என் வாழ்க்கையில் நான் முதன் முதலாக தயாரித்த எலுமிச்சம் பழ ஜுஸ் பற்றி நான் இப்போதும் முழுமையாக, தெளிவாக ஞாபகத்தில் வைத்து இருக்கிறேன்!
எவ்வளவு சாறு தேவையோ, அதே போல் 5 மடங்கு சாற்றினை தண்ணீரில் கலந்து விட்டேன். முடிவில் அது முழுவதுமாக வீணாகப் போய் விட்டது. ஆனால் எப்படியாவது அதை சரியாக்க வேண்டும் என முடிவெடுத்தேன்!
தண்ணீரில் இருந்து எப்படி எலுமிச்சம் பழச் சாற்றினை எடுத்து அந்த பானத்தை நேர்த்தியான சுவைக்குக் கொண்டு வருவது என விரும்பி முயன்றேன். ஆனால் ஐயோ, என்னால் முடியவே இல்லை …..சில விஷயங்களை எப்போதுமே செய்ய முடிவது இல்லை. சிலவற்றை ஒரு போதுமே மாற்ற முடியாது. தண்ணீரில் இருந்து அதிகப்படியான எலுமிச்சம்பழச் சாறை எடுப்பது பற்றி நான் சிந்திப்பதற்கான வழியே இல்லை.
ஆகவே, இதற்கான தீர்வுதான் என்ன? இந்த ஜுஸை சம நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றால், அதனுடன் 5 கிளாஸ் தண்ணீரை சேர்த்து, அதிகப் படியான எலுமிச்சம்பழச் சாறை நீர்க்கும்படி செய்து, 5 கிளாஸ் எலுமிச்சம்பழச் சாறை புத்தம் புதியதாக கொண்டு வரலாம். இது ஒன்றுதான் சரியான வழி.
மேலும் இது என்னை சிந்திக்க வைத்தது……… இந்த மாதிரியான நேரங்கள் வரும் போது, அப்போது நம்மால் சிலவற்றை பழைய நிலைக்கு கொண்டு வர முடியாமல் போகலாம், சிலவற்றை மாற்ற முடியாமல் போகலாம், அல்லது நமது வழிக்கு வரவைக்க முடியாமல் போகலாம். நாம் எவ்வளவுதான், முயற்சி செய்தாலும் பரவாயில்லை, நாம் எவ்வளவுதான் விரும்பினாலும் பரவாயில்லை. சில தவறான முடிவுகள், தவறான தெரிவுகள், தவறான முதலீடுகள், தவறான செயல்கள், தவறான தொடர்புகள், தவறான வார்த்தைகள் அல்லது தவறாக செய்து கொண்டு இருப்பவை என்று எப்போதும் அங்கே இருக்கத்தான் செய்யும்; நாம் மனிதர்களாக இருக்கிறோம், மேலும் தவறு செய்வது மனிதப் பண்பு!
பிறகு அடுத்தது என்ன?
சிலவற்றை மாற்ற முடியாத போது, முன்பு நடந்ததைப் பற்றியே புலம்பிக் கொண்டு இருப்பது பயனற்றது. இது தண்ணீரில் இருந்து எலுமிச்சம்பழச் சாறை எடுக்க முயன்றது போன்ற தோல்வியான முயற்சியாகும்! இந்த மாதிரியான நிகழ்வுகளில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், அதை ஏற்றுக் கொண்டு அப்படியே சென்று கொண்டு இருக்க வேண்டும். பதிலாக, நாம் நம் வாழ்வில் மிக நல்ல செயல்களை செய்வதில் சுறுசுறுப்பாக ஈடுபடும் போது இந்த தவறான செயல்கள் முக்கியத்துவமற்றதாகப் போய்விடும்! நம்மிடம் அழகான எதிர்மறைகள் நமக்கே என உள்ளன. நம்மிடம் உள்ள குறைபாடுகளை நம்மால் இல்லாமல் ஆக்க முடிவதில்லை. ஆனால் ,
நம்மால் உறுதியாக நேர்மறைகளை நம் வாழ்வில் சேர்த்துக் கொள்ள முடியும். அதன் பிறகு நம்மையும், நம்மைச் சுற்றியும் உள்ள எதிர்மறைகளை நீர்த்துப் போகச் செய்ய முடியும்.
நாம் நமது வாழ்க்கையில், சாதாரண மனிதர்களுடனும், குழப்பமான மனிதர்களுடனும் பழகும் சந்தர்ப்பம் நமக்கு கிடைக்கிறது. நம்மை மாதிரியே அடுத்தவர்களையும் மாற்ற முயற்சி செய்வதில், நம் நேரத்தை வீணாக்கக் கூடாது பிறகு நாம் உணர்ச்சிகளுக்கு ஆளாகி நம் சக்தி முழுவதும் வீணாகிப் போய்விடும். இதற்குப் பதிலாக, நமக்கு நல்ல மதிப்பு உள்ளதையும், ஒளிமிக்க பாதையையும் காட்டும் மக்களை நோக்கி நம் கவனத்தை குவித்து, அவர்களுடன் நமது நேரத்தை அதிகமாக செலவிட வேண்டும்.
வாழ்க்கையில் எல்லாமே முழுமையாக, நேர்த்தியாக இருக்க முடியாது. அதைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டே, நம் சக்தியை வீணாக்குவதை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாக நமது சக்தியை நம்புவதற்கு, உருவாக்குவதற்கு, பற்றுறுதியை வளர்ப்பதற்கு, ஒளிரச் செய்வதற்கு, வெளிப்படுத்துவதற்கு, மேலும் குணப்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டும்.
நல்லவற்றை செய்து கொண்டு இருப்பதில் நாம் சுறுசுறுப்பாக இருப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக