ஸ்ரீதர் வேம்பு.. உலகப் புகழ் பெற்ற 18000 கோடி டாலருக்கு சொந்தமான “ஸோஹோ கார்ப்பரேஷனின் (Zoho Corporation ) ”, தலைமை நிர்வாக அதிகாரி ( C E O) . ஏதோ, இந்த மென்பொருள் நிறுவனம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கில் இப்போது இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். அங்கு தான் இருந்தது. அதன் தலைமையகத்தை, 2019ஆம் ஆண்டு அக்டோபரில், தென்காசிக்குப் பக்கம் இருக்கும் “மத்தளம்பாறை” என்னும் தன் கிராமத்துக்குக் கொண்டு வந்து விட்டார் இந்த மஹாமனிதர். இப்போது, ஒரே வருஷத்தில், இந்த நிறுவனம், சுமார் 3410 கோடி டாலர் லாபம் அடைந்ததைக் கண்டு, தொழில் நுட்ப வல்லுநர்கள், வியந்து போய் இருக்கிறார்கள். மிகப் பெரிய தொழில் ஸ்தாபனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஸ்ரீதர் வேம்பு போவது சைக்கிளில் தான். சாப்பிடுவதும், டீ அருந்துவதும், கிரிக்கெட் விளையாடுவதும் கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளுடன் தான். கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளைத் திரட்டி, 4 ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கு நவீன கணினிப் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறார். நவீன மருத்துவமனை, சாக்கடைகள், குடிநீர்வசதி, நீர்ப்...