கிருஷ்ண பகவான் - உத்தவா உரையாடல்.

 உத்தவா அவருடைய குழந்தைப் பருவத்திலிருந்தே, கிருஷ்ண பகவானுடைய தேரோட்டியாக அவரோடு இருந்து வந்தார். மேலும் அவருக்கு பல்வேறு வழிகளில் சேவை செய்து வந்தார். அவர் ஒரு போதும், கிருஷ்ணரிடம் இருந்து எந்த விதமான விருப்பத்தையோ அல்லது வரத்தையோ நாடியது இல்லை.
 கிருஷ்ண பகவான் அவரது இந்த அவதாரத்தை முடிக்கும் எல்லைக் கோட்டில் இருக்கும் போது, அவர் உத்தவரை அழைத்தார். “அன்பு உத்தவா, என்னுடைய இந்த அவதாரத்தில் நிறைய மக்கள், என்னிடம் இருந்து நிறைய வரங்களைக் கேட்டும், பெற்றும் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு போதும், என்னிடம் எதுவுமே கேட்டது இல்லை. இப்பொழுதாவது நீங்கள் ஏதாவது கேட்கலாம் அல்லவா? நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். இந்த அவதாரத்தை நிறைவு செய்திடும் போது, உங்களுக்கும் ஏதாவது செய்திட்ட திருப்தி எனக்கு கிடைத்திடும்.“
 உத்தவா அவருக்கு என்று எதுவுமே, கேட்காமல் இருந்த போதிலும், அவர் அவருடைய குழந்தைப் பருவத்தில் இருந்தே, கிருஷ்ணரை உற்றுக் கவனித்துக் கொண்டே இருக்கிறார். அவர் எப்போதும் ஆச்சரியம் கொள்வதுண்டு. அதாவது கிருஷ்ணருடைய போதனைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் வெளிப்படையாகவே, வேறுபாடு இருப்பது பற்றியும், மேலும், அதற்கு உரிய காரணங்களையும் புரிந்து கொள்ள விருப்பம் கொண்டார். அவர் கிருஷ்ணரிடம் கேட்டார்,“ நீங்கள் வாழ வேண்டும் என்பதற்காக, எங்களுக்கு ஒரு வழியை போதனை செய்கின்றீர்கள்; அதே வேளையில், நீங்களோ வித்தியாசமான ஒரு வழியில் வாழுகின்றீர்கள். மகாபாரத நாடகத்தில், நீங்கள் வகித்த அந்த பாத்திரம், உங்களது செயல்கள், பலவற்றை, என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.. நான் உங்களுடைய செயல்களுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள தீவிர ஆர்வமுடையவனாக இருக்கின்றேன். தெரிந்து கொள்ள வேண்டும், என்கிற என்னுடைய விருப்பத்தை, உங்களால் நிறைவேற்ற முடியுமா?
கிருஷ்ணர் கூறுகிறார்,“ உத்தவா, குருஷேத்திரப் போரின் போது, நான் அர்ச்சுனனுக்கு என்ன கூறினேனோ, அதுவே *‘பகவத் கீதை’* ஆகியது. இன்று நான் உனக்கு கூறிடும் என்னுடைய பதில்கள் *‘உத்தவ கீதை’* என்று ஆகும். ஆகவே தான், நான் இந்த சந்தர்ப்பத்தை உனக்குக் கொடுத்தேன். எந்தவிதமான தயக்கமும் வேண்டியதில்லை; தயவுசெய்து என்னிடம் கேட்பாயாக.“
 உத்தவா கேட்கத் தொடங்கினார்– “கிருஷ்ணா, முதலில் எனக்கு சொல்லுங்கள். உண்மையிலேயே நல்ல நண்பர் என்பவர் யார்?”
கிருஷ்ணா கூறினார்,“ஒரு உண்மையான நண்பர் என்பவர், தேவை ஏற்படும் போது, நண்பர் அழைக்காமலேயே, அவருக்கு வந்து உதவிடக் கூடியவர் ஆவார். அவரே உண்மையான நண்பர் ஆவார்.“
 உத்தவா கூறினார்,“ கிருஷ்ணா, நீங்கள் பாண்டவர்களின் அன்பான நண்பர். அவர்கள் உங்களை முழுமையாக நம்பினார்கள். உங்களை ஆபத் பாந்தவா – என்று (எல்லா கஷ்டங்களில் இருந்து காப்பவர்) கருதினார்கள். கிருஷ்ணா, நடந்து கொண்டு இருப்பது மட்டும் அல்ல, என்ன நடக்கப் போகிறது என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒரு சிறந்த அறிவாளி. இப்போதுதான், உண்மையான நெருக்கமான நண்பர் யார் என்பதற்கான விளக்கத்தைக் கொடுத்தீர்கள். பிறகு, அந்த விளக்கத்திற்கு ஏற்றார் போல நீங்கள் ஏன் செயல் பட வில்லை? ஏன் நீங்கள் தர்மராஜாவை (யுதிஷ்டிரர்) சூதாட்டம் விளையாடுவதில் இருந்து தடுக்கவில்லை? சரி அதுதான் போகட்டும்; பரவாயில்லை. ஏன் தர்மர் பக்கம், அதிர்ஷ்டம் இருக்கும் படி, நீங்கள் செய்யவில்லை? அந்த அதிருஷ்டத்தை, தர்மர் பக்கம் திரும்பச் செய்து இருந்தால், அது தர்மரது வெற்றியை உறுதி செய்து இருக்குமே. நீங்கள் அதையும் கூட செய்யவில்லை. தர்மர் அவருடைய செல்வம், நாடு மேலும் அவரையே இழந்து விட்ட பிறகும் கூட, அப்போதாவது சூதாட்டத்தைத் தடுத்து அவரை நீங்கள் காப்பாற்றி இருக்கலாமே. அவரை நீங்கள் சூதாட்டத்தின் தண்டனையில் இருந்து விடுவித்து இருக்கலாம் அல்லவா அல்லது அவர் தன் சகோதரர்களை வைத்து சூதாட்டம் ஆட ஆரம்பித்திடும் போது, அந்த அரங்கத்தில் நுழைந்து இருக்கலாம் அன்றோ? நீங்கள் அதையும் கூட செய்யவில்லை. திரௌபதியை வைத்து விளையாடினால், என்று துரியோதனன் நிபந்தனை போடும் போது, (திரௌபதி எப்போதும் நல்ல யோகத்தைத் தரக் கூடியவள்) குறைந்த பட்சம், தர்மரிடம் ‘நீங்கள் இழந்த அனைத்தையும் திரும்பக் கொடுத்து விடுகிறேன்.’ என்றபோது, நீங்கள் தலையிட்டு, இன்னும் உங்கள் தெய்வீக சக்தியால், நீங்கள் அந்த பகடைக் காய்களை, தருமருக்கு சாதகமாக விழும்படி செய்து இருக்கலாம் அல்லவா? அதற்குப் பதிலாக, திரௌபதி கிட்டத்தட்ட அவளுடைய நாணம், அடக்கம் என எல்லாவற்றையும் இழந்த பிறகுதான், நீங்கள் தலையீடு செய்தீர்கள். மேலும், இப்பொழுது வேறு மாதிரி கூறுகிறீர்கள். அதாவது நீங்கள் அவளுக்கு ஆடை கொடுத்து, அவளது கற்பை காப்பாற்றியதாகவும் கூறுகிறீர்கள். இந்தக் கூற்றை எவ்வாறு உங்களால், கூறிட முடிகிறது –அவள் அந்த அவைக்கு, இழுத்து வரப்பட்டு, நிறைய மக்கள் இருக்கின்ற அவையில், அவள் துகிலுரியப்பட்ட பிறகு, ஒரு பெண்ணுக்கு வேறு என்ன நாணம் இருக்கின்றது? நீங்கள் பாதுகாத்ததுதான் என்ன? ஆபத்தில், நெருக்கடியில் இருக்கும் போது, நீங்கள் ஒருவரைக் காப்பாற்றும் போது கூட, உங்களை ‘ஆபத் பாந்தவா’ என்று அழைக்க முடியும். நீங்கள் ஆபத்தில் இருக்கும் போது பாதுகாத்து உதவிடவில்லை என்றால், அதனால் என்ன பயன்? இது தான் தர்மமா? உத்தவா இந்த கேள்விகளைக் கேட்கும் போது, கண்ணீர் அவரது கண்களில் இருந்து விழுந்து வந்தன. இந்தக் கேள்விகள் எல்லாம் உத்தவாவுக்கு மட்டுமல்ல. மகாபாரதத்தை படிக்கும் நம் அனைவருக்குமான கேள்விகளும் கூட. நம்முடைய சார்பில், உத்தவா, கிருஷ்ணரிடம் ஏற்கனவே, கேட்டு விட்டார்.
 பகவான் கிருஷ்ணா சிரித்தார், “அன்பான உத்தவா, இந்த உலகத்தில் தர்மம் என்பது, ஒன்றே ஒன்று மட்டுமே; யாருக்கு விவேகம் இருக்கிறதோ, அவர்கள் வெற்றி பெறுவார்கள். (விவேகம் என்றால் அது முன் கணிப்பு மூலம் வருகின்ற புத்திசாலித்தனம் ஆகும்). துரியோதனனிடம் விவேகம் இருக்கும் போது, தருமரிடம் இது, குறைவாகவே இருந்தது; எனவேதான் தருமர், தோல்வியுற்றார். “
 உத்தவா இழந்து போனார்; குழப்பம் அடைந்து விட்டார். கிருஷ்ணர் தொடர்ந்தார்,“ துரியோதனனிடம் சூதாடுவதற்கு அதிக அளவுக்கு பணமும், இன்னமும் செல்வமும் இருந்தும் கூட, அவனுக்கு அந்தக் காய்களை வைத்து விளையாடுவதற்குத் தெரியாது. எனவேதான், அவன் தன்னுடையை மாமா சகுனியை வைத்து விளையாடச் செய்தான். அதுதான் விவேகம். தருமரும் இதே போல, நினைத்து, என்னை, அவரது மைத்துனனை, அவருக்குப் பதிலாக விளையாடச் செய்திருக்க வேண்டும். சகுனியும், நானும் பகடை விளையாடி இருந்தோம் என்றால், யார் வெற்றி அடைந்து இருப்பார், என்று நீ நினைக்கின்றாய்? நான் கேட்கிற எண்களை சகுனியால், உருட்டி இருக்க முடியுமா? அல்லது அவர் கேட்கிற எண்களை நான் உருட்டுவேனா? இதை மறந்து விடுங்கள். என்னை விளையாட்டில், சேர்க்காமல் இருப்பதைக் கூட நான் மன்னிக்க முடியும். ஆனால் விவேகம் இல்லாமல், தருமர், இன்னொரு தவறையும் செய்தார். நான் அந்த அவைக்கு வர வேண்டாம் என்று பிரார்த்தனை செய்தார். நான் வருவதை அவர் விரும்பவில்லை. மோசமான விதி, அவரை இந்த விளையாட்டை விளையாடுபடி செய்து விட்டதை, நான் அறிந்திடக் கூடாது என்று தருமர் விரும்பினார். அவருடைய பிரார்த்தனையால், நான் அந்த அவைக்குள் நுழைந்து விடாத படி என்னைக் கட்டிப் போட்டு விட்டார்கள். நான் சற்றே அந்த அவைக்கு வெளியே காத்துக் கொண்டு இருந்தேன்; யாராவது அழைப்பார்கள், அவர்களுடைய பிரார்த்தனை மூலமாக வேண்டுவார்கள், என்று காத்திருந்தேன்.
 பீமன், அர்ச்சுனன், நகுலன் மற்றும் சகாதேவன் என இவர்கள் அனைவரையும் இழந்து விட்ட பிறகும் கூட, அவர்கள் துரியோதனனை சபித்துக் கொண்டும், இன்னும் அவர்தம் விதியைப் பற்றி சிந்தித்துக் கொண்டு மட்டுமே இருந்தார்கள்; என்னை அழைப்பதற்கு, அவர்கள் மறந்து விட்டார்கள். திரெளபதியும் கூட துச்சாதனன், அவளது முடியை பிடித்து இழுத்துக் கொண்டு வரும் போது கூட, என்னை அழைக்கவில்லை. இறுதியாக, நல்ல உணர்வு தோன்றியது; துச்சாதனன் துகில் உரிய ஆரம்பிக்கும் போதுதான். அவளுடைய சொந்த வலிமையைச் சார்ந்து இருந்ததை விட்டு விட்டாள்; மேலும் ‘ஹரி, ஹரி, அபயம் கிருஷ்ணா அபயம், என்று எனக்காக கத்தினாள். அதன் பிறகே எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவள் பெண்மையைப் பாதுகாக்கும் சந்தர்ப்பம். நான் அழைக்கப்பட்ட உடனே, நான் வந்து சேர்ந்தேன். நான் அவள் பெண்மையைக் காப்பாற்றினேன். இந்த சூழ்நிலையில், என்னுடைய தவறு என்ன?
 “ அதிசயத்தக்க விளக்கம், கிருஷ்ணா, நான் ஈர்க்கப்பட்டேன். எப்படியோ, நான் ஏமாற்றம் அடையவில்லை. உங்களிடம் நான் இன்னொரு கேள்வி கேட்கலாமா?“ என்று உத்தவா கேட்டார்.
 கிருஷ்ணர் அவருக்கு , தொடர்ந்து கேட்பதற்கு அனுமதி கொடுத்தார்.“ உங்களை அழைத்தால் மட்டுமே, நீங்கள் வருவீர்கள் என்பதுதான், இதன் பொருளாகிறது அல்லவா? ஆபத்தில் இருக்கின்ற மக்களுக்கு நீங்கள் வந்து உதவி செய்து, நீதியை நிலைநிறுத்திட வேண்டும் அல்லவா?“ உத்தவா கேட்டார்.
 கிருஷ்ணர் புன்சிரிப்போடு கூறினார்,“ உத்தவா, இந்த வாழ்க்கையில், ஒவ்வொருவருடைய வாழ்க்கையும், அவர்தம் சொந்த கர்மாவின் அடிப்படையில் போய்க் கொண்டு இருக்கிறது. இதை நான் ஓடச் செய்ய முடியாது; இதில் நான் தலையீடு செய்திடவும் முடியாது. நான் ‘சாட்சியாக’ மட்டுமே இருக்க முடியும். நான் உன் அருகில் நெருக்கமாக நின்று என்னவெல்லாம் நடக்கின்றது என்பதை உற்றுக் கவனித்துக் கொண்டும் கூட இருக்கலாம். அதுதான் கடவுளின் தருமம்.“ கிருஷ்ணர் கூறினார்.  
 “ ஆஹா, மிகவும் நல்லது கிருஷ்ணா. இவ்வாறாக எங்களுக்கு அருகில், நீங்கள் நெருக்கமாக நின்று எங்களது தீய செயல்கள் அனைத்தையும், கவனிக்க முடியும்; நாங்கள் அதிகமாக இன்னும் அதிகமாக, பாவச் செயல்களை செய்து கொண்டு இருக்கும் போது, நீங்கள் எங்களைக் கவனித்துக் கொண்டு இருப்பீர்கள். நீங்கள் விரும்புகிறீர்களா; நாங்கள் அதிக தவறுக்கு ஆளாவதையும், நாங்கள் பாவம் மற்றும் கஷ்டங்களை அதிகமாக சேகரிப்பு செய்வதையும் விரும்புகிறீர்களா? “என்றார் உத்தவா.
 கிருஷ்ணர் கூறுகிறார்,“ உத்தவா, தயவு செய்து உன்னுடைய வாக்கியங்களின் ஆழமான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவும். நான் உனக்கு அடுத்ததாக, சாட்சியாக நிற்கும் போது, உன்னால் எந்த ஒன்றையும் தவறாகவோ அல்லது மோசமாகவோ செய்ய முடியுமா? நிச்சயமாக உன்னால் மோசமானவற்றை செய்ய முடியாது. இதை நீ மறந்து விடு; எனக்குத் தெரியாமல், எதையாவது நீ செய்தால், அப்போது நீ துன்பத்திற்கு ஆளாகிறாய். தருமருடைய அறியாமை, அதாவது அவர் நினைத்தார், அந்த சூதாட்ட விளையாட்டை நான் அறியாமல் விளையாட நினைத்தார். நான் எப்போதும், எல்லோருக்குள்ளும் சாட்சியாக, அதாவது அந்த வடிவத்தில் இருக்கிறேன், என்பதை தருமர், உணர்ந்திருந்தால், பிறகு அந்த சூதாட்ட விளையாட்டு வித்தியாசமான ஒன்றாக முடிந்து இருக்கும் அல்லவா?”
 உத்தவா மந்திரத்தால் கட்டுண்டவர் போலானார். பக்தியால் நிரம்பி வழிந்தார். அவர் கூறினார்,“ என்ன ஒரு ஆழமான தத்துவம். என்ன ஒரு சிறந்த ஆழமான உண்மை! பூஜைகள் மற்றும் வழிபாடுகள் கடவுளுக்கு செய்து, அவரை உதவிக்கு அழைப்பது எல்லாம் ஒன்றுமே இல்லை. ஆனால் நம்முடைய உணர்வுகளும் நம்பிக்கையும்தான். அவரின்றி, எதுவுமே அசையாது, என்று நாம் நம்பத் தொடங்கும் போது, நம்மால் எவ்வாறு அவரது இருப்பை சாட்சியாக உணர முடியாமல் போகும்? எவ்வாறு நாம் மறந்து மேலும் செயல்பட முடியும்? “
 பகவத் கீதை முழுவதுமாக, இதுவே தத்துவமாக கிருஷ்ண பகவான் அர்ச்சுனருக்குக் கொடுத்தது. அவர் அர்ச்சுனருக்கு, தேரோட்டி மட்டுமல்ல அதை விட சிறந்த வழிகாட்டியுமாக இருந்தார்; ஆனால், அவர் சொந்தமாக சண்டை போடவில்லை.
 என்னை நீங்கள் வெற்றி கொள்வதற்கான ஒரே வழி, அன்பின் மூலமாக மட்டுமே; மேலும் அங்கே நான் மகிழ்ச்சியாக பிடித்துக் கொள்ளப் படுவேன்.”-- பகவான் கிருஷ்ணர். 
*“கடவுளைப் பற்றி என்ன சொல்லப்பட முடியும்? அவர் அனந்தம் ஆனவர். நாம், வரம்புக்கு உட்பட்ட விஷயங்கள் பற்றி நூல்கள் எழுதிட இயலும். ஆனால், அனந்தம் என்பது பற்றி, ஒரு வார்த்தை கூட, நாம் சொல்வதற்கு இல்லை.“.*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேர்தல் பணி

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

அப்பாவும் மகளும்