*💐💐🙏🏻💐💐💐"இன்றைய சிந்தனை'..(18.04.2024)..*
...............................
*"’’*
..................................
செல்வம், அதிகாரம், பணம், புகழ், மதிப்பு ஆகியவை மன அமைதியை அழிப்பன. வாழ்வில் என்ன என்ன அடைய வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றி மனதை அலைக்கழிக்கும்.
தீவிர சிந்தனையில் ஆழ்ந்தவன், அதிகமான சொத்து, செல்வம் அடைந்தவன், ஆகியோருக்கு நிம்மதி கெட்டு விடும்.உறக்கம் வராது.
*மனநிம்மதி இருந்தால் தான் எந்த செயலையும் பதட்டம் இல்லாமல் ஒருவரால் எளிதில் செய்ய முடியும்..* தன் தகுதியை உணர்ந்து அதற்குரிய செயலில் ஈடுபட வேண்டும்.
மனதில் நிம்மதியும் தூக்கமும் இன்றித் தவித்த ஒருவன் அருகில் இருந்த ஆசிரமத்தில் பெரியவரை சந்தித்து எனக்கு எல்லாம் இருந்தும் மன நிம்மதி மட்டும் இல்லை என்றான். அதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள் என்றான்..
அதற்கு அந்தப் பெரியவர் *தேவையில்லா சுமைகளை சுமப்பதும், தெரியக் கூடாத ரகசியங்களைத் தெரிந்துக் கொள்வதாலும் நிம்மதி போய் விடுகின்றது.*
நீ முதலில் ஆசிரமத்தில் சாப்பிடு என்றார். சாப்பிட்டப் பின் ஒரு படுக்கையைக் காண்பித்து படுக்கச் சொன்னார்
அவனிடம் ஒரு கதை சொன்னார் பெரியவர்.
"ரயில் புறப்படும் போது அவசரமாக தலையில் சுமையுடன் ஒருவன் ஓடி வந்து ஏறி இடம் பிடித்து அமர்ந்து கொண்டான். ரயில் புறப்பட்டது.
ஆனால் அவன் தன் தலையில் இருந்த சுமையை மட்டும் கீழே இறக்கி வைக்கவில்லை. சுமையைத் தலையில் சுமந்து வந்த ஆளைப் பார்த்து அதைக் கீழே இறக்கி வைக்கச் சொன்னார் அவன் அருகில் இருந்தவர்..
அவன் வேண்டாம். ரயில் என்னை மட்டும் சுமந்தால் போதும். என் சுமையை நான் சுமந்து கொள்வேன் என்றான்.
இதைக் கேட்ட அங்கு இருந்தவர்கள் சிரித்து விட்டு,
'பைத்தியக்காரன், இரயிலை விட்டு இறங்கும் போது மூட்டையை தூக்கிக்கிட்டு இறங்கினால் போதாதா?
என்றான்'.
அந்தப் பெரியவர் பணக்காரனைப் பார்த்து, உன்னைப் போல் அவனுக்கும் அது தெரியவில்லை என்றார் .என்ன சொல்கிறீர்கள் என்றவனிடம்,
"வாழ்க்கை என்பது ரயில் பயணம் போன்றது. பயணம் முழுவதும் சுமையை சுமந்து கொண்டு செல்பவர்கள் நிம்மதியாக வாழ முடியாது,
தேவைப்படுபனவற்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். என்றார்..
*ஆம்.தோழர்களே.*
*உங்களுக்கு நிம்மதி கிடைக்க வேண்டும் என்றால்,உங்களிடம் இருப்பதை இல்லாதவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.*
*அது அறிவாக இருந்தாலும் சரி, பணம், பொருளாக இருந்தாலும் சரி.*
*அந்த மனித நேயம் நீங்கள் கொண்டால், மன நிம்மதி அடைவதோடு மகிழ்ச்சியான வாழ்க்கையை நீங்கள் வாழலாம்....✍🏼🌹*
கருத்துகள்
கருத்துரையிடுக