விசிலை அடிக்காதீர்

நான் ஒரு பள்ளியில், விளையாட்டு மைதானத்தில் நடக்கும் ஒரு சாதாரண கால் பந்து போட்டியை கவனித்தேன்.
நான் உட்கார்ந்தவுடன், அங்கிருந்த பையன் ஒருவனிடம் ஸ்கோர் என்ன என்று கேட்டேன்.
ஒரு புன்சிரிப்போடு அவன் பதில் கூறினான், “அவர்கள் எங்களை விடவும், 3-0 என்ற கணக்கில் முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் நான் சொன்னேன்,” உண்மையாகவா !”
“ நான் கூறினேன், உன்னைப் பார்த்தால் தைரியத்தை இழந்தவன் போல தெரியவில்லையே! அவனை, ஆறுதல் படுத்த முயற்சி செய்யும் விதமாக, நான் இதனை கூறினேன்.  
“தைரியத்தை இழக்க வேண்டுமா?” அந்த பையன் என்னைப் பார்த்து திகைப்பான பார்வை கொண்டு கேட்டான்.
“ நான் ஏன் தைரியத்தை இழக்க வேண்டும்; அந்த நடுவர் இன்னமும் கடைசி விசிலை அடிக்கவில்லையே?”
அந்த குழுவின் மீதும், மேலும் அங்கு பங்கேற்கும் மேனேஜர்களிடமும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் நிச்சயமாக முறியடித்திடுவோம்.“
உண்மையாகவே, அந்த போட்டி ஒரு முடிவுக்கு வந்தது. 5-4 என்ற கணக்கில் ஸ்கோர்; அந்த பையனுடைய குழு வெற்றி பெற்றது.
அவன் போகும் போது, அழகான புன்சிரிப்புடன் சென்றான்; அவன் என்னைப் பார்த்து, கைகளை மென்மையாக அசைத்தான். நான் அகலமாகத் திறந்த வாயோடு, ஆச்சரியம் அடைந்தேன். என்னவிதமான நம்பிக்கை; என்னவிதமான அழகு மிளிரும் நம்பிக்கை!
அன்று இரவு நான் வீட்டிற்கு திரும்பிய பிறகும் கூட, அவனது கேள்வி, என்னிடம் திரும்பதிரும்ப வந்து கொண்டு இருந்தது.“நான் ஏன் தைரியம் இழக்க வேண்டும்? அந்த நடுவர் கடைசி விசிலை அடிக்கவில்லை எனும் போது?“
வாழ்க்கை என்பதும் ஒரு விளையாட்டு தான். இறுதி வரைக்கும் இதனோடு போராட்டம் செய்தே ஆக வேண்டும்.
ஏன் தைரியம் இழக்க வேண்டும், இன்னும், அங்கே வாழ்க்கை இருக்கின்ற ஒரு நிலையில்?
ஏன் தைரியம் இழக்க வேண்டும், அங்கே இன்னமும் உங்களது இறுதி விசில் அடிக்கவில்லை என்னும் போது?
அதில், உண்மை என்னவென்றால், பெரும்பாலான மக்கள், தாமாகவே, அந்த கடைசி விசிலை அடித்து விடுகின்றார்கள் என்பதுதான்.
ஆனால், அங்கே வாழ்க்கை என்ற ஒன்று இருக்கின்றது என்னும் வரைக்கும், முடியாதது என்று எந்த ஒன்றுமே இல்லை; மேலும் உங்களுக்கு எந்த ஒரு பொழுதுமே, அது தாமதமானது கிடையாது.
பாதி நேரம் என்றால், அது, முழுமையான நேரம் அல்ல.
நீங்களாகவே, அந்த விசிலை அடிக்காதீர்கள்!
அன்பில், அங்கே எதிர்பார்ப்புக்கு இடமே இல்லை; ஆனால் நன்றி மட்டுமே இருக்கிறது. அதனால் தான் அன்பு மனித இனத்தின் பெருந்தன்மையின் உச்சம் என்றாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேர்தல் பணி

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

அப்பாவும் மகளும்