ஒதுக்கப்பட்ட ஊருக்குள் பேருந்து இறக்கிவிட்டதும் எங்களுக்குள் ஏறிக் கொண்டது தேர்தல் பணி.. Zonal offficer கொடுத்துப் போன கோணிமூட்டையை கொட்டியதும் கொத்து கொத்தாய் வந்து விழுந்தன ஃபாரங்கள்.. EVM எந்திரங்களை பிறந்த குழந்தை போல பாதுகாத்தோம்.. சின்ன வகுப்பறை ஒரே ட்யூப்லைட்.. ஓரமாய் ஓடும் மின்விசிறி.. இப்படி கொடுத்ததற்குள் வாழ கற்றுக் கொடுத்தது தேர்தல் பணி.. குழாய் இருந்தது தண்ணீர் இல்லை.. பாத்ரூம் கதவு உடைந்திருந்தது.. சில இடங்களில் பாத்ரூமே இல்லை என்று கேள்விபட்ட போது மனம் தானாக ஆறுதலடைந்தது.. புரண்டு புரண்டு படுத்தும் இமைகளில் தூக்கம் அமரவில்லை.. பக்கத்தில் P3 படுத்ததும் தூக்கம் அவரை வாரி அணைத்துக் கொண்டது.. P1 'குபீர் குபீர்' என்று எழுந்து மீண்டும் படுத்துக் கொண்டார்.. வந்த தண்ணீரை நெய் போல ஊற்றி குளித்து ஐந்து மணிக்கே தயாரானோம்.. ஆறுமணிக்கு வந்த ஏஜெண்டுகள்.. அவர்கள் கூட வந்த குளிக்காத ஆட்கள் என்று Mockpoll தொடங்கியது.. ஆயிரம் முறை வீடியோ பார்த்தாலும் அங்கு ஒருமுறை சீல் வைப்பதில் தடுமாறி சரிசெய்து தொடங்கியது உண்மை வாக்குப்பதிவு.. ஏழு மணிக்கு துவங்கிய வரிசை ரயில் பெட்ட
Tamil blog from Co1
கருத்துகள்
கருத்துரையிடுக