கடலின் நடுவில் இருக்கும் தீவு ஒன்றில், ஒரு முறை ஒரு கூட்டமாக பருந்துகள் வந்து சேர்ந்தன. அந்தக் கடலில் நிறைய மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்தன. இந்தக் காரணத்தால், அந்தப் பருந்துகளுக்கு உணவு, தண்ணீர் பற்றாக்குறை இல்லவே இல்லை. அந்தத் தீவில் பருந்துகளைத் தாக்கும் கொடூரமான வனவிலங்குகளும் இல்லை. இது அந்த பருந்துகளுக்கு மிகவும் சிறந்ததாக இருந்தது.
இந்த மாதிரியான வசதியான வாழ்க்கையை அந்தப் பருந்துகள் ஒரு போதும் இதற்கு முன்னால் வாழ்ந்தது இல்லை. எனவே பருந்துகள் மிகவும் மகிழ்ச்சியாக அங்கு இருந்தன. அந்தப் பருந்துக் கூட்டத்தில் அதிகமானவை இளம் பருந்துகள்தான். இந்த மாதிரியான ஒரு வசதியான வாழ்க்கையை நாம் எங்கு சென்றாலும், கண்டு பிடிக்க முடியாது. எனவே, நம் வாழ்க்கையின் மீதிப் பகுதியை இங்கேயே கழித்து விடுவோம் என்று அந்த இளம் பருந்துகள் நினைத்தன.
அந்தக் கூட்டத்தில் ஒரு வயதான பருந்து இருந்தது. அந்த இளம் பருந்துகளையும், அவர்கள் எண்ணத்தையும் அறிந்த போது, அந்த வயதான பருந்து வருத்தம் அடைந்தது. ஒரு நாள், அந்த வயதான பருந்து எல்லா இளம் பருந்துகளையும் அழைத்து, தன்னுடைய கவலையை வெளிப்படுத்தியது. “நாம் இந்த தீவுக்கு வந்து, வாழ்ந்து கொண்டு இருப்பது வெகு காலம் ஆகி விட்டது. நாம் எந்த காட்டில் இருந்து, வந்தோமோ, அதற்கே திரும்பப் போய்விடலாம் என்று நான் நினைக்கின்றேன். எந்தவிதமான சவால்களும் இல்லாமல் நாம் இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அப்படிப் பட்ட சூழ்நிலைகளில் நம்மால் கஷ்டத்தை ஒரு போதும் எதிர்கொள்ள முடியாமல் ஆகி விடும்.
அந்த வயதான பருந்து கூறிய வார்த்தைகளுக்கு அந்த இளம் பருந்துகள் செவி சாய்க்கவே இல்லை. வயதானதால், முட்டாள்தனமாக ஏதோ கூறுவதாக நினைத்துக் கொண்டன. வசதியான இந்த வாழ்க்கையை விட்டுவிடுவதற்கு அந்த இளம் பருந்துகள் மறுத்தன.
அந்த வயதான பருந்து அந்த இளம் பருந்துகள் அனைவரிடமும் விளக்கமாகக் கூற முயற்சி செய்தது, மேலும் கூறியது: “ நீங்கள் அனைவரும் நான் சொல்வதைக் கவனிக்கா விட்டால், நீங்கள் பறப்பதைக் கூட மறந்து விடுவீர்கள். ஏனெனில், நீங்கள் வசதியான வாழ்க்கைக்கு மாறிவிட்டீர்கள். அதற்கு பழக்கப்பட்டு விட்டீர்கள். சில சமயங்களில் உங்களுக்கு ஒரு பிரச்சனை வருகிறது என்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் என்னுடன் வந்து விடுங்கள். “ ஆனால் யாருமே இதைக் கவனிக்கவே இல்லை. அந்த வயதான பருந்து தனியாகக் கிளம்பியது. மேலும், அந்த பழையக் காட்டிற்கு தன்னந்தனியாகவே திரும்பி வந்தது.
சில மாதங்கள் கடந்தன. அந்த தீவில் வாழும் பருந்துகளைப் போய்ப் பார்க்கலாம் என்று அந்த வயதான பருந்து நினைத்தது. அந்த இளம் பருந்துகள் வசித்துக் கொண்டு இருக்கும், அந்த தீவை அடைந்தது. அங்கு சென்றதும், முற்றிலும் மாறுபட்ட காட்சியை அந்த வயதான பருந்து பார்த்தது. பருந்துகளின் இறந்த உடல்கள் அங்கே எல்லா இடங்களிலும் சிதறிக் கிடந்தன. அவற்றின் நிறைய உடல்கள் இரத்தத்தால் சூழப்பட்டும், மேலும் நிறைய உடல்கள் காயம் அடைந்தும் கிடந்தன.
இதைப் பார்த்து அந்த வயதான பருந்து, அதிர்ச்சிக்கு உள்ளாகியது. காயம் அடைந்த ஒரு பருந்திடம் சென்று, “என்ன நடந்தது?” என்று விசாரித்தது. அந்தப் பருந்து, “நீங்கள் இங்கிருந்து போன பிறகு, நாங்கள் இந்த தீவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருந்தோம். ஆனால், ஒரு நாள் ஒரு கப்பல் இங்கு வந்தது. அந்தக் கப்பலில் இருந்து சிறுத்தைகள் இந்த தீவில் விடப்பட்டன. முதலில் சிறுத்தைகள் ஒன்றுமே செய்ய வில்லை. ஆனால் ஒரு சில நாட்கள் சென்ற பிறகு, நாங்கள் பறப்பதை மறந்து இருப்பதும், மேலும் எங்கள் நகங்கள் மிகவும் மெலிந்து இருப்பதையும் எங்களால் யாரையும் தாக்கவும் முடியாது மேலும் எங்களால் எங்களையே காப்பாற்றிக் கொள்ளவும் முடியாமல் இருப்பதையும் அந்த சிறுத்தைகள் உணர்ந்து கொண்டன. ஆகவே, அவைகள் எங்களை தாக்க ஆரம்பித்தன, எங்களை சாப்பிடத் தொடங்கின. அப்படி இருப்பதால், எங்களுக்கு இந்த நிலைமை வந்து விட்டது. நீங்கள் கூறியதை கவனிக்காமல் இருந்ததால், நாங்கள் இந்த கதிக்கு ஆளாகி விட்டோம்”என்று கூறியது.
இப்போதுள்ள கால கட்டத்தில், நாம் எப்போதும் வசதியான வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டும், அதிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறோம். நமக்கும், நமது குடும்பத்திற்கும் வசதியான நிலையைக் கொடுக்க நாம் எல்லாவற்றையும் செய்கிறோம். ஆனால், நாம் ஒன்றைப் பற்றி, எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த வசதியான வாழ்க்கையிலேயே எப்போதும் தங்கி இருக்கும் நம் குடும்பத்தினருக்கு நாம் உண்மையில் அவர்களை, தயார் பண்ணி இருக்கின்றோமா? எதற்கென்றால், எதிர்காலத்தில் வரும் சவால்களை சமாளிக்க! இல்லை என்றால், வசதியான வாழ்க்கையால் அவர்களை வலுவிழக்கச் செய்து விட்டோமா?
கருத்துகள்
கருத்துரையிடுக