நம் அனைவருக்குமே, வாழ்க்கையில் சில சமயங்களில் மகிழ்ச்சி, மேலும் சில சமயங்களில் வருத்தம், சில நேரங்களில் கஷ்டங்கள், மேலும் சில நேரங்களில் அமைதி ……… இவை எல்லாம் போய்க் கொண்டே இருக்கும். ஆனால் எல்லா சூழ் நிலைகளிலும், நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது.
ஒரு இனிமையான காலைப் பொழுதில், ஒரு வயதான மனிதரும், அவரது பேரனும் ஒரு ஏரியின் அருகில் உட்கார்ந்து இருந்தார்கள். அவர்கள் இருவரும் பாசத்தோடு பேசிக் கொண்டு இருந்தார்கள். அந்த வயதான தாத்தா, சாதாரண உரையாடல் மூலமாக, தன்னுடைய பேரனுக்கு, வாழ்க்கையின் பாடத்தை கற்பித்துக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். மிக அன்போடு அந்தப் பேரன் தாத்தாவிடம், “தாத்தா, தயவு செய்து ஒரு கதை கூறுங்கள்”என்று கேட்டான். அந்த வயதான மனிதர் புன் சிரிப்போடு கூறினார், “ இன்று, என்னுடைய மனதில், ஒரு சிறிய கதை ஓடிக் கொண்டு இருக்கிறது. “
அந்தப் பேரன் மிகவும் ஆர்வத்தோடு கேட்டான், “அது என்ன? “பிறகு தாத்தா பதில் கூறினார், “ எனக்குள் ஒரு போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது”.
இரண்டு ஓநாய்களுக்கு இடையே…….. ஒரு கொடூரமான சண்டை ……. அந்தப் பேரன் கேட்டான், “தாத்தா, அது எந்த மாதிரியான சண்டை நடந்தது ?”
பிறகு தாத்தா விளக்கினார், “ ஒரு ஓநாய் முழுவதுமாக தீமை, கோபம், வருத்தம், பேராசை மேலும் அகங்காரம் இவற்றால் நிறைந்திருந்தது. அடுத்த ஓநாய் நல்லவை, ஆனந்தம், அமைதி, அன்பு, இரக்கம் மேலும் பற்றுறுதி இவற்றால் நிறைந்திருந்தது. இவை இரண்டுக்கும் நடுவில் சண்டை நடந்து கொண்டே இருந்தது. “
தாத்தா தொடர்ந்தார், “பேரனே, இந்த மாபெரும் யுத்தம் உன்னுள்ளேயும் போய்க் கொண்டு இருக்கிறது, மேலும் உலகத்தில் உள்ள அனைவருள்ளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது”. பிறகு அவர் சிறிது நேரம், அமைதியாக இருந்தார்.
திடீரென்று, அந்தப் பேரன் ஒன்றுமே அறியாதவனாக, மேலும் ஆர்வத்துடன், “தாத்தா, எந்த ஓநாய் யுத்தத்தில் வெற்றி பெற்றது?” என்றான்.
தாத்தா, புன் சிரிபோடு கூறினார், நாம் எதை ஊட்டி மேலும் எதை வளர்த்துக் கொண்டு இருக்கிறோமோ, அதுதான் வெற்றி பெறும், என் அன்புப் பேரனே.
நல்லது, தீயது என்ற இரண்டு ஓநாய்களில் நாம் எதை வளர்க்கிறோமோ அது வெற்றி பெறும். நாம் அனைவருமே வாழ்க்கையில் பலவிதமான சூழ்நிலைகளின் வழியாக போய்க் கொண்டு இருக்கிறோம். அப்போது நாம் எது நல்லது, எது கெட்டது, என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும், நாம் எந்த சூழ்நிலையை வளர்த்து, நமக்காக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை, முடிவாக நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக