*“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“* *:* ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார். அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார். அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்! அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...
Tamil blog from Co1