். உடனே ஸ்கூட்டரை நிறுத்தி விட்டார். அவரிடம் அதிக அளவு பணம் இல்லை. ஆனால் ஸ்கூட்டர் இருந்தது. தன்னுடைய உயிரை விடவும் மிக அதிகமாக அதன் மீது அன்பு வைத்திருந்தார். ஸ்கூட்டர் சாவியைக் கொடுத்து விட்டு, “ ஒரு சிறிய வேண்டு கோள் “ என்று பிரவீன் ஜி கூறினார்.
“என்ன? “ என்று கோபமாக அந்த மனிதன் பதிலுக்குக் கேட்டார்.
பிரவீன் ஜி பணிவோடு கூறினார், “இந்த ஸ்கூட்டரை எங்கே, எப்படி திருடினாய் என்பதை யாரிடமும் ஒரு போதும் கூறாதே. நானும் இந்த திருட்டைப் பற்றி எந்த விதமான புகாரும் கொடுக்கப் போவது இல்லை. என்னை நம்பு” என்று கூறினார்.
அந்த மனிதர் ஆச்சரியம் அடைந்து கேட்டார். “ஏன்” ?
இதயத்தில் பயத்தோடும், கவலை தோய்ந்த முகத்தோடும் பிரவீன் ஜி கூறினார் ,” இந்த சாலை மிகவும் மோசமானது; ஆள் நடமாட்டமே இல்லாதது; எப்போதாவதுதான் இங்கு ஏதோ ஒரு வாகனம் போகும். இது போன்ற சம்பவங்கள் இந்த சாலையில் நடக்கத் தொடங்கினால், இந்த சிறிதளவு லிப்ட் கொடுத்து உதவுவது கூட இல்லாமல் போய் விடும்.
மனதை நெகிழச் செய்யும் இந்த வார்த்தைகளை கேட்டவுடன், அந்த மனிதனின் இதயம் உருகத் தொடங்கியது. பிரவீன் ஜி அவன் பார்வையில் மிகவும் நல்ல மனித ஜீவனாக தோற்றம் அளித்தார். ஆனால் அவனுக்கு வாழ்க்கை நடத்த பணம் தேவைப் படுகிறது. “சரி” என்று கூறி விட்டு, ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்பினான்.
அடுத்த நாள் காலை பிரவீன் ஜி செய்தி தாளை எடுப்பதற்காக வாசலுக்கு வந்து, கதவைத் திறந்தார். ஸ்கூட்டர் வாசலில் நிற்பதைப் பார்த்தார். அவரது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஓடிச் சென்று, ஸ்கூட்டரை மிகவும் அன்போடு தடவிக் கொடுத்தார். தன்னுடைய குழந்தயை போல அதைத் தடவினார். ஸ்கூட்டரில் ஒரு சிறிய காகிதம் வைக்கப்பட்டு இருப்பதை பார்த்தார்.
அதில் பின்வருமாறு எழுதி இருந்தது :
“ எஜமானரே, உங்கள் வார்த்தைகளைக் கேட்டு என் இதயம் உருகி விட்டது என்று நினைத்து விட வேண்டாம் “.
நேற்று உங்களிடம் இருந்து உங்கள் ஸ்கூட்டரைத் திருடிய பின், அதை எடுத்துக் கொண்டு, கிராமத்திற்கு சென்றேன். அதனை, பழைய பொருட்களை வாங்கும் , காயலாங் கடை ஒன்றில் விற்பதற்கு கொண்டு சென்றேன். ஸ்கூட்டரைப் பார்த்தவுடனே நான் ஏதும் கூறுவதற்கு முன்பாகவே, “ஹே, இது எங்க எஜமான் ஸ்கூட்டரல்லவா !” என்றான்.
என்னைக் காப்பாற்றுவதற்காக அவனிடம், “ஆமாம். எஜமானர் மார்க்கெட்டில் சில வேலைகளுக்காக என்னை அனுப்பி இருக்கிறார்” என்று கூறினேன். ஆனால், அந்த மனிதன் நம்பாமல் என்னை சந்தேகப்படுவது எனக்குத் தெரிந்தது.
அங்கிருந்து தப்பித்துச் சென்று, ஒரு மிட்டாய்க் கடைக்குச் சென்றேன். எனக்கு மிகவும் பசியாக இருந்ததால், ஏதாவது வாங்கிச் சாப்பிடலாம் என நினைத்தேன். அந்தக் கடைக் காரரின் கண்கள் ஸ்கூட்டர் மீது விழுந்தவுடனே, அவர் உடனே கூறினார், “ஹே, என் எஜமானரின் ஸ்கூட்டர் அல்லவா !” இதைக் கேட்டவுடன் நான் பயந்து குழப்பத்தோடு பதில் கூறினேன், “ நான் இந்த பொருட்களை, அவரிடம் கொடுப்பதற்காக எடுத்துச் செல்கிறேன். அவர் வீட்டில் சில விருந்தினர்கள் வந்து இருக்கின்றார்கள்”. எப்படியோ அங்கிருந்தும் நல்ல முறையில் தப்பித்தேன்.
இந்த கிராமத்தை விட்டு வெளியே சென்று வேறு எங்காவது, இதை விற்று விடலாம் என நினைத்தேன். சிறிது தூரம் நான் சென்றவுடன், நகர்ப் புறத்தில் என்னை ஒரு போலீஸ் காரர் பிடித்துக் கொண்டார்.
அவர் கோபத்தோடு ஆரம்பித்தார்," நீ எங்கு சென்று கொண்டு இருக்கிறாய்? உனக்கு எஜமானரின் இந்த ஸ்கூட்டர் எப்படிக் கிடைத்தது? “ எப்படியோ அவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அங்கிருந்து ஓடிப் போய் விட்டேன்.
ஓடிக் கொண்டே இருந்ததால் நான் களைப்பு அடைந்தேன்!
எஜமானரே -- இது உங்களுடைய ஸ்கூட்டரா அல்லது அமிதாப் பச்சனுடையதா ? எல்லோருமே இதைக் கண்டு பிடித்து விடுகிறார்கள். உங்களுக்கு சொந்தமானதை உங்களிடமே ஒப்படைத்து விடுகிறேன். இதை விற்பதற்கு எனக்கு பலமும் இல்லை, தைரியமும் இல்லை. நான் உங்களுக்கு ஏற்படுத்திய கஷ்டங்களுக்காக என்னை மன்னித்து விடுங்கள். அந்த கஷ்டத்தை ஈடு செய்யும் பொருட்டு, நான் ஸ்கூட்டரின் டேங்கை மீண்டும் முழுவதுமாக, நிரப்பி விட்டேன்.
இந்தக் கடிதத்தை படித்தவுடன், பிரவீன் ஜி புன்சிரிப்போடு கூறினார்,“நல்ல செயல் எப்போதும் சுற்றிக் கொண்டே இருக்கும்."
கருத்துகள்
கருத்துரையிடுக