*“முழுமையான தன்மை மாற்றத்திற்கான முதல் நிபந்தனை என்றால், அது எது?”*
*வெறுமை*
முன்னொரு காலத்தில், ஒரு இளைஞன், ஒரு (மேஸ்ட்ரோ) இசை மேதையைத் தேடிக் கொண்டு இருந்தான்; இசையில் நிபுணர் ஆக வேண்டும் என்பது அவனது ஆசை; அவனுக்கு மாபெரும் இசை ஆசிரியர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு நேர்ந்தது. அவரைப் போய் சந்தித்துப் பேசினான்,
நீங்கள் இசைக்கான ஒரு மாபெரும் ஆசிரியர். இசையில் நிபுணத்துவம் அடைந்திட வேண்டும் என்பது, என்னுடைய தீவிரமான ஆசை. சொல்வதானால், உண்மையாக ‘மியூசிக் என்பதே எனது வாழ்க்கை. ஆகவே, உங்களை, தயவு கூர்ந்து, எனக்கு இசையைப் பயிற்றுவிக்கும் படியாக, வேண்டுகிறேன்.”
பிறகு, இசை ஆசிரியர் சொன்னார்,“ என்னிடம் இருந்து அந்த அளவுக்கான, கற்றுக் கொள்ளும் ஆர்வம், உனக்கு உண்டு என்றால், அப்போது, நான் உறுதியாக உனக்குப் பயிற்றுவிக்கிறேன்.
இசை மேதையிடம் இளைஞன் கேட்டான், “இதற்காக, நான் பதிலுக்கு என்ன தந்திட வேண்டும்? என்று.
ஆசிரியர் சொன்னார், ரொம்ப இல்லை! 100 தங்க நாணயங்கள் மட்டும்
எனக்குக் கொடு!”
“ 100 தங்க நாணயங்கள்!”, அது மிகவும் அதிகம்; எனக்கு இசை பற்றிய ஞானம் ஏற்கனவே உண்டு.….. பரவாயில்லை;“ நான் உங்களுக்கு 100 தங்க நாணயங்கள் கொடுக்கிறேன்.”
இதற்கு ஆசிரியரின் பதில், ஏற்கனவே உன்னிடம் கொஞ்சம் இசை தொடர்பான அறிவு உண்டு என்றால், அதன் பிறகு, நீ 200 தங்க நாணயங்கள் தர வேண்டி இருக்கும்.”
இளைஞன், பெரும் வியப்புடன் வினவினான்,“ மாஸ்டர், அது அதிக ஆச்சரியம்! ஒரு வேளை எனது புரிதலுக்கு அப்பாலும் இருக்கலாம். வேலை குறைந்திடும் போது, விலை எவ்வாறு அதிகமாகிறது?”
ஆசிரியர் பதில் சொன்னார்,“ வேலை குறைகிறதா, அது எவ்வாறு? முதலாவது, நான் உன்னை மறக்கச் செய்திட வேண்டும்; என்ன கற்றுக் கொண்டாயோ, நினைவில் உள்ள அதனை நீக்கியாக வேண்டும்; அதற்குப் பிறகுதான், நான் புத்தம் புதிய நிலையில் போதிக்க ஆரம்பிக்க வேண்டும்; ஒன்றைப் புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் – அது பயனுள்ளதாகவும், முக்கியமானதாகவும் இருக்கிறது என்றால், முதலாவதாக, செய்ய வேண்டியது, மனதை வெற்று நிலைக்கு கொண்டு செல்வது தேவை; அதனைத் தெளிவாக்கிட வேண்டும். இல்லை என்றால் புதிய அறிவை, அது, ஏற்று உள்ளீர்ப்பது என்பது இயலாது.“
உருவாக்கம் என்பது வளர்ச்சியுற வேண்டும் என்றால், தன்னை உணர்தல் சாத்தியம் ஆக வேண்டும். ஏனெ ன்றால், குறிப்பாக இது மிகவும் முக்கியமானது; காரணம் என்னவென்றால், “ஏற்கனவே நிரம்பி இருக்கும் கண்டெயினரில், இன்னும் வேறு எதனையும் போட்டு நிரப்புவது என்பது சாத்தியம் அற்றது.“அறிவு இல்லாமல் இருப்பது நல்லது; அரைகுறையான அறிவு கொண்டிருப்பதை விட! கற்றுக் கொள்ள வேண்டும் என்றால், வெறுமையானது எப்போதுமே தேவையாகும் என்றார்.
கருத்துகள்
கருத்துரையிடுக