*வாசிப்பதற்கு முன்பாக… அன்போடு உங்கள் கண்களை மென்மையாக மூடுங்கள்… உங்களுடைய இதயத் துடிப்பானது ஒழுக்கத்தை விட்டு வெளியேறினால், என்ன நடக்கும் என்பதை ஒரு கணம் கற்பனை செய்யுங்கள்....தொடர்ந்து வாசியுங்கள்.*
**
முன்னொரு காலத்தில் ஒரு குருகுலத்தில், ஆச்சார்யா சுமத், தமது சீடர்களோடு வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் அறிவுத் திறமை கொண்டு, மேலும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கக் கூடியவராகவும் இருந்து வந்தார்.
ஒரு நாள் பாடம், முடிந்த பிறகு, அவருடைய சீடர்களுள் ஒருவரான வர்ட்டெண்ட் என்பவர் குருவிடம் கேட்டார், “ஆச்சர்யா! அறிவுத் தன்மையின் கூர்மை என்பது கற்றுக் கொண்டு இருப்பதன் அடிப்படையைச் சார்ந்த ஒன்று. இது இப்படி இருந்த போதிலும், நீங்கள் ஏன், எப்போதும், நமது வாழ்க்கை முழுவதுமே கடுமையான ஒழுக்கத்தை திடமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று, பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்?“
ஆச்சார்யா சுமத் பதிலளித்தார்,“ நேரம் வரும் போது, உங்களுக்குரிய பதில் கிடைக்கும்.”
சில நாட்களுக்குப் பிறகு, ஆச்சார்யாவும், அவரது எல்லா சீடர்களும், நடை பயிற்சிக்காக வெளியே போனார்கள். நடந்து கொண்டு இருக்கும் போது, அவர்கள் அனைவரும், கங்கை ஆற்றின் கரையை அடைந்தார்கள். கங்கை ஆறு ஓடுவதையும், அதன் அலைகள் தெறிப்பதையும் பார்த்துக் கொண்டு இருந்த அனைவரும், அவற்றால் கவரப்பட்டார்கள்.
இதைப் பார்த்துக் கொண்டு இருந்த ஆச்சார்யா வார்டெண்டிடம் கேட்டார்,“ உனக்குத் தெரியுமா? எங்கே இருந்து இந்த கங்கை ஆறு தனது பயணத்தை ஆரம்பிக்கிறது; மேலும் எங்கே இது முடிவுறுகிறது?
வார்டெண்ட் உடனே பதிலளித்தார்,“ ஆமாம் ஆச்சார்யா! கங்கா கோமுக்கில் இருந்து வருகிறது. மேலும் முடிவில் கங்கா சாகரில் ஐக்கியம் ஆகிறது.“
பிறகு ஆச்சார்யா ஆற்றின் கரையை நோக்கி சுட்டிக் காட்டிக் கொண்டு கேட்டார்,” சரிதான். கங்கையின் இந்த இரண்டு கரைகளும் அங்கே இல்லாமல் இருந்தால், அதனால், இவ்வளவு நீண்ட தூரம் பயணித்திருக்க முடியுமா?”
“ வார்ட்டண்ட் உடனே பதிலளித்தார்,“ இல்லை! நிச்சயமாக இயலாது. ஏனென்றால், ஆற்றின் இந்த கரைகள் இல்லா விட்டால், பிறகு அங்கே, கங்கையின் தண்ணீர் எல்லா இடமும் சிதறிப் போய் விடும்; மேலும் மக்களுக்கு, கங்கையில் இருந்து கிடைக்கும் நன்மைகள், கிடைக்காமலேயே போய் விடும். கங்கை ஆறு அதன், இரண்டு கரைகளுக்கும் உள்ளாக ஓடும் போது மட்டுமே, மக்கள், அதனிடம் பயன் பெற்றிட முடியும். “
வாராண்டின் பதிலால் மகிழ்ச்சி அடைந்த ஆச்சார்யா கூறினார்,“நீ அன்று கேட்ட கேள்விக்கான பதில் இதுதான். மாணவப் பருவத்தில் அங்கே ஒழுக்கம் இல்லாமல் இருந்தால், பிறகு அவனது வாழ்க்கையின் சக்தி முழுவதும் சிதறடிக்கப் பட்டு விடும்; மேலும் அவனுடைய ஆற்றல் வளம் முழுவதும், பயன்படாமலேயே போய் விடும். அந்த மாதிரியான மனிதனின் உடல் மற்றும் மனம் சோர்வுற்று, உயிரற்ற ஒன்றாக மாறிடலாம்.
ஒழுக்கம் இல்லாமல், வாழ்க்கையின் நோக்கத்தை சாதிப்பது முடியாத ஒன்றாகும்; ஏனென்றால், அந்த மாணவனுக்கு படிப்பது என்றால், அது ஒழுக்கத்தில் இருந்து மட்டுமே கிடைக்கும் ஒன்றாகும்.”
உங்களுடைய அன்பை ஒழுங்கு செய்யுங்கள்; உங்கள் ஒழுங்கு அன்பாக வேண்டியது இல்லை.
*(தாஜியின் ‘விஸ்டம் பிரிட்ஜ்’ ஆங்கில நூல்).*
*தாஜி மகராஜ்:*
*“ஒழுக்கம் என்பது, அதாவது நமக்கு உள்ளே இருந்து வரும், ஏதோ ஒன்றாகும். இது வெளிப்புறத்தில் இருந்து திணிக்கப்படுதல் கூடாது.“*
*ஹார்ட்ஃபுல்னெஸ் தியானம்.*💌
*HFN கதைக் குழு. ஜோத்பூர்.*
கருத்துகள்
கருத்துரையிடுக