முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

U.K.G. யில் சேர்ப்பதற்கான மிகவும் சவால் நிறைந்த ஒரு நேர்முகப் பேட்டி

 இந்த நிகழ்ச்சி பெங்களூரில் இருக்கும் ஒரு பள்ளிக் கூடத்தில்
நடந்தது. அந்த பள்ளியில் U.K.G வகுப்பில் சேர்வதற்கான ஒரு அனுமதி கிடைப்பது மிகவும் இயலாத காரியம் ஆகும். 

 அந்தக் குழந்தைக்கு நம்மை ஏன் இங்கு அழைத்துக் கொண்டு வந்து இருக்கிறார்கள் என்பதை புரியமுடியவில்லை. 

 அந்த அறையில் பெற்றோர்கள், ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் (அவர் ஒரு பெண்) ஆகியோர் இருந்தனர். முதல்வர் அந்த குழந்தையிடம் உரையாட ஆரம்பித்தார். மொழி ஆங்கிலம்தான்!    

 இது எப்போதோ நடந்த ஒரு மறக்க முடியாத நேர்முகத் தேர்வு. தேர்வு தொடங்கியது.

 உன்னுடைய பெயர் என்ன?

 “சீதா”

 “நல்லது. உனக்குத் தெரிந்த சிலவற்றை எனக்குக் கூறு.”

 “எனக்கு நிறைய தெரியும். உங்களுக்கு எது வேண்டும்? கூறுங்கள்”.

 அவளது பெற்றோர்கள் பயந்தனர். இந்த பதில் ஒன்றே, அட்மிஷனை மறுப்பதற்குப் போதுமானது. சீதாவின் அம்மா, அந்த சூழ்நிலையை மாற்றிட இடையில் குறுக்கிட்டாள். முதல்வர், அவளைத் தடுத்துவிட்டார்.

 குழந்தையின் பக்கம் திரும்பி, “உனக்குத் தெரிந்த ஏதாவது கதையோ அல்லது பாடலோ கூறு” என்றார்.

மீண்டும் குழந்தை; எதை நீங்கள் விரும்புகிறீர்கள்? பாட்டா அல்லது கதையா?.

“சரி, தயவு செய்து எனக்கு ஒரு கதை கூறு.”

“நீங்கள் எதைக் கேட்க விரும்புகிறீர்கள்? நான் வாசித்ததையா அல்லது நான் எழுதியதையா ?”

ஆச்சரியம் அடைந்த முதல்வர்,“ஓ! நீ கதை கூட எழுதுவாயா?“ என்று கேட்டார்.    

“ஏன், நான் எழுதக் கூடாதா?”

இப்போது அங்கிருந்த ஒவ்வொருவரும் வியப்பில் ஆழ்ந்தனர். ஆனால் முதல்வரே இந்த பதிலால் ஈர்க்கப்பட்டார். இந்த மாதிரியான ஒரு கதையை அவர் வாழ்க்கையில் இது வரைக் கேட்டது இல்லை.

“சரி. ஸ்ரீலங்காவிற்காக நீ எழுதின கதையை எனக்குக் கூறு “ என்றார்.

ஒரு நாள் ராவணன் சீதாவைக் கடத்திச் சென்று, அவளை ஸ்ரீலங்காவிற்குக் கொண்டு சென்றான்.    

கதையின் ஆரம்பம் மனதை ஈர்ப்பதில் தோல்வி அடைந்தது. ஆயினும் முதல்வர் குழந்தையைத் தொடர்ந்து கூறும்படி தைரியப்படுத்தினார்.    

சீதையை மீட்டு வருவதற்காக இராமன் அனுமானிடம் உதவி கேட்டார். அனுமானும் இராமருக்கு உதவி செய்ய சம்மதம் தெரிவித்தார்.

இப்போது அனுமான் அவரது நண்பரான ஸ்பைடர் மேனை அழைத்தார். கதையில் இப்படி ஒரு திருப்பம் வருவதை யாரும் எதிர்பார்க்கவில்லை!
ஏன்?
ஏனென்றால், இந்தியாவுக்கும், ஸ்ரீலங்காவிற்கும் இடையில் நிறைய மலைகள் இருந்தன. ஸ்பைடர் மேன் நம்மிடம் இருந்தால், அவனுடைய கயிற்றின் உதவியால் நாம் லகுவாக சென்று விடலாம். மிக உற்சாகத்தோடு அந்தக் குழந்தை கதையை விவரித்துக் கூறினாள். 

முதல்வர் சொன்னார், “ஆனால், ஹனுமானால் பறக்க முடியுமே, சரிதானே ?”

“ஆமாம். ஆனால், அவர் ஒரு கையில் சஞ்சீவி மலையை வைத்து இருப்பதால் அவரால் வேகமாகப் பறக்க முடியாது” என்று சீதா தன் அழகான குரலில் பதில் அளித்தாள். இது ஒரு வெளிப்படையான பதில் ஆகும்.  

அறையில் இருந்த அனைவரும் பேச இயலாமல் அமைதியாக இருந்தனர்; அறையில் அமைதி தவழ்ந்து கொண்டிருந்தது. சிறிது நேரம் ஆனதும், சீதா, “நாம் தொடரவா அல்லது வேண்டாமா ?” என்று கேட்டாள்.

“ சரி, தயவு செய்து தொடரு !”

ஹனுமானும், ஸ்பைடர் மேனும் இலங்கைக்குப் பறந்து சென்று சீதாவை மீட்டனர். சீதா இருவருக்கும் நன்றி கூறினாள்.    

“ஏன் ?”
உங்களுக்கு யாராவது உதவி செய்தால், நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். வேகமாக பதில் சொல்லி விட்டு, கதையைத் தொடர்ந்தாள். சீதா அனுமானிடம் ஹல்கை கூப்பிடும்படி கேட்டுக் கொண்டார்.  

திரும்பவும் அனைவரும் திகைத்தனர். கதை கேட்டுக் கொண்டு இருப்பவர்களின் ஆர்வத்தை அவள் உணர்ந்தாள். “சீதா இப்போது அங்கு இருக்கிறாள், அவளை ராமரிடம் திரும்பவும் பாதுகாப்பாக சேர்க்க வேண்டும்”. எனவே அவள் ஹல்கை அழைத்தாள்.

சக்தி வாய்ந்த அரக்கன் ஹல்க் சீதாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்று அந்தக் குழந்தை கற்பனை செய்து கூறியதைக் கேட்டு முதல்வர், அதனால் ஈர்க்கப்பட்டார். மிகவும் ஆர்வமாக, “என்ன? ஆனால் ஹனுமானால் சீதாவை தூக்க முடியுமே, சரிதானே?” என்றார்.

“ ஆம்.” ஆனால், ஹனுமான் ஒரு கையில் சஞ்சீவி மலையையும், மற்றொரு கையில், ஸ்பைடர் மேனையும் வைத்திருந்தார் “ என்று சீதா பதில் கூறிக் கொண்டு, அவள் கூறிய படியே கைகளை வைத்து, நடித்தும் காட்டினாள்.

ஒருவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்த சமயத்தில் அவள் அம்மா சீதாவிடம் அது சஞ்சீவனி என்று திருத்தினாள்.

“சரி ! ஆகவே அவர்கள் அனைவரும் இந்தியாவுக்குப் புறப்படத் தொடங்கும் போது, அவர்கள் என் நண்பன் அக்ஷே – யை சந்தித்தார்கள் என்று சீதா தொடர்ந்தாள்“.

“ அக்ஷே எப்படி இப்போது அங்கு சென்றான் “ என்று முதல்வர் புன்சிரிப்போடு கேட்டார்.

“ஏனென்றால், இது என்னுடைய கதை. நான் யாரையும் கொண்டுவர முடியும்“ என்று நம்பிக்கையோடு சீதா பதில் கூறினாள்.

முதல்வர் கோபமே அடையவில்லை; கதையின் அடுத்த திருப்பத்திற்காகக் காத்திருந்தார்.

“ பிறகு, அனைவரும் இந்தியாவுக்குப் புறப்பட்டு, பெங்களூரில் இருக்கும் மெஜஸ்டிக் பஸ் நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தார்கள் !”

“ஏன் அனைவரும் மெஜஸ்டிக் பஸ் நிறுத்தத்திற்கு வந்தனர் ?” என்று முதல்வர் கேட்டார்.

“ஏனென்றால், அவர்களுக்கு வழி மறந்து விட்டது. ஹல்க்கிற்கு ஒரு கருத்து தோன்றியது; அவர் டோராவை அழைத்தார் “.        

“டோரா என்றால் யார் ?” அந்த அறையில் இருந்த சில பேருக்கு, இந்த உயிருள்ள கதா பாத்திரங்கள் ( Animated Characters) பற்றி கேள்விப் பட்டதே இல்லை. இப்போதுதான் டோராவைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்கள். பயணம் செய்வதற்கு டோரா மிகவும் பயன் படுவாள், வரை படங்களை பரிந்துரைத்து வழி காட்டுவாள். இந்தக் கதையில் அவளின் பங்கு, ‘அவள் ஒரு வழி காட்டி ‘.

டோரா வந்தாள்; அவள் சீதாவை மல்லேஸ்வரத்தில் உள்ள 5 வது குறுக்குச் சந்தில் கொண்டு விட்டாள்.“ இவ்வளவுதான்“.

அவள் புன்சிரிப்போடு கதையை முடித்தாள்.

முதல்வர் அவளிடம், “ஏன் மல்லேஸ்வரம், 5 வது குறுக்குச் சந்து ?”என்று கேட்டார்.

“ஏனென்றால், சீதா அங்குதான் வசிக்கிறாள். நான் தான் சீதா“ என்று சந்தோஷமாகக் கூறினாள்.

முதல்வர், குழந்தை கூறிய கதையால், ஈர்க்கப்பட்டு அவளை ஆரத் தழுவிக் கொண்டார். UKG அட்மிஷனும் கொடுக்கப்பட்டது; டோரா பொம்மையும் பரிசாகக் கொடுக்கப்பட்டது.

 குழந்தைகளால் உண்மையாகவே நம்மை வியப்படைய செய்ய முடியும். அவர்களது ஆக்க பூர்வமான செயல் திறனை நாம் முளையிலேயே கிள்ளி விடுகிறோம். நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ, அதை அவர்களைச் செய்ய வைக்கிறோம். அவர்கள் கண்ணோட்டத்தில் இருந்து எதையுமே நாம் பார்ப்பது இல்லை.  

ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்கள் சொந்த வழியிலேயே எதையும் செய்வதற்கு நாம் சுதந்திரம் கொடுக்க வேண்டும்; அவர்களது கனவுகள் உண்மையாவதை கவனிக்க வேண்டும் !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...

குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*      𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝟬𝟴, 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟰 *╚════★🄲🅁🄺★════╝* *🔹🔸இன்றைய சிந்தனை..* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *🧿'' குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.* *🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️* . *🌹✍️* *♻️குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.* *♻️குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;* *♻️பெற்றக் குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும்.* *♻️ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில் நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்.* *♻️உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யைப் பார்த்த அவரது தாயார் மிகவும் துடிதுடித்து விட்டார்..* *மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,* *♻️'' யார் உன்னை இப்படிக் காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..* *♻️அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்...