குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் 1937ம் ஆண்டு நாவல் டாடா - சுனு தம்பதியினருக்கு பிறந்தவர் ரத்தன் டாடா. தனது 10 வயதில் பெற்றோரை பிரிந்து பாட்டியின் வீட்டில் வளர்ந்தவர், மும்பையின் கேம்பியன் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். கதீட்ரல் மற்றும் ஜான் கோனன் பள்ளிகளில் தனது படிப்பை முடித்தார். தொடர்ந்து ஹார்வார்டு பல்கலைகழகத்தில் தனது நிர்வாக மேற்படிப்பை 1975ம் ஆண்டு படித்து முடித்தார். படித்து முடித்ததும் இவருக்கு IBMல் வேலை கிடைத்தது. ஆனால், அவருக்கு அமெரிக்காவில் பணிபுரிவதில் விருப்பம் இல்லை. இந்தியாவில் தான் பணியாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இருந்த ரத்தன் டாட்டா அதே ஆவலுடன் தாய்நாடு திரும்பினார். அதனையடுத்து தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். சொந்த நிறுவனத்தில் சேர்ந்துவிட்டோம் என உடனே அவர் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அடிப்படையான சிறிய பொறுப்புகளிலிருந்தே தன்னை வளர்த்துக்கொண்டவர். சிறிய பொறுப்புகளில் பணிபுரிந்து நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டதால், உழைப்பின் அருமையும், அதிலிருக்கும் கஷ்டத்தையும் அடிமட்டத்தில் அற
கோ1 தமிழ்
Tamil blog from Co1