🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️
*ஆடி மாதம் 2024 :-*
*வருகின்ற 17-07-2024 புதன்கிழமை*
*ஆடி மாதம் பிறக்கின்றது*
*ஆடி மாதம் என்றாலே...*
*"உலகை ஆளும் ஆதிபராசக்தி அங்காள ஈஸ்வரி அம்மனுக்கு தெய்வீக மாதம்"*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*🔘 ⪢┈ᗘM.S.Vlr.ᗛ┈⪡ 🔘*
*ஆடி மாதம் என்று கூறும் போதே, அம்மன் கோவில்கள், திருவிழாக்கள், விரதங்கள், மேலும் சிறப்பு பூஜைகள் ஊர் முழுவதும் களைகட்டும்....*
*ஆடி மாதம் என்பதை அம்மன் மாதம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு ஆடி மாதம் முழுவதும் பல விசேஷங்கள் உள்ளன...*
💜💙🩵🩷🧡💛💚🩵💙💜🩷
தமிழ் மாதங்களின் அடிப்படையில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்திராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது...
தட்சிணாயண புண்ணிய காலத்தின் தொடக்கம், பண்டிகைகளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
சூரியன் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நாள், ஆடி மாதத்தின் முதல்நாள் ஆகும்.
இந்த ஆண்டு, ஆடி மாதம் 1 ஆம் தேதி, ஜூலை 17 ஆம் தேதி அன்று வருகிறது.
🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️
*ஆடி மாதத்தில்தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான தினங்கள் வருகின்றன:-*
*ஆடிக் கூழ்,*
*ஆடி செவ்வாய்,*
*அடி வெள்ளி,*
*ஆடிப்பதினெட்டு,*
*ஆடிப்பூரம்,*
*ஆடிப்பௌர்ணமி,*
*அடி அமாவாசை,*
*ஆடி தபசு,*
*ஆடி கிருத்திகை,*
*ஆடிப் பெருக்கு,*
*ஆடி வரலட்சுமி விரதம்,*
*ஆடி தேங்காய் சுடுதல்,*
*ஆடி வாஸ்து பூஜை,*
*ஆடி கருட பஞ்சமி,*
*ஆடி கோபத்ம விரதம்....*
என பல்வேறு தெய்வீக சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன...
🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹
ஆடி மாதம் முக்கிய விரத, விசேஷ மற்றும் வாஸ்து நாட்கள் தெரிந்து கொள்வோம் :-
தமிழ் மாதங்களின் நான்காவது மாதமாக வரும் ஆடி மாதம் விரதம், தள்ளுபடி, தர்ப்பணம் உள்ளிட்ட பல விஷயங்களுக்காக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாதமாகும்.
இந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 16ம் தேதி வரை ஆடி மாதம் உள்ளது.!
🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕
அம்மன் வழிபாட்டிற்குரிய
ஆடி மாதத்தில், பெருமாளுக்குரிய ஏகாதசி விரத நாள் மூன்று முறை வருவது மிகவும் சிறப்பானதாகும். அதோடு வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமையில் வருவது, ஆடி அமாவாசை மற்றும் பெளர்ணமி இரண்டுமே ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது மிகவும் விசேஷமானதாகும்...
🔥💥🌟✨❄️🌊❄️✨🌟💥🔥
தமிழ் மாதங்களில் தெய்வ அருள் நிறைந்த, அம்மன் வழிபாட்டிற்கு உரிய மாதம் ஆடி மாதமாகும். சூரிய பகவான் கடக ராசியில் பயணிக்கும் இந்த மாதம், முன்னோர் வழிபாட்டிற்குரிய மாதமாகவும் விளங்குகிறது...
தட்சிணாயன காலத்தின் துவக்க மாதமாக விளங்கும் ஆடி மாதம் தெய்வத்தின் அருளையும், பித்ருக்களின் ஆசியையும் பெற வழிபாடுகள், பூஜைகள் செய்ய வேண்டிய மாதமாக முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.
🌐🌀💠🔆🔱⚜️🔱🔆💠🌀🌐
அதனால் தான் ஆடி மாதத்தில் சுப காரியங்கள் எதுவும் நடத்தப்படுவதில்லை. பொதுவாக ஒரு மாதத்தில் வரும் ஒரு நட்சத்திரம், திதி, கிழமை ஆகியவை ஏதாவது ஒரு தெய்வத்திற்கு உரியதாகவும், ஒரு தெய்வத்தை வழிபடுவதற்கு உரியதாகவும் சொல்லப்படும்.
ஆனால் ஆடி மாதம் அனைத்து தெய்வங்களையும் வழிபட ஏற்ற மாதம். இந்த மாதத்தில் வரும் மாதப்பிறப்பு துவங்கி அனைத்து நாட்களும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு பெற்றவையாகும்...
🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️
*ஆடி மாதம் 2024 முக்கிய விசேஷ நாட்கள் :-*
ஆடி முதல் நாள் ஆஷாட ஏகாதசி விரதம்-
ஜூலை 17 (புதன்) ஆடி 01,
ஆடித்தபசு, ஆடிப் பெளர்ணமி
ஜூலை 21 (ஞாயிறு) ஆடி 05
ஆடி கிருத்திகை -
ஜூலை 29 (திங்கள்) ஆடி 13
ஆடிப்பெருக்கு -
ஆகஸ்ட் 03 (சனி) ஆடி 18
🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹
ஆடி அமாவாசை -
ஆகஸ்ட் 04 (ஞாயிறு) ஆடி 19
ஆடிப்பூரம் -
ஆகஸ்ட் 07 (புதன்) ஆடி 22
நாக சதுர்த்தி -
ஆகஸ்ட் 08 (வியாழன்) ஆடி 23
கருட பஞ்சமி, நாக பஞ்சமி -
ஆகஸ்ட் 09 (வெள்ளி) ஆடி 24
வரலட்சுமி விரதம் -
ஆகஸ்ட் 16 (வெள்ளி) ஆடி 31
🍎🍏🍊🍋🍉🍇🥥🍍🥭🫐🍑
*ஆடி மாதம் 2024 முக்கிய விரத நாட்கள் :-*
ஆடி அமாவாசை -
ஆகஸ்ட் 04 (ஞாயிறு) ஆடி 19
ஆடி பெளர்ணமி -
(குரு பூர்ணிமா வியாசர் பூஜை)
ஜூலை 21 (ஞாயிறு) ஆடி05
ஆடி கிருத்திகை -
ஜூலை 29 (திங்கள்) ஆடி 13
திருவோணம்
ஜூலை 22 (திங்கள்) ஆடி 06
🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹
ஏகாதசி -
ஜூலை 17 (புதன்) ஆடி 01, மற்றும்
ஜூலை 31 (புதன்) ஆடி 15,
ஆகஸ்ட் 16 வரலட்சுமி விரதம்
(வெள்ளி) ஆடி 31
ஆடி சஷ்டி -
ஜூலை 26 (வெள்ளி) ஆடி 10,
ஆகஸ்ட் 10 (சனி) ஆடி 25
சங்கடஹர சதுர்த்தி -
ஜூலை 24 (புதன்) ஆடி 08
மாத சிவராத்திரி -
ஆகஸ்ட் 02 (வெள்ளி) ஆடி 17
பிரதோஷம் -
ஜூலை 19 (வெள்ளி) ஆடி 03,
ஆகஸ்ட் 01
(வியாழன்) ஆடி 16
சதுர்த்தி -
ஆகஸ்ட் 08 (வியாழன்) ஆடி 23
💜💙🩵🩷🧡💛💚🩵💙💜🩷
ஆடி மாதம் 2024 சுபமுகூர்த்த நாட்கள் :
ஆடி மாதம் முழுவதும் தெய்வீக வழிபாடுகள் உள்ளதால் நமது முன்னோர்கள் சுபமுகூர்த்தம் தவிர்த்து உள்ளார்கள் என குறிப்பிடத்தக்கது.!
🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹
ஆடி மாதம் 2024
அஷ்டமி, நவமி, கரி நாட்கள் :-
அஷ்டமி - ஜூலை 28 (ஞாயிறு) ஆடி 12,
ஆகஸ்ட் 12 (திங்கள்) ஆடி 27
நவமி - ஜூலை 29 (திங்கள்) ஆடி 13,
ஆகஸ்ட் 13 (செவ்வாய்) ஆடி 28
கரி நாட்கள் - ஜூலை 18 (வியாழன்) ஆடி 02, ஜூலை 26 (வெள்ளி) ஆடி 10,
ஆகஸ்ட் 05 (திங்கள்)ஆடி 20
🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️
ஆடி மாதம் 2024 வாஸ்து நாள், நேரம்:-
ஜூலை 27 (சனி) - ஆடி 11 -
காலை 07.44 முதல் 08.20 வரை
*"ஆடிப்பட்டம் தேடி விதை"*
இது தமிழ் பழமொழி.
விவசாயத்திற்கு தயாராகுதல்:-
ஆடி மாதத்தில் பருவ மழை தொடங்குவதால், விவசாயம் செய்ய முன்னோர்கள் தீவிரமாக இருந்தனர். வெயில் அடிக்கும் போது அம்மனை வணங்கினால் நல்ல மழை தருவாள் என்பதால் அம்மனை வணங்கி தன் தொழிலை தொடங்கி வந்தனர் நமது முன்னோர்கள்.
🌳🌳🌴🌴🎋🪴🎋🌴🌴🌳🌳
மழைகாலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்கவும் நம் முன்னோர்கள் பல தெய்வீக பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தினார்கள்...
*ஆடி மாதம் முழுவதும் ஆதிபராசக்தி அங்காள ஈஸ்வரியின் தெய்வீக வழிபாடு உள்ளது!*
*உலகை ஆளும் என் தாய் ஆதிசக்தி அருளால்... அனைவரும் வளமுடன், நலமுடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.!*
*மேலும் உங்கள் நல்லாசியுடன் எங்களது ஆன்மீக சேவை தொடரும்...*
🐘🐘🐄🐄🦚🦚🦚🐄🐄🐘🐘
*"இந்து தர்மம் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல மனிதனின் வாழ்வியல்"*
*நமது தமிழ் முன்னோர்கள்.........*
*இந்து தர்மத்தையும் அதன் கலாச்சாரத்தையும் மிகச் சிறப்பான முறையில் நமக்கு வழிகாட்டி உள்ளார்கள்...*
*அவை அனைத்தையும் வருகின்ற இளைய தலைமுறை பின்பற்ற வேண்டும்!*
*முக்கியமாக பாதுகாக்க வேண்டும்.!*
கருத்துகள்
கருத்துரையிடுக