தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப, நாமும் நம்மை அப்டேட் செய்து கொள்வது நல்லது. அப்போதுதான், முன்னேறி வரும் தொழில்நுட்ப உலகில் நமக்கான அங்கீகாரத்தை பெற முடியும். உதாரணத்திற்கு... 20 ஆண்டுகளுக்கு முன்பு, பணம் கொட்டும் ஐ டி துறை படிப்பாக இருந்த சி மற்றும் சி++ மென்பொருள் திறன்கள் இன்று, அடிப்படை படிப்புகளாக மாறிவிட்டன. அதேசமயம் 20 வருடங்களுக்கு முன்பு, ஐ டி துறையே அறிந்திராத ஏ ஐ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்று ஐ டி துறையையும், ஒட்டுமொத்த தகவல் உலகையுமே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த முன்னேற்றம், சிலரது வேலைகளை பறித்துவிடுகிறது. பலருக்கும் புதுமையான வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கிறது. இத்தகைய போட்டி உலகில், உங்களை நிலைநிறுத்த எதிர்கால சிந்தனை அவசியம். குறிப்பாக, எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கும் தொழில்நுட்பங்களை கற்றறிந்து, அது சார்ந்த துறையில் முன்னேற வேண்டும். அப்போதுதான், வளமான எதிர்காலம் அமையும். அப்படி, எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கும் சில துறைகளை பற்றியும், அதில் இருக்கும் படிப்புகளை பற்றியும் அறிந்து கொள்வோம். ஏ ஐ செயற்கை நுண்ணறிவு செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ ஐ (A...
Tamil blog from Co1