முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அப்பாவும் மகளும்

ஒரு திருமண விழா ...
ஆன்றோரும் சான்றோரும் ....
 மணமக்களை வரிசையாக வாழ்த்துரைக்கின்றனர்.
இறுதியாக மணமகளின் தந்தை....
ஒலிவாங்கியின் முன் வந்து...
கண்களில் நீர் எட்டிப் பார்க்க...
 வாயில் இருந்து வார்த்தைகள் வர எழும்பாமல் தவிக்க ....
 ஒரு படியாகச் சமாளித்து ...
இதோ பேசுகிறார்.
வாருங்கள் கேட்போம்...
எனது மனதின் மகிழ்ச்சியான இந்த தருணத்தில் ....
 பங்கு பெற்று சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் நன்றி.
 இந்த நாள் வாழ்வில் எனக்கு மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது.
காரணம் ....
எங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டோம்.
இனி ஓய்வெடுக்க விரும்புகிறோம்.
அதை அனுபவிக்கத் தயாராகி விட்டோம் .
நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் ...
 நான் எதிர்பார்ப்பதை விட நீங்கள் அவளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன் .
அவள் என் வீட்டில் துள்ளித் திரிந்தவள்.
அதை விட உங்கள் வீட்டில் மகிழ்ச்சி துள்ளலோடு இருப்பாள் என நம்புகிறேன்.
இருந்தாலும் எல்லா சராசரி தந்தையை போலவும் நான் இதை திரும்பத் திரும்பச் சொல்லுகிறேன்.
தயவுசெய்து அவள் மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
அவள் எப்போதுமே எனக்கு பாரமாக இருந்ததில்லை.
இனியும் ஒரு போதும் பாரமாகக் கருத மாட்டேன் .
ஏனெனில் என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும் ...
என் இதழ்களில் புன்னகை பூப்பதற்கும் காரணம் அவள் மட்டுமே..,
இருந்தும் அவளை நான் திருமணம் செய்து கொடுக்கிறேன்.
ஏனென்றால் அது ஓர் இயற்கை நியதியாக இருக்கிறது.
கலாச்சாரத்துக்கு கட்டுப்பட்டு மட்டுமே உங்களுடைய வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்.
 என்வீட்டின் மகிழ்ச்சிப் பேழையே அவள்தான்...
 அந்தப் பேழை உங்கள் வீட்டில் ஒளி வீச வருகிறது...
 எனது உலகத்தை உங்களுக்கு தாரை வார்த்துத் தருகிறேன்.
 அந்த உலகம் என்றென்றைக்கும் அழகாக இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் .
எனது இளவரசியை உங்களிடம் அனுப்புகிறேன்.
அவள் உங்கள் வீட்டில் ராணியாக திகழ வழிவகை செய்யுங்கள்.
 எனது ரத்தமும் வியர்வையும் அவளை ஆளாக்கி இருக்கிறது.
 இப்போது அவள் மாசறு பொன்னாக இருக்கிறாள் .
அவள் உங்கள் வீட்டுக்குக் கொண்டு வரும்...
அன்பு, அக்கறை ,அரவணைப்பு ,
அழகு, இதம் என .....
எல்லா பண்புகளுக்கும் பரிசாக  அவளுக்கு மகிழ்ச்சியைத் தாருங்கள்.
ஆம் அவளை தயவு செய்து மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
 எப்போதாவது அவள் சிறு தவறு செய்து விட்டாள் என நினைத்தால் ...
அவளைத் தாராளமாக திட்டுங்கள்.
ஆனால் அதே வேளையில் ,
அவள் மேல் செலுத்தும் அன்பில் குறை வைக்காதீர்கள் .
அவள் மிகவும் நளினமானவள்.
அவள் எப்போதாவது சோர்ந்து போயிருந்தால் ....
 அவளுடன் இருங்கள் !
உங்களது சிறு கவனம் அவளுக்குப் போதும்
ஆறுதல் தர .
 அவளுக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டால்...
 அவள் மீது அக்கறை காட்டுங்கள்.
 அதுவே அவளுக்கு அருமருந்து. அவளது பொறுப்புகளில் எப்போதாவது விலகி விட்டால்....
அதைச் சுட்டிக் காட்டுங்கள் .
அவளைப் புரிந்து கொள்ளுங்கள்
 தயவு செய்து அவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
என் மகளின் மகிழ்ச்சி மட்டுமே என் வாழ்நாள் இலட்சியம்.
 எனவே தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
 அன்பிற்குரிய மருமகனே !
 இந்த வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரியாமல் போகலாம் .
ஆனால் நாளை நீங்கள் ஒரு மகளைப் பெற்றெடுக்கும் பாக்கியவான் ஆகும் போது....
எனது வார்த்தைகளின் அர்த்தம் புரியும்.
அப்பொழுது உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும்....
 என் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சொல்லும்.
 எனவே தயவு செய்து எனது மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். நன்றி
எழுத்து வடிவில் ஆன அந்த தந்தையின் இந்த உரையைப் படித்த பொழுது என்னுள்
ஏனோ ஒரு நெகிழ்ச்சி...
இயற்கையின் நியதிப்படி ....
 எந்த ஒரு தந்தையும் ஏதாவது ஒரு நிலையில் ....
 மகளை பிரிந்து தான் ஆக வேண்டும்.
 தேவதை போல் தங்கள் வீட்டில் வலம் வந்தாலும்....
மணமாகிச்சென்ற இடத்தில்...
 அந்த அருமை மகளை எப்படிப் பேண வேண்டும் என்பதை ....
 மணமகன் வீட்டாருக்கும் ....
 மணமகனுக்கும் ...
 மயிலிறகால் வருடுவது போல அந்தப் பாசமிகு தந்தை உதிர்த்த வார்த்தைகள்....
என் மனதைப் பிழிந்தது.
என்னை உலுக்கிய அந்த வரிகள்....
ஏன் உங்களையும் உலுக்கட்டுமே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*      𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝟬𝟴, 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟰 *╚════★🄲🅁🄺★════╝* *🔹🔸இன்றைய சிந்தனை..* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *🧿'' குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.* *🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️* . *🌹✍️* *♻️குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.* *♻️குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;* *♻️பெற்றக் குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும்.* *♻️ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில் நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்.* *♻️உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யைப் பார்த்த அவரது தாயார் மிகவும் துடிதுடித்து விட்டார்..* *மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,* *♻️'' யார் உன்னை இப்படிக் காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..* *♻️அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்...

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...