முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வித்தியாசமான கொண்டாட்டம்

 அன்று ஒரு நாள் காலை ஆறு மணி. வரப்போகின்ற தீபாவளிக் கொண்டாட்டத்தைப் பற்றி நான் கனவு கண்டு கொண்டு இருந்தேன். உடனே என் அம்மா,“மனன், எழுந்திரு “என அழைத்தாள். வேண்டா வெறுப்பாக எழுந்து, பள்ளிக்குச் செல்லத் தயாரானேன்.    

   நண்பர்களே, மேலும் தொடர்வதற்கு முன்னால், என்னை நானே அறிமுகப்படுத்திக் கொள்கின்றேன். என்னுடைய பெயர் மனன். நான் ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டு இருக்கிறேன். இதுதான் என்னைப் பற்றிய கதை!    

  எல்லா பண்டிகை விழாக்களிலும், எனக்கு மிகவும் விருப்பமானது தீபாவளிப் பண்டிகைதான். ஏனென்று உங்களுக்குத் தெரியுமா? தீபாவளி விழாவில்தான் தீபங்கள், புதிய உடைகள், பட்டாசுகள், வெடிகள், தின்பதற்கு இனிப்பான பலகாரங்கள் மற்றும் விடுமுறை இவை அனைத்தும் கிடைக்கின்றன.   

  நான் பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டு இருக்கும் போது, அப்பா என்னை அழைத்து, “ மனன்! இன்று உனக்கு புதிய உடை வாங்கப் போகலாமா?” என்று கேட்டார். 

  “சபாஷ்!! “ நான் மகிழ்ச்சியோடு கத்தினேன். ஆகட்டும் அப்பா! என்ன வாங்க வேண்டும் என்பதை ஏற்கனவே நான் முடிவு செய்து விட்டேன்.

  குதூகலமான உணர்வோடு நான் பள்ளி வாகனத்தில் ஏறினேன். அந்த நாள் முழுவதும் பள்ளியில் அமைதி இல்லாமல் தவித்தேன். மேலும், “எப்போதுதான் மணி அடிக்கும் ?” என நினைத்துக் கொண்டே இருந்தேன்.

   இறுதியாக மாலை நேரம் வந்தது ! அப்பா வரும் போது, நான் சொசைட்டி காம்பவுண்டில் விளையாடிக் கொண்டு இருந்தேன். வழக்கத்தை விட சீக்கிரமாகவே வந்து விட்டார். “அப்பா, நாம் கடைக்குச் செல்லலாம் அல்லவா ? நான் ரெடி !” என்றேன்.    

 “ஆகட்டும் மகனே! நாம் போவோம்” என்று அப்பா பதில் கூறினார்.

  கடைத் தெருவில், என் லிஸ்டில் குறிப்பிட்டு வைத்திருந்த, எனக்குத் தேவையான அனைத்தையும் விரைவாக சேகரித்துக் கொண்டு வெளியே வந்தேன். கிட்டத்தட்ட நான் விரும்பிய அனைத்தையும் வாங்கி விட்டேன்.     
  வண்ணமயமான, வெளிச்சமான விளக்குகள், சின்ன அகல் விளக்குகள், அலங்கரிக்கும் ஒளிக் கற்றைகள் என கடைகளில் இருப்பதைப் பார்த்துக் கொண்டே வரும் போது, திடீரென்று நான் ஒரு சிறிய பையன் மீது மோதியதில், என் பையும் கீழே விழுந்தது. துணிகள் எல்லாம் பையில் இருந்து வெளியே விழுந்தன.    

  நாம் வேகமாகக் குனிந்து, அதை எடுத்தேன். அந்த சிறிய பையன், என்னுடைய துணியையும், ஷூவையும் பார்த்ததும் அவன் முகத்தில் வியப்பும், ஆச்சரியமும் தோன்றியதை நான் கவனித்தேன். அவன் இது வரைக்கும் இந்த மாதிரியான விலை அதிமான துணிகளை பார்த்தது இல்லை என்று தோன்றியது. அவன் குனிந்து துணியை எடுத்தான்.

  அவன் எடுத்துக் கொள்வானோ என்ற பாதுகாப்பு அற்ற ஒரு உணர்வில், நான் அவனிடம் இருந்து அதைப் பறித்து வேகமாக என் பையில் போட்டேன். நான் அங்கே நின்று அவனை பார்த்துக்கொண்டு இருக்கும் போது, அந்தப் பையனைப் பற்றி கொஞ்சம் வித்தியாசமாக உணர்ந்தேன். அவனது உடைகள் கந்தலாய் இருந்தன; அவனது கைகளிலும், கால்களிலும் ஊமைக் காயங்களாக இருந்தன; அவன் நிலைமையைப் பார்த்தால், அவன் கொஞ்ச நாட்களாகவே சாப்பிட்டிருக்க மாட்டான் என்பது போல் இருந்தது.    

  “மனன்! வேகமாக வா! நாம் போக வேண்டும் என்று அப்பா கத்தினார். அவர் எனக்காகக் காத்துக் கொண்டு இருந்தார்! ஆகட்டும் அப்பா! இதோ நான் வந்து விட்டேன் “.    

  வீட்டை அடைந்ததும், என்னுடைய டின்னரை வேக வேகமாக விழுங்கி விட்டு திரும்பவும் விளையாடுவதற்கு, வெளியே சென்றேன்.    

  விளையாடிக் கொண்டு இருக்கும் போது, நான் அதே பையனையும், அவனுடைய மற்ற நண்பர்கள் அவனை சுற்றி நிற்பதையும் பார்த்தேன். அவர்கள் அனைவருமே, விசித்திரமான கந்தல் ஆடைகளை அணிந்து இருந்தார்கள் என்பதையும் கவனித்தேன்.

  ஒரு நொடி, மோசமாக உணர்ந்தேன். நான் தொடர்ந்து விளையாடத் தொடங்கினேன். ஆனாலும், நான் எனக்குள் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தேன். நான் உற்சாகமாகவும், வசதியாகவும் இருப்பது எனக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தியது. எனக்கு எண்ணிக்கையில் அடங்காத அளவு துணிமணிகள் என்னுடைய அலமாரியில் நிறைந்து வழிந்தன. அது குறித்து நான் பெருமையாகவும் இருக்கின்றேன்.    

  எனது மனசாட்சி என்னைக் குத்துவதை என்னால் உணர முடிந்தது. “மனன், தயவு செய்து இந்த உணர்வை அலட்சியப் படுத்தாதே!” நான் எனக்குள் நினைக்கத் தொடங்கினேன், “எனக்கு வசதிகள் எல்லா வகையிலும் இருக்கின்றன. ஆனால் சில பேருக்கு ஒரு சிறிய வசதி கூட இல்லாமல் இருக்கின்றன. நேற்று சந்தித்த அந்தப் பையனைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். வாழ்க்கையில் அடிப்படையான தேவைகள் கூட அவனுக்கு இருக்கவில்லை. என் இதயம் என்னிடம் கேட்டது, “உன்னுடைய புதுத் துணிகளைப் பார்த்து அவன் எப்படி மகிழ்ச்சி அடைந்தான் என்பதை நீ பார்க்க வில்லையா? இப்பவும் உன்னால் இதையெல்லாம் அலட்சியப்படுத்த முடியுமா?”.

  “நான் இது வரைக்கும் பயன் படுத்தாத மிக அதிகமான துணிமணிகள் என்னிடம் இருக்கின்றன. அவற்றை நான் சிறந்த வழியில் பயன்படுத்தவில்லை ?”என்று நான் எனக்குள் நினைத்தேன். நான் எனது தாத்தாவிடம் சென்று எனக்கு ஏற்பட்ட அனுபவம் முழுவதையும் விவரித்தேன்.

  தாத்தா சிறிது நேரம் மவுனமாக இருந்தார். பிறகு இந்த முழு சம்பவமும் எனக்கு ஒரு சுலோகத்தை ஞாபகத்திற்குக் கொண்டு வருகிறது. தாத்தா அந்த ஸ்லோகத்தைக் கூறினார்.     

- *அசதோ மா சத்கமாயா* –
- *தா மசோமா ஜ்யோதிர் ஜெர்மயா* –

  இந்த ஸ்லோகத்தின் பொருள் என்ன? என்று கேட்டேன்.

  தாத்தா, “இது பரம்பொருளை நோக்கிய ஒரு பிரார்த்தனை “ என்று கூறினார். நான் தவறுகளில் இருந்து உண்மையை நோக்கி முன்னேறுகின்றேன்; இருட்டில் இருந்து ஒளியை நோக்கி செல்கிறேன். தீபாவளி விழாவும் இதையே நமக்கு நினைவு படுத்துகின்றது. இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி செல்வதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

 “நம்முள் இருக்கும் இருட்டுத் தன்மை என்பது என்ன ?” என்று அறிய மிக ஆர்வமாக இருந்தேன்.    

  “முக்கியமாக நமது அறியாமை, சோம்பேறித் தனம், செயல் அற்ற நிலை மேலும் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது ஆகும். நாம் நம்முடைய செயல்கள், எண்ணங்கள் பற்றி எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கிறோம். ஆனால், நம் இதயத்தில் அன்பு இருப்பதைப் பற்றி விழிப்புணர்வோடு இருக்கிறோமா ?” என்று தாத்தா கூறினார்.     

  நான் அவரைத் தொடர விடாமல் தடுத்து நிறுத்தி இடையில் குறுக்கீடு செய்தேன்,“ எப்படி இருட்டுத்தன்மையில் இருந்து வெளிவருவது?”

 தாத்தா புன்சிரிப்புடன் தொடர்ந்தார், “இதயம் அன்பாலும், பாசத்தாலும் நிரம்பி வழியும் போது மட்டும்தான் இது நடக்கும். பிறகு நமக்குள் சிறிது ஒளியையும், நம்மால் கொண்டு வர முடியும் “. 

  தாத்தாவுடனான இந்த உரையாடல் தீபாவளி பற்றிய வித்தியாசமான பொருளை எனக்குப் புரிய வைத்தது. இந்த எண்ணங்களால் அன்று இரவு முழுவதும் என்னால் தூங்கவே முடியவில்லை.    

  அடுத்த நாள் காலை எழுந்தவுடனேயே தாத்தாவிடம் சென்று உற்சாகமாகக் கூறினேன் ,”இந்த தீபாவளியை வித்தியாசமான முறையில், கொண்டாட விரும்புகிறேன். அப்பா, அம்மா இல்லாத குழந்தைகளோடு இந்த தீபாவளியை கொண்டாடப் போகிறேன் “.

  தாத்தாவும் இதற்கு சம்மதம் தெரிவித்தார். “மிகவும் நல்லது, மனன்! இது மிகச் சிறந்த கருத்து !” 

  குடும்பத்தினர் அனைவரும் இதைக் கேட்டு, மகிழ்ச்சி அடைந்தார்கள். மகிழ்ச்சி இல்லம் (Happy Home) என்ற இடத்திற்கு செல்ல தீர்மானித்தார்கள்.    

முடிவாக, தீபாவளி அன்று நாங்கள் இனிப்புக்கள், உடைகள், மேலும் பரிசுப் பொருள்களோடு அங்கு சென்றோம். நாங்கள் சென்ற சிறிது நேரத்திலேயே அந்த மகிழ்ச்சி இல்லம் முழுவதும், மகிழ்ச்சி, சிரிப்பு, பேரானந்தம் மேலும் கொண்டாட்டங்களால் நிரம்பி வழிந்தது. அந்த கள்ளமில்லாக் குழந்தைகள் பாட்டுப் பாடிக் கொண்டும், கதைகளைப் பகிர்ந்து கொண்டும், நகைச் சுவைகளை உதிர்த்துக் கொண்டும் மேலும் விளையாடிக் கொண்டும் சிறந்த முறையில் நேரத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். சிறிது நேரத்தில் அந்தக் குழந்தைகளில் ஒருத்தி என்னை நோக்கி வந்து , “சகோதரனே, உங்களுக்கு மிகவும் நன்றி ! நாங்கள் இவ்வளவு மகிழ்ச்சியையும் வேடிக்கையையும் இதற்கு முன் ஒரு போதும் அனுபவித்தது இல்லை. உண்மையாகவே நீங்கள் இந்த தீபாவளியை எங்கள் அனைவருக்கும் வித்தியாசமாக மாற்றி 
விட்டீர்கள்“ என்று கூறினாள்.    

  அந்தக் குழந்தையிடம் இருந்து இதனைக் கேட்டவுடன் என் மனம் குளிர ஆரம்பித்தது; என்னுடைய இதயமும் திருப்தி அடைந்தது.

  இறுதியாக நாங்கள் விடை பெறும் நேரம் வந்தது. அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி விட்டு, விரைவில் திரும்பவும் வருவோம் என்ற உறுதி மொழியையும் கொடுத்தோம். வீட்டுக்கு வருகின்ற போது எனக்குள் ஒரு வினோதமான உற்சாகம் ஏற்பட்டது. இதற்கு முன் இப்படி ஒரு நிலையை நான் ஒரு போதும் உணர்ந்தது இல்லை. இது ஒரு தனித்துவம் மிக்க அனுபவமாக எனக்கு இருந்தது. இது வரையிலும், இல்லாத வித்தியாசமான தீபாவளி அனுபவம் இது. 

  இதுதான், நான் இது வரைக்கும் கொண்டாடியதில் மிகச் சிறந்த தீபாவளி.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது

*ப்ளீஸ்*  என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா..  ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை.. மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!!  கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? கடைசியில்தான் தெரியும் நான் விரும்பியது 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்..  இப்படி அம்மாவின் பல கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்!! வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது.. இறுதியில் தோற்று போனது ஒன்றுக்கும் உதவாத என் பிடிவாதமாகத்தான் இருந்திருக்கிறது!! கிச்சனில் அம்மா வியர்க்க விறுவிறுக்க எங்களுக்காக சுயமரியாதையை தொலைத்து நின்றிருந்த தருணங்கள் ஏராளம்.. *துணி காயப்போடு,* *பீரோவை அடுக்கி வை..* *மதியானத்தில் தூங்காதே..*  *எப்ப பாரு என்ன டிவி?*  *புக் எடுத்து படி...* *வீட்டு வேலை செய்*, ...

பெண் குழந்தைகளுக்கான அழகான 68 முருகன் பெயர்கள்

1. சஷ்டிகா - Sastika 2. விசாகா - Visaka 3. க்ரித்திகா - Krithika 4. சக்திதாரா - Sakthithara 5. கார்த்திகா - Karthika 6. மயூரி - Mayuri 7. எழில்வெண்பா - Ezhilvenba 8. மயிலினி - Mayilini 9. விசாலினி - Visalini 10. வேலவர்ஷினி - Velavarshini 11. நித்ரா - Nithra 12. அகநேத்ரா - Aganethra 13. அகமித்ரா - Agamithra 14. சஷ்டிப்ரதா - Sastiprada 15. சஷ்டிப்ரகதா - Sastipragatha 16. ப்ரணவி- Pranavi 17. மகிழ்வதனா - Magizhvadana 18. எழில்நேத்ரா - Ezhilnethra 19. யுகஸ்ரீ - Yugashree 20. பிரபவா - Prabhava 21. ஆத்மபுவிகா - Atmabhuvika 22. குகஸ்ரீ - Guhasree 23. மேகதர்ஷினி - Megadharshini 24. இளமயிலி - Ilamayili 25. வினுமித்ரா - Vinumithra 26. ஜயத்சேனா - Jeyatsena 27. வினுப்ரியா- Vinupriya 28. முகில்வெண்பா - Mukilvenba 29. எழில்மித்ரா - Ezhilmithra 30. யுகநேத்ரா - Yuganethra 31. கந்தஸ்ரீ - Kandashri 32. ஸ்கந்தவி - Skandavee 33. தணிகைவேதா - Thanigaiveda 34. தமாயா - Thamaya 35. நேத்ரா - Nethra 36. க்ரித்திக்ஷா - Krithiksha 37. விசாலினி - Vishalini 38. யுகப்ரதா - Yugapradha 39. வினுநேத்ரா - Vinun...

ஆடி ஒன்று

🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️ *ஆடி மாதம் 2024 :-* *வருகின்ற 17-07-2024 புதன்கிழமை* *ஆடி மாதம் பிறக்கின்றது* *ஆடி மாதம் என்றாலே...* *"உலகை ஆளும் ஆதிபராசக்தி அங்காள ஈஸ்வரி அம்மனுக்கு தெய்வீக மாதம்"* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷         *🔘 ⪢┈ᗘM.S.Vlr.ᗛ┈⪡ 🔘* *ஆடி மாதம் என்று கூறும் போதே, அம்மன் கோவில்கள், திருவிழாக்கள், விரதங்கள், மேலும் சிறப்பு பூஜைகள் ஊர் முழுவதும் களைகட்டும்....* *ஆடி மாதம் என்பதை அம்மன் மாதம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு ஆடி மாதம் முழுவதும் பல விசேஷங்கள் உள்ளன...* 💜💙🩵🩷🧡💛💚🩵💙💜🩷 தமிழ் மாதங்களின் அடிப்படையில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்திராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது... தட்சிணாயண புண்ணிய காலத்தின் தொடக்கம், பண்டிகைகளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நாள், ஆடி மாதத்தின் முதல்நாள் ஆகும்.  இந்த ஆண்டு, ஆடி மாதம் 1 ஆம் தேதி, ஜூலை 17 ஆம் தேதி அன்று வருகிறது. 🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️ *ஆடி மாதத...