*465 நாட்கள் ✈️HFN கதை 🌍 குழுவினரோடு."*
*♥️ கதை-82♥️*
*“வாசிப்பதற்கு முன்பாக … உங்கள் கண்களை இதமாக மூடுங்கள்… உங்கள் கவனத்தை உங்கள
அந்த சிறிய பையன் குளிருக்கான அவனுடைய ஆடைகளை போட்டு விட்டு பிறகு அவனுடைய அப்பாவிடம் கூறினான்:
“ ஓ. கே. அப்பா, நான் தயாராகி விட்டேன்.”
அவனுடைய அப்பா, ஒரு போதகர், அவர் கூறினார்: “தயார், என்றால் அது எதற்காக?”
“அப்பா, இப்போது நாம் வெளியே செல்ல வேண்டிய நேரம்; அங்கே நம்முடைய துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்ய வேண்டும்.“
அப்பா பதில் கூறினார்: “ மகனே, வெளியே இப்போது மிகவும் குளிராக இருக்கிறது. மேலும் மழையும் தூற்றிக் கொண்டே இருக்கிறது.”
அந்தக் குழந்தை அவனுடைய அப்பாவை ஆச்சரியத்துடன் பார்த்தான், மேலும் கூறினான்: “ஆனால், அப்பா, மழைக் நாட்களில் கூட மக்கள் கடவுளைப் பற்றி அறிந்து கொள்வது தேவைப்படுகிறது. “
அப்பா பதில் அளித்தார், “மகனே, என்னால் இந்த சீதோஷ்ண நிலையில் வெளியே போக முடியாது.“
விரக்தியோடு, அந்த குழந்தை கூறியது” “அப்பா, நான் தனியாகப் போகலாமா? தயவுசெய்து!“
அவனுடைய அப்பா ஒரு கண நேரம் செல்ல விட்டு, பிறகு மேலும் கூறினார்,“ மகனே, நீ போக முடியும். இதோ இங்கே பிரசுரங்கள்; கவனமாக இருப்பாயாக.”
“ உங்களுக்கு நன்றி அப்பா!
துண்டுப் பிரசுரங்களோடு, அந்த மகன் மழையில் வெளியே போனான். அந்த 11 வயது சிறுவன், அந்த கிராமத்தின் தெருக்கள் முழுவதுமாக நடந்து சென்று, அவன் பார்க்கின்ற மக்களிடம் எல்லாம், துண்டுப் பிரசரங்களைக் கொடுத்துக் கொண்டு இருந்தான்.
2 மணி நேரமாக மழையிலும், குளிரிலும் நடந்து முடிந்த பிறகு, அவனுடைய கையில் கடைசியாக ஒரே ஒரு துண்டு பிரசுரம் இருந்தது; அவன் ஒரு மூலையில் நின்றான். யாராவது வருகின்றவர்களுக்கு, அந்த பிரசுரத்தைக் கொடுக்க வேண்டும் என்று, எதிர்பார்த்தான். ஆனால், அந்த தெருக்கள் முழுவதுமாக வெறிசோடிக் கிடந்தது. பிறகு அவன் பார்த்த, முதல் வீட்டை நோக்கித் திரும்பினான். வாயில் கதவை நோக்கி நடந்தான்; அழைப்பு மணியை பல தடவைகள் அழுத்தினான். காத்திருந்தான்; ஆனால் யார் ஒருவரும் வெளியே வரவில்லை.
முடிவாக அந்த சிறுவன் புறப்படுவதற்கு திரும்பினான். ஆனால் ஏதோ ஒன்று அவனை தடுத்து நிறுத்தியது. அந்தப் பையன் அந்த கதவை நோக்கி திரும்பினான். மீண்டும் அழைப்பு மணியை அழுத்தினான்; மேலும் அவனுடைய முழங்கால்களால் வலிமையாக இடித்தான். அவன் காத்திருந்தான். இறுதியாக, அந்தக் கதவு மென்மையாகத் திறக்கப் பட்டது.
மிகவும் கவலை தோய்ந்த முகத்தோடு ஒரு பெண் வெளியே வந்தாள், மென்மையாகக் கேட்டாள்: “மகனே, உனக்காக நான் என்ன செய்ய வேண்டும்?”
பிரகாசமான கண்களோடும், நல்ல புன்சிரிப்போடும் அந்தக் குழந்தைக் கூறினான்: “ அம்மா, நான் உங்களைத் தொந்தரவு படுத்தியதற்காக வருத்தம் கொள்கிறேன்; ஆனால் நான் சற்றே, உங்களிடம் கூற விரும்புவது, அதாவது, அந்தக் கடவுள் உண்மையிலேயே உங்களை நேசிக்கிறார்; மேலும், நான் எனது கடைசி துண்டுப் பிரசுரத்தைக் கொடுக்க வந்தேன். இது கடவுளைப் பற்றியும் மேலும் “அவருடைய சிறந்த அன்பைப் பற்றியும் பேசுகிறது.“
பிறகு அந்தப் பையன் அந்த பிரசுரத்தை அவளிடம் கொடுத்தான்.
அவள் சற்று கூறினாள்,“ நன்றி மகனே, கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார் !“
நல்லது, அடுத்த ஞாயிறு காலை, அந்த மத போதகர் மேடையில் இருந்தார்; அந்தக் கூட்டம் ஆரம்பிக்கும் போது அவர் கேட்டார்:
“யாரிடமாவது சாட்சியம் ஏதாவது இருக்கிறதா அல்லது அவர்கள் எதையாவது பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்களா? “
அந்த சர்ச்சில், பின்னால் இருந்த வரிசையில் மெதுவாக, ஒரு வயதான பெண்மணி எழுந்து நின்றாள். அவள் பேசத் தொடங்கும் போது, அவள் கண்களில் இருந்து பிரகாசமான, போற்றத் தக்க பார்வை தோன்றியது.
“ இந்த சர்ச்சில் உள்ள யாருக்குமே, என்னைத் தெரியாது. இங்கே நான் இதற்கு முன்பாக, ஒரு போதும் வந்ததும் இல்லை.“
என்னுடைய கணவர் சிறிது காலத்திற்கு முன்பாகவே, என்னை இந்த உலகத்தில் முழுவதுமாக தனிமையில் விட்டுவிட்டு இறந்து விட்டார். கடந்த ஞாயிறு குறிப்பிடத்தக்க வகையில், குளிரும் மேலும் மழையும் பெய்த நாளாக இருந்தது; அதாவது அந்த நாளில், நான் என் வாழ்க்கையின் முடிவுக்கு வந்து விட்டேன்; எனக்கு நம்பிக்கை இல்லை என்கிற ஒரு நிலையில், மேலும் இதற்கு அப்பால் வாழ்வதற்கு நான் விரும்பவில்லை.
அப்போது, நான் ஒரு நாற்காலியையும், மேலும் ஒரு கயிறையும் எடுத்துக் கொண்டு, என்னுடைய வீட்டின் மாடிக்குச் சென்றேன். கயிற்றின் ஒரு முனையை கூரையில் உள்ள இறைவாரக்கையில் கட்டி வைத்தேன்; பிறகு நான் நாற்காலியில் ஏறினேன்; கயிற்றின் அடுத்த முனையை என் கழுத்தைச் சுற்றிப் போட்டேன்.
நான் நாற்காலியின் மீது நின்றேன்; மிகத் தனிமையாக, மேலும் உடைந்து போன இதயத்தோடு. நான் நாற்காலியை விட்டு, என்னை வெளியே எடுக்கும் போது, திடீரென்று கதவு தட்டும் உரத்த குரலை நான் கேட்டேன். நான் ஒரு நிமிடம் காத்திருந்தேன். மேலும் யாராக இருப்பினும் போகப் போகிறார்கள்.“
நான் காத்திருந்தேன்; மேலும் காத்திருந்தேன். ஆனால் கதவு தட்டிக் கொண்டு இருப்பது சத்தமாக, மேலும் சத்தமாக என்று கேட்டுக் கொண்டே இருந்தது. அது மிக சத்தமாக மாறியது; அதாவது இதை என்னால், இனியும் தவிர்க்க முடியாது.
ஆகவே நான் ஆச்சரியம் கொண்டேன்; இது யாராக இருக்க முடியும்?
யாருமே என் வாசலுக்கு நெருங்கி இது வரைக்கும் வந்ததும் இல்லை; அல்லது என்னைப் பார்ப்பதற்கும், யார் ஒருவரும் வந்தது இல்லை!
நான் கயிற்றை என் கழுத்தில் இருந்து விடுவித்தேன். மேலும் வாசலுக்குப் போனேன்; அப்போது அழைப்பு மணி இன்னமும் ஒலித்துக் கொண்டே இருந்தது; கதவும் இன்னும் தொடர்ந்து தட்டப்பட்டுக் கொண்டே இருந்தது.
நான் கதவைத் திறந்த போது, என் கண்கள் பார்த்ததை என்னால் நம்ப முடியவில்லை. என் வாசலின் முன்பாக, நான் இது வரைக்கும் பார்த்திராத மிகவும் ஒளி பொருந்திய, மேலும் தேவதை போன்ற தெய்வீகக் குழந்தையைப் பார்த்தேன்.
அவன் புன்சிரிப்பை உதிர்த்தான்; ஓ .. .. ஓ ... அதை நான் ஒரு போதும் விவரிக்க முடியாது! அவனுடைய வாயில் இருந்து வெளியே வந்த அந்த சொற்கள், வெகு காலத்திற்கு முன்பாக இறந்து போய் விட்ட என் இதயத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் படி செய்தது. அவன் கூறிய போது, அந்த அழகிய தேவதையின் குரலாகவே இருந்தது: “பெண்ணே, நான் உனக்கு ஒன்றை சற்றுக் கூற விரும்புகிறேன்; அதாவது கடவுள் உண்மையாகவே உன்னை நேசிக்கிறார்.“
“ அந்த சிறிய தேவதை குளிருக்கும், மழைக்கும் நடுவில் மறைந்த போது, நான் கதவை மூடி விட்டு மேலும் அந்த துண்டு பிரசுரத்தில் இருந்த எல்லா வார்த்தைகளையும் வாசித்தேன்.“
பிறகு, நான் மாடிக்குச் சென்று நாற்காலி மற்றும் கயிற்றை எடுத்து விட்டேன்.
எனக்கு இனிமேல் ஒருபோதும் அவை தேவையில்லை. இப்போது நீங்கள் பார்ப்பது, இப்பொழுது நான் இந்த மன்னனின் மகிழ்ச்சியான மகளாகும்.
அந்தப் பையன் காட்டிய வழியில், அவன் கிளம்பிய போது, இந்த சர்ச்சுக்கு, அந்த சிறிய தேவதைக்கு தனிப்பட்ட முறையில் நன்றி கூறுவதற்காக வந்தேன். அந்த கடவுளின் தேவதை சரியான நேரத்திற்கு வந்து, உண்மையிலேயே என்னுடைய வாழ்க்கையை காப்பாற்றினாள். என்னுடைய வாழ்க்கையை நித்தியமான நரகத்தில் இருந்து காப்பாற்றியதோடு, மேலும் அதை நித்தியமான கடவுளின் இருப்பிற்கு மாற்றி வைத்து விட்டார்.
சர்ச்சில் இருந்த அனைவரும் அழுதார்கள்.
அந்த போதகர் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து, முன்னே போடப்பட்டிருந்த முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த அந்த சிறிய தேவதையிடம் வந்தார். அவர் அவருடைய மகவை, தன்னுடைய கைகளில் எடுத்து அடக்க முடியாமல் அழுது விட்டார். தியானம் பாதையைத் தெளிவாக்குகிறது. அதன் வழியே, இதயத்தின் தூண்டுதல்கள் மேற்பரப்புக்கு தங்கு தடையின்றி வருகின்றன. அந்த தூண்டுதல்களின் அடிப்படையில், அதன் பிறகு நாம் எடுக்கின்ற முடிவுகள், நமக்குச் சரியாக இருக்கின்றன. தியானம் நமக்கு உதவுகிறது; அது இந்த இரைச்சல்களைத் தாண்டி மேலும் நம்முடைய இருப்பின் அடி ஆழத்தில் இருந்து வருகின்ற இதயத்தின் தூண்டுதல்களைப் புரிந்து கொள்ளச் செய்கிறது.“*
கருத்துகள்
கருத்துரையிடுக